செவ்வாய், 25 ஜூன், 2019

IndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா?

நேற்று ஜூன் 24 முதல் IndiaMart நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளையுடன் முடிவடைகிறது.


அதனை வாங்கலாமா? என்பது பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.



ப்ளிப்கார்ட், அமேசான் போல் இணைய வழியாக பொருட்கள் விற்கும் நிறுவனம் தான் IndiaMart.

ஆனால் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோர்களை விற்பவர்களுடன் இணைக்கிறது.

IndiaMart நிறுவனமானது மொத்த விற்பனையாளர்களுடன் சில்லறை விற்பனையாளர்களை இணைக்கிறது.


இதனை B2B மாடல் என்றும் அழைப்பார்கள்.

பொருட்களை விற்பவர்கள் சந்தா முறையில் இந்த இணையதளத்தில் இணைந்து இருப்பார்கள்.

அது தான் அந்த நிறுவனத்தின் முக்கிய வருமானமும் கூட.

இது வரை அவ்வாறு 50 லட்சம் விற்பவர்கள் இணைத்து இருக்கிறார்கள்.

ஒரு பங்கிற்கு 970 முதல் 973 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து உள்ளார்கள்.

கடந்த ஆண்டில் 548 கோடிக்கு வியாபாரம் செய்து உள்ளார்கள். அதில் 20 கோடி ரூபாய் லாபம் பார்த்து உள்ளார்கள்.

அப்படி என்றால் P/E 140 என்பதன் அருகில் வருகிறது.

ஆனால் இந்த வருடம் சில வரி போன்ற தன்மைகளால் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 18% மார்ஜின் இருந்து இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.

அந்த நிலையில் பார்த்தாலும் லாபம் 90 கோடிக்கு அருகில் வரும். P/E மதிப்பு 33 என்று வருகிறது.

இணைய தள வணிகம் முன்பு போல் வேகமாக வளருவது தடை பட்டுள்ளது.

அந்த நிலையில் இந்த P/E மதிப்பு கொஞ்சம் அதிகமானதாகவே பார்க்கப்படுகிறது.

அதனால் ஐபிஒவை தவிர்க்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக