வெள்ளி, 14 ஜூன், 2019

ஆடிட்டர்களின் நம்பிக்கையிழப்பு, ஏஜென்சிகளின் போலி ரேட்டிங்

கடந்த சில நாட்களாக YES BANK பங்கு அருவி நீர் போல் கீழே விழுந்து கொண்டு இருக்கிறது.


DHFL கடன் பத்திரங்களுக்கு வட்டி கூட கொடுக்க முடியவில்லை.

ILFS 90,000 கோடி அளவிற்கு கடன்.
ஆனால் இவை எல்லாவற்றிகும் பொதுவான ஒன்றாக பார்த்தால்,

ஒரு வருடம் முன்பு வரை ஏஜென்சிகளின் ரொம்ப பாதுகாப்பான நிறுவனம் என்று தரம் கொடுத்து இருந்தார்கள்.

ஆடீட்டர்கள் உத்தம புத்திரன் என்று வருட சான்றிதழ் கூட கொடுத்து இருந்தார்கள்.

ஆனால் இன்று எல்லாவற்றிலும் வீழ்ச்சி, இன்னும் எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை.


எவர் சொல்வதை நம்புவது என்பதில் கூட குழப்பம்.

ஒரு முதலீட்டாளனாக இன்று யோசிக்கிறேன். அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட நம்ப முடியவில்லை.

அவர்களை விட்டு PwC போன்ற ஆடிட்டிங் நிறுவனங்கள் கூட விலகல் கடிதம் கொடுத்து விலகி விட்டார்கள். செபி அதனை விசாரித்துக் கொண்டு இருக்கிறது.

அதிலும் ILFS நிறுவனம் ரேட்டிங் கொடுக்கும் ஏஜென்சியின் பணியாளருக்கு வீடு வாங்கி கொடுத்து லஞ்சம் கொடுக்கும் நிலைக்கு சென்று விட்டது.

இன்னும் என்னென்ன வேலை பார்த்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.

உண்மையில் நாம் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் என்ற நிலையில் இருந்தால் எதை நம்புவது என்று தெரியாமல் விலகி இருக்கவே விரும்புவோம்.

அது தான் தற்போது பங்குசந்தையின் சரிவிற்கு காரனங்கூட...

பெரிய அளவு மருந்து நிறுவனமான Sun Pharma கூட ஒரு உண்மையான மேலாண்மை நிறுவனம் என்ற தகுதியை இழந்து விட்டது. நிதிகள் வேறு எங்கோ திருப்பி விடப்படுகின்றன.

ஒரு ஒற்றுமை என்னவென்றால்,

நாம் இந்த பதிவு எழுதுவது கூட ஒரு ஆடிட்டரின் அலுவலகத்தில் வைத்து தான்.

சொந்த நிறுவனம் ஒன்றிற்கு ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் அதன் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்பட்ட விரக்தியும் சேர்ந்தே வருகிறது.

ஆடிட்டர் என்பவர்கள் மருத்துவர்கள் போல, இருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலே தெரிவிக்க வேண்டும்.

மூடி மறைப்பதற்கு காசு வாங்கி விட்டு முதலீட்டாளர்கள் பணத்தை ஏப்பம் போடுவதற்கல்ல...

இந்தியா, நீ வளராவிட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் நம்பிக்கை இல்லாத நிலையை அடைந்து விடாதே! அப்புறம் வளரவே முடியாது!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக