ஞாயிறு, 7 ஜூன், 2020

சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்?

பல எதிர்மறை செய்திகள் வரிசையில் கட்டி நிற்க சந்தையானது கடந்த இரு வாரங்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 10000 நிப்டி புள்ளிகளை தொட்டு விட்டுள்ளது.

அனைவர் மனதிலும் உள்ள பொதுவான கேள்வி இது தான்.



இது தொடர்பாக நேற்றைய மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து என்ற பதிவில் நண்பர் சந்துரு  ஒரு கருத்தை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

கேள்வி இது தான்.

"Please provide an insight article about why market is rising despite big economic problem. Stimulus package was very bad in india compared with us and europe countries. I initially thought market will never touch 10000 in nifty atleast until this year. But looking now I am in deep confusion?"

அதற்கு நண்பர் தியாகராஜன் இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.

"Sir Reason is a trap of forign investers having lot of money buying and lifting the nifty so that they will book profits in unexpected time hammering the market plthink bank shares r going up not on performance that too having lot of NPAs Think before investing if it is hard earned My personal view Risk is urs"


எமது பதிலும் நண்பர் தியாகராஜன் அவர்களுடன் ஒத்து போகிறது.

முதலீடு தளத்தில் இவ்வாறான ஆக்க பூர்வமான உரையாடல்களை தொடர்ந்ததற்காக இருவருக்கும் எமது நன்றி!

முதலில் சந்தை பத்தாயிரம் புள்ளிகளை தொட்டாலும் இன்னும் உச்ச சந்தையில் இருந்து 25% தள்ளுபடியில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தாழ்வு நிலையில் இருந்து 10% மேலே வந்துள்ளது. இதனை Dead Cat Bounce என்று கூட சொல்லலாம்.

உயிருக்கு துடித்துக் கொண்டிருக்கும் பூனை மேலே கொஞ்சம் துள்ளி வருவது போல் சந்தையில் ஒப்பிடுகிறார்கள்.

நண்பர் சந்துரு சொன்னது போல, இந்தியாவில் கொடுக்கப்பட்ட கொரோனா ஊக்க நிதியானது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது ஒன்றும் இல்லாதது தான். அதனால் சந்தை அப்பொழுது அலட்டிக் கொள்ளவில்லை.

பார்க்க:
20 லட்சம் கோடிக்கு கணக்கு வந்தாச்சு..

ஆனால் மேலை நாடுகளில் கொடுக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகையானது.கொஞ்சம் அதிகமான தொகை தான். அது பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வழியாக தற்போது சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளது. அப்படித் தான் வளரும் இந்திய சந்தைக்கும் வந்துள்ளது. அதனால் தான் கடந்த பத்து நாட்களாக FIIகள் என்று சொல்லப்படும் Foregn Investors தொடர்ந்து Net Buyers என்ற நிலையில் இருக்கிறார்கள்.

இது போக, திடீர் என்று டெலிகாம் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள கிராக்கி நிலையால் Reliance, Airtel போன்ற நிறுவனங்களில் அதிக அளவில் நிதி உள்ளே வந்துள்ளது. இது போக, Kotak வங்கியிலும் அதிக அளவு வெளிநாட்டு பணம் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் மீண்டு விடும் என்று காரணத்தால் அங்கும் அதிக முதலீடுகள் வந்துள்ளன. இதுவும் நிப்டியை உயர்த்தி உள்ளது.

கொரோனா நிலைமை அதிக நிறுவனங்களுக்கு பாதகங்களை கொடுத்தாலும் சில நிறுவனங்களுக்கு சாதகங்களை கொடுத்துள்ளது. அவை தான் மேற்சொன்ன நிறுவனங்கள்.

ஆனால் இதை சார்ந்து கடன் வாங்கி வைத்துள்ள நிறுவனங்கள், திவாலாக நிலையில் இருக்கும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போன்றவற்றின் பங்குகள் கூட உயர்ந்து காணப்பட்டுள்ளன. இதனை தான் Trap என்று சொல்ல வேண்டியுள்ளது.

