புதன், 10 ஜூன், 2020

ரியல் எஸ்டேட்டும், ரேட்டிங் ஏஜென்சியும்

கடந்த இரு  வருடங்களாக  எமது பதிவுகளில் ஒரு நெகடிவ் பையாஸ் இருப்பது போல் தோன்றலாம். அதற்காக எதிர்மறை சிந்தனைகளுடன் தான் இந்த தளம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட 2013 முதல் எழுதிய கட்டுரைகளை பார்த்தால் மிக அதிக அளவில் பங்குச்சந்தை முதலீடுகளை நேர்மறை சிந்தனைகளோடு தான் அணுகி இருந்தோம்.  அந்த காலக்கட்டத்தில் சந்தையும் லாபத்தையே கொடுத்து இருந்தது.

அதன் பிறகு குமிழ் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் பங்குச்சந்தையை தவிர்க்கவுமளவு தான் அதிக பதிவுகள் வந்தன.பங்குச்சந்தையை பொறுத்தவரை தவறுகளை தவிர்த்து விட்டாலே பாதி வெற்றி தான். அந்த வகையில் எங்கெங்கு தவறுகள் இருப்பதை உணரும் அளவு கட்டுரைகள் கொடுப்பதும் கடமையாகிறது.

எமது முந்தைய சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்? கட்டுரையில் நண்பர் பார்த்திபன் அவர்களின் சில கருத்துக்களை பார்த்தால் சில்லறை முதலீட்டாளர்களின் ஏமாற்றங்களையம்  உணரலாம்.

அனைத்திற்கும் அப்பால் பங்குச்சந்தை என்பது எந்த திசையிலும் செல்லலாம். அதனால் எமது கட்டுரைகளையும் தாண்டி சுயமாக முடிவுகளை எடுக்குமாறு நண்பர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம். எமது கட்டுரைகள் எவையும் பரிந்துரைகள் அல்ல. படிப்பினை கட்டுரைகளே!

இனி இந்த கட்டுரையின் சாராம்சத்துக்கு வருவோம்.

நேற்று எமது அலுவலகத்தில் பணியாளர்களுக்கு சம்பள குறைப்பை அறிவித்து இருந்தனர். அதற்கு விளக்கமாக எல்லா செலவுகளையும் குறைக்க போகிறோம். அதன் ஒரு பகுதியாக அலுவலக இடத்தின் வாடகையும் குறைக்க பேசி கொண்டிருக்கிறோம் என்று Vice-President விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்..

இதே போல் எமக்கு தெரிந்த ஆடிட்டர் ஒருவர் அலுவலகமே வேண்டாம். எல்லாம் ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்.

இது தான் பெங்களூரில் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மை நிலை. பல மெட்ரோ நகரங்களிலும் இந்த நிலை இருக்கலாம். எல்லாம் Work From Home விளைவு தான்.

கொரோனாவிற்கு முன்னரே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஒன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கவில்லை. கட்டிய அபார்ட்மென்ட்களை விற்பதற்கு கனப்பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு வட்டியும் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அபார்ட்மெண்ட் விலை மட்டுமே குறையவில்லை.

கொரோனா வந்த பிறகு எல்லாம் மாறி விட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் ஒரு பதற்றம் வந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயில்  அவர்களே குறைந்த விலைக்காவது விற்று வெளியே வாருங்கள்! என்று சொல்லுமளவு தான் நிலைமை உள்ளது.

ஆனால் இன்று DLF நிறுவனத்திற்கு சில ரேட்டிங் நிறுவனங்கள் வாங்குவதற்கான பரிந்துரைகளை கொடுத்துள்ளன.

சரி. காரணங்களை உள்ளே சென்று பார்ப்போம் என்று பார்த்தால், DLF என்பது ஸ்ட்ராங்கான ப்ராண்ட். அதனால் எப்படியும் மீண்டு வருவார்கள் என்று பல டிப்ளமேடிக் கதைகள் தான் புனைய பட்டிருந்தது.

ராபர்ட் வதேரா, India Bulls வழியாக உள்ள வழக்குகள் எல்லாம் இந்த பிராண்டிற்குள் வரவில்லை போல. இது போக செபி வழக்கு வேறு உள்ளது. 

முன்பு அபார்ட்மென்ட் கட்டி விற்றுக் கொண்டிருந்த  DLF மால் மற்றும் கார்ப்பரேட் அலுவலக வாடகை வருமான முறைக்கு மாறி ஐந்து வருடங்கள் ஆகிறது. 

ஆனால் கடந்த மூன்று மாதமாக மால்கள் எல்லாம் மூடி இருக்கின்றன. இனி எப்பொழுது திறப்பார்கள் என்றும் தெரியாது. கார்ப்பரேட் அலுவலக வாடகையும் குறைய போகிறது. அதனால் வருமானம் ஒரு நிச்சயமற்ற நிலையிலே உள்ளது.

இது போக, கடந்த காலாண்டில் 1800 கோடி நஷ்டம் இருக்கிறது. லாக்-டவுன் இருந்த காலாண்டு முடிவுகள் அடுத்து தான் வரப்போகிறது. அதில் என்ன நிலை என்று தெரியாது. இது போக கடன் வேறு இருக்கிறது. 

தற்போது மீண்டும் அபார்ட்மென்ட்களை விற்க போகிறார்களாம். வாங்குவதற்கு எவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

ஆனால் இதையும் தாண்டி DLF இன்னும் 50% உயரும் என்று நமது ரேட்டிங் ஏஜென்சி நிறுவனங்கள் சொல்லியுள்ளார்கள். எதுவும்  நம்பும் படியாகவே இல்லை.

நம்பினால் தான் சோறு என்றால் இதே கட்டுரையை ஆறு மாதங்களுக்கு பின் மீள் பரிசீலனை செய்வோம். ரேட்டிங் ஏஜென்சி நிறுவனங்களின் பரிந்துரை பலித்ததா? என்பதையும் பார்த்து விடலாம்.

உங்கள் கருத்துகளையும் பகிர்க..

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. பெரும்பாலும் பங்குச்சந்தை என்பது பொதுமக்களின் மனநிலைக்கு எதிர்பதமாகவே இருக்கும். INTRADAY டிரேடிங்இல் இது தான் நடக்கிறது வாங்கி விற்பவர், விற்று வாங்குபவர் இவைகளில் எந்த பக்கம் அதிகமாக RETAILERS பணத்தை போட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பெரும் நஷ்டத்தையே கொடுக்கும்படி தான் OPERATORS செயல்படுவார்கள். INVESTMENTடும் அதே கதி தான். நாம் பங்குச்சந்தை உயராது என்று நினைத்தால் உயரும். உயரும் என்று நினைத்தால் உயராது. 23-MAR-2020 அன்று 850 ரூபாய்க்கு சென்ற RELIANCE பங்கு இரெண்டே மாதத்தில் 1600 வரை போகும் என்று யாராவது நினைத்து இருப்பார்களா? இல்லை 2.65 பைசாவுக்கு சென்ற IDEA பங்கு 12.50 செல்லும் என்று யாராவது கணித்து இருப்பார்களா? பெரும்பாலான மக்கள் கணிக்காத சமயத்தில் மக்கள் முதலீடு செய்யாத தருணத்தில் தான் ஒரு பங்கை இதுபோல குறுகிய காலத்திலலேயே ஏற்றி விளையாடுவார்கள். பங்குச்சந்தை என்பது நம்மை ஏமாற்றும் ஒரு அமைப்பு. அதில் நீந்த கற்றுக்கொண்டால் மட்டும் போதாது நம்மை நீரில் முக்கி மூழ்கியடிக்க நினைப்பவர்களையும் சமாளித்து நீச்சலடித்து நம் வெற்றியை பெறவேண்டும். ஒரு பங்கை OPERATORS எப்படி எடுத்துக்கொண்டு செல்வார்கள் என்று OPERATORரின் மனநிலையில் இருந்து நாம் சிந்தித்தால், பங்குசந்தையில் நாம் வென்று விடலாம். இல்லையென்றால் முதலீடு செய்துவிட்டு பத்துவருடங்கள் காத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு