செவ்வாய், 15 அக்டோபர், 2019

அடுத்து ரியல் எஸ்டேட் தேக்கம் ?

இது வரைக்கும் உற்பத்தி மற்றும் தொழில் துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் தான் வங்கிகளுக்கு தண்ணி காட்டி வந்தன.

அதனால் தான் வங்கிகளின் வாராக் கடன் விகிதமும் அதிகரித்து இருந்தது.



அரசு இந்த பிரச்சினை எல்லாம் குறைந்து இந்த வருடம் சரியாகி வரும் என்று எதிர்பார்த்து இருந்தது.

ஆனால் பிரச்சினை தற்போது வேறு வடிவத்தில் வந்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் வங்கிகளிடம் கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் பில்டர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.


இதே விகிதத்தில் அதிகரித்தால் இன்னும் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு வங்கிகளுக்கு வாராக் கடன் இருக்கும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் பில்டர்கள் மட்டும் இல்லாமல் பிளாட் போன்றவற்றை வாங்கி கடன் கட்டாமல் இருக்கும் தனி நபர் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தெரிகிறது.

ரீடைல் கடன்களில் கவனத்தை திருப்பும் வங்கிகளுக்கும் இது பிரச்சினை தான்.

இந்தியாவை பொறுத்த வரை ரியல் எஸ்டேட் குமிழ் என்பது எதிர்பார்த்தது தான்.

1991க்கு அப்புறம் நிலங்களின் விலையில் ஏற்பட்ட மெகா மாற்றங்கள் ஒரு முறை கூட கீழே வந்து திருத்தத்திற்கு உள்ளாக்கப்படவில்லை.

அதனால் இந்த குமிழின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கலாம்.

YES BANK மற்றும் IndusInd Bank போன்ற வங்கிகள் அதிக அளவு ரியல் எஸ்டேட் துறையில் கடன்கள் அளித்துள்ளதாக தெரிகிறது.

அதனால் இந்த பங்குகளை தவிர்க்கலாம்.

ஏற்கனவே ILFS, DHFL போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் திவாலாகி விட்டன.

தற்போது IndiaBulls நிறுவனமும் ஊழல் வழியாக சிக்கி உள்ளது.

ஏற்கனவே இதனை பற்றி விவரமாக கட்டுரை எழுதி இருந்தோம். நீதிமன்ற வழிக்காட்டுதலுக்கு இணங்க அந்த கட்டுரையை நீக்கி இருந்தோம்.

தற்போது அந்த தடை திரும்ப பெறப்பட்டு விட்டதால் மீண்டும் கட்டுரையை பொதுவில் வைக்கிறோம்.

பார்க்க: வெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்

இந்த IndiaBulls நிறுவனத்திற்கு மேற்சொன்ன YES BANK,IndusInd Bank போன்ற வங்கிகள் அதிக அளவு கடன் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

அதே போல் மேற்சொன்ன ஊழலில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் DLF போன்ற நிறுவனங்களையும் தவிர்க்கலாம்.

தற்போதுள்ள சந்தை சூழ்நிலையில் எந்த நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று ஒரு பட்டியல் எடுத்து விட்டால், முதலீடு செய்யும் நிறுவனங்கள் சொற்பமாகத் தான் மிஞ்சும்.

அப்படித் தான் இனங்கான வேண்டியுள்ளது. கவனமாக இருக்க!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. Yes bank has failed to got the confident on investors. Rana kappor did so many corruptions inside the bank when he was as CEO. On the time RBI is not extending his CEO tenure. That was the best time to understand about this bank. Now yes bank investors all are 90% loss. Shame on is

    பதிலளிநீக்கு
  2. Ji,
    Please write about investing in "Bank bonds".
    Is NRI eligible to invest?
    How to invest in online? or in icicidirect.com?
    please write in step by step guide.
    we are waiting
    by
    ur NRI blog follower.

    பதிலளிநீக்கு