இவை எல்லாம் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பூனை தான். சாதகமான காற்று கொஞ்சம் வீசும் போது மேலே துள்ளுகின்றன. இதனை நம்பி முதலீடு செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

பொதுவாக புயல் வரும் போது கண் பகுதியை தாண்டி செல்லும் போது இரண்டாவது கட்டத்தில் அதிகமாக சேதத்தை உருவாக்கும். அது போல் தான் Recession நிலை வரும் போது Second Leg என்பது. அதிக வீழ்ச்சியை கொடுக்கவல்லது. கடந்த கால வரலாற்றை பார்த்தால் 60% வரை சில தினங்களில் வீழ்ந்த வரலாறும் உண்டு. நாம் இரண்டாவது கால் நிலைக்கு செல்வோமா? என்பதை இன்னும் சில மாதங்களில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

தற்போது அணைத்து நாடுகளும் கொடுத்துள்ள பொருளாதார ஊக்கம் சந்தையில் FII வழியாக உள் நுழைந்துள்ளது. ஆனால் இது மெதுவாக பொருளாதாரத்தின் உள் நிலைக்கும் செல்ல வேண்டும். அதாவது மக்கள் நம்பிக்கையை பெற்று செலவு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதன் பலன் உற்பத்தி, சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்கு மேல் நிதி உதவி கொடுப்பதற்கு எந்த அரசுக்கும் தெம்பு இல்லை என்பதையும் கருத்தில் கொள்வோம்.

அதனால் மேலே போவதா? கீழே போவதா? என்ற உறுதி செய்ய வேண்டிய நிலையில் சந்தை தற்போது இருக்கிறது.

இன்று ஒரு செய்தி படித்தோம். பட்டதாரிகளும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கிறார்கள். அந்த அளவிற்கு புதிய வேலைகள் இல்லை, இருக்கிற வேலையும் நிலையில்லாமல் இருக்கிறது. அமெரிக்காவில் கூட வேலை வாய்ப்பு தரவுகள் மிக மோசமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில் சந்தை மேலே போகும் என்ற நிலைக்கு எம்மால் தனிப்பட்ட முறையில் நினைக்க தோன்றவில்லை.

சந்தையின் நிலையை உறுதி செய்ய இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம். அதனால் தவறி விட்டோமோ? என்ற இந்த தூண்டுதலுக்கு ஆசைப்பட்டு நண்பர் தியாகராஜன் சொல்வது போல் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை தற்போது சந்தையில் போட வேண்டாம்.

இவ்வாறான உரையாடல்களை கீழே உள்ள கருத்து படிவங்கள் வழியாக தொடருங்கள். எமக்கு ஊக்கமாகவும், வாசகர்களுக்கு ஆக்க பூர்வமாகவும் இருக்கும்.

தொடர்பான பதிவு:
பங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

  1. Really thanks for a knowledgeable article. During last few years wherever people are talking about speciality chemicals. In last few years china is experiencing lot of chemical industries closure due to environment problem. I too believe we have some kind of opportunity in chemical space. We are producing 25% of overall chinese chemical share. Raw material problems and forward, backward integration also needed to succeed in chemical space. Do you believe whether next 10 years belongs to india in chemical space. What's your thoughts sir? Thanks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks Santhru for your comments! As you said, there is a common believe that India will capture Chinese manufacturing market including Specialty chemicals. But the reality is that India's ease of doing business measures and competitiveness is still far from other south east Asian countries like Vietnam, etc. That's why around only 10% Chinese companies preferred India in last 5 years. Still current global political scenarios are favoring to India and we need to see, how India is executing the same..Even India also can face similar kind of environmental issues.

      நீக்கு
  2. மார்க்கெட் எப்பவுமே நாம எதிர்பாக்குறபடி நடந்துக்காது, நல்லா உயர்ந்துக்கிட்டே மார்க்கெட் போகும் அந்த சமயத்துல அய்யய்யோ மார்க்கெட் நல்லா உயர்ந்துடுச்சி இனிமே எங்க உயரபோகுதுன்னு யாரும் இன்வெஸ்ட் பண்ணமாட்டாங்க அந்த நேரத்துல தான் மார்க்கெட் இன்னும் நல்லா மேல போகும். நல்லா மேல போன பிறகு நம்ம திருவாளர் பொதுஜனங்கள் என்ன செய்வார்கள்? அடடே மார்க்கெட் நல்லா மேலாகுது இதுக்கும் மேல இதுக்கும் மேல இன்னும் நல்லா போகும்னு மார்க்கெட் உச்சதுலேர்ந்து வாங்கி வாங்கி குவிப்பாங்க. பிறகு என்ன நடக்கும் கிழ வாங்கியவர்கள் எல்லோரும்(வேற யாரு OPERATORS, பெரும் பணக்காரர்கள், தொழிலதிகர்கள் மற்றும் நிறுவன முதலாளிகள்) பொதுமக்கள் கைகளில் அவர்களது பங்கை திணித்துவிட்டு ESCAPE ஆகிவிடுவார்கள். பாவம் நம்ம பொதுமக்கள் கஷ்டப்பட்டு சேர்த்து மார்க்கெட்டில் வாங்கிய பங்குகள் எல்லாம் 80% 90% நஷ்டத்தில் இருக்கும். இப்ப என்னநடக்கிறது தெரியுமா? 23-MAR-2020 ஏகப்பட்ட OPERATORS, பெரும் பணக்காரர்கள், தொழிலதிகர்கள் மற்றும் நிறுவன முதலாளிகள் எல்லோரும் மார்க்கெட் அடிபாதாளத்தில் இருக்கும் போது நல்ல பங்குகளை வாங்கி குவித்து இருப்பார்கள். அவர்களுக்கு இப்போது SECOND இன்னிங்ஸ் அதனால் மார்க்கெட்ட இப்ப நல்லா மேல கொண்டு போறாங்க. இப்ப மறுபடியும் பொதுமக்கள் முட்டாளாக்கப்படப்போகிறார்கள். மார்க்கெட் விழுந்த 23-MAR-2020 அன்று எந்த ஒரு பொது ஜனமாவது பங்குகளை வாங்கி இருப்பார்களா? இல்லை காரணம் அதே பயம் தான் எங்கே மார்க்கெட் இன்னும் கிழ போயிடுமென்ற எண்ணம் அவர்களை வாங்க விடாது. வாங்கி இருக்கவும் வாய்ப்பில்லை. MARKET 7800 இருந்த அந்த சமயத்தில் பங்குச்சந்தை ஆலோசகர்கள் எல்லோரும் என்ன கூறினார்கள்? கண்டிப்பாக மார்க்கெட் 4000 புள்ளிகளில் இருந்து 5000 புள்ளிகள் வரை செல்லும் அதனால் தற்போது யாரும் முதலீடு செய்யாதீர்கள் என்று. ஆனால் கூறிய பெரும்பாலானோர்கள் PHARMA துறை பங்குகளில் முதலீடு செய்தனர். பிறகு கொள்ளை லாபம் பார்த்தனர். பங்குசந்தையில் என்றுமே பொதுமக்கள் பலியாடுகள் தான். நம்மை வைத்து பணம் படைத்தவர்கள் நல்ல வச்சி செய்றாங்க. பங்குசந்தையில் பொதுமக்கள் சாதிக்கவேண்டுமெனில் ஒரு நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாங்கிக்கொண்டு ஒரு பத்துவருடங்கள் காத்திருந்தாள் மட்டுமே சாதிக்கமுடியும். இல்லையென்றால் நம் பணம் நமக்கு லாபத்தை கொடுக்காது. உதாரணம் YES பேங்க் ருபாய் 400 இல் இருந்து 5.65 பைசா, VAKRANGEE/PC JEWELLOR ருபாய் 500 இல் இருந்து 17.15 /7.00 ருபாய், JP ASSOCIATE 30 இல் இருந்து 2 ருபாய், 8K MILES 2000 இல் இருந்து 18 ருபாய் இந்த நிறுவனத்தை பங்குசந்தையில் இருந்தே நீக்கிவிட்டார்கள். இது போல பல நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தை ஏப்பம் மட்டுமே விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கே நம்மை சம்பாதிக்கவிடப்போகிறார்கள். ஒன்று மட்டும் கூறுகிறேன் இன்று எல்லோரும் RELIANCE, RELIANCE என்று கூறுகிறார்கள் கண்டிