வெள்ளி, 20 செப்டம்பர், 2019

வரிக்குறைப்பும், கொண்டாட்டங்களும்

இன்று நமது பங்குச்சந்தை பத்தாண்டுகளில் இல்லாத அளவு குத்தாட்டம் போட்டது.

எல்லாம், நிர்மலா சீதாராமன் அவர்களது ஒரு பேட்டி தான்.



கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை 30% அளவு லாபத்தில் வரி கட்டி வந்தார்கள். இனி இது 25% என்ற நிகர அளவில் குறையும்.

அதே போல், புதிதாக துவங்கும் ப்ராஜெக்ட்களுக்கு 15% அளவு வரி கட்டினால் போதுமானது.

அதனைத் தான் இன்று சந்தையின் பங்குகள் கொண்டாடி தீர்த்தன.

என்றாலும், அளவுக்கு மிஞ்சிய கொண்டாட்டம் போலே தெரிகிறது.


இந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி 1.75 லட்சம் கோடி ரூபாய் கொடுத்தது. மேல் சொன்ன வரி சலுகைகள் கொடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு 1.45 லட்சம் கோடி ரூபாய் என்பதாகும்.

அதில் கிட்டத்தட்ட 80% செலவழித்தாகி விட்டது.

ஏற்கனவே பட்ஜெட்டில் விழுந்த 1.75 கோடி ரூபாய் துண்டு இன்னும் துண்டாகவே இருக்கிறது.

வரிக்குறைப்பு கொடுத்த நிறுவனங்கள் உடனே வந்து முதலீடுகளைக் கொட்டி வேலை வாய்ப்புகளை கூட்டுவார்களா? என்பது சந்தேகமே. குறைந்தது ஒரு வருடமாவது ஆகலாம்.

நாம் இதனை எதிர்க்கவில்லை. வரிக்குறைப்பு தேவை தான். ஆனால்  இது தான் உடனடி தீர்வு என்று சொல்ல முடியாது.

தற்போதைய Slow Down என்பது நுகர்வோர் வாங்குவது குறைந்ததால் ஏற்பட்ட Consumer Sentiment தான்.

அதனை இந்த கார்பரேட் வரிக் குறைப்பு குறைக்குமா? என்பது சந்தேகமே.

அதற்கு இன்னும் ஒரு லட்சம் கோடி அளவு வேலை வாய்ப்பு தொடர்பான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவித்தால், நிதி பற்றாக்குறை என்பது 4.5% அளவு சென்றாலும் ஆச்சர்யமில்லை.

அந்த அளவிற்கு செல்ல கார்பரேட் நிறுவனங்கள் விடுவார்களா? என்பதும் சந்தேகமே.

அதனால் நாம் எமது Bear Market நிலையை இன்னவும் தொடர்கிறோம்.

இவ்வளவு களேபரத்திலும் FIIகள் இன்று வெறும் 36 கோடி ரூபாய் அளவு தான் வாங்கி உள்ளார்கள் என்பதையும் கவனிக்க.

அதனால் பெரிய அளவு Long Position அல்லது அதிக அளவு காசை சந்தைக்குள் கொண்டு வராமல் இருப்பது நல்லது.

வேலை வாய்ப்பு கூடி, Auto Sales விற்பனையும் கூடி GDP தரவில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் வரலாம்.

அது வரை காத்து இருக்கலாம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. Be it choosing the best financial option for the tax advantages or dealing with the seller directly to avoid the brokerage, the best way is registering the property jointly with the spouse! Not many people are aware of the financial benefits it holds.

    பதிலளிநீக்கு
  2. Agricultural and Processed Food merchandise Export Development Authority (APEDA) was established by the govt. of Bharat below the Agricultural and Processed Food merchandise Export Development Authority Act. The Act deals with the registration of persons as exporters of the scheduled merchandise on payment of such fees as could also be prescribed and fixing of standards and specifications for the scheduled merchandise for the aim of exports.
    https://vakilsearch.com/apeda-registration

    பதிலளிநீக்கு