வெள்ளி, 7 ஜூன், 2019

எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறும் ஓலா, உபர்...முதலீட்டிற்கு சில பங்குகள்

சில சமயங்களில் செய்திகளின் தாக்கங்களை முன்பே யூகித்து கொண்டால் பங்கு முதலீட்டில் லாபம் அதிகம் பெற முடியும்.


அப்படியான செய்தி ஒன்றை பகிர்கிறோம்.



அரசு ஒரு புதிய விதி முறையை கொண்டு வருவதாக சில யூகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதன்படி, வரும் 2026ம் ஆண்டிற்குள் ஓலா, உபர் போன்ற கால் டேக்ஸி நிறுவனங்கள் தங்களிடம் ஓடும் 40%க்கும் மேற்பட்ட வாகனங்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டுமாம்.

இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்றவற்றால் அதிக அளவில் அந்நிய செலாவணியை இழந்து வருகிறது.

இது போக, பாரிஸ் பருவமழை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதனால் புகையும் அதிக அளவு கட்டுக்கு கொண்டு வரக் கூடிய நிலைமையும் உள்ளது.


வாகனங்களின் புகையை எலெக்ட்ரிக் கார்கள் அதிக அளவில் உபயோகிப்பதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஆனால் ரீசார்ஜ் செய்ய பெட்ரோல் பங்குகள் போன்று எதுவும் இல்லாததால் செயல் முறைக்கு கொண்டு வருவதில் தடங்கல் அதிகம் உள்ளது.

அதனால் பெரிய அளவில் வாகன எண்ணிக்கையை கொண்டுள்ள ஓலா, உபர் நிறுவனங்களை நோக்கி முதலில் கவனம் செலுத்துவதாக தோன்றுகிறது.

அதாவது 2.5% வாகனங்கள் 2021க்குள்ளும், 5% வாகனங்கள் 2022க்குள்ளும், 10% வாகனங்கள் 2023க்குள்ளும் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும்.

இதற்கு தக்கவாறு சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுமாயின் நல்ல ரிடர்ன் எதிர்பார்ப்பில் பல பங்குகளை முதலீட்டிற்காக காணலாம்.

முதலில் ரீசார்ஜ் செய்வதற்கு பவர் ஸ்டேஷன்கள் தேவைப்படும். அதனால் டாடா பவர் போன்ற பங்குகள் பயன் பெறும்.

வாகனங்களில் அதிக அளவில் பேட்டரி தேவையை காணலாம். அதனால் Exide Batteries போன்ற பங்குகள் அதிக பலன் பெறலாம்.

எலெக்ட்ரிக் நாநோடுகள் தயாரிக்கும் Graphite India, HEG, Himadri போன்ற நிறுவனங்களின் பங்குகளும் அதிக பலன் பெறலாம்.

ஆனால் கொஞ்சம் முதலீடு செய்து அதிக பொறுமையுடன் இருக்க வேண்டும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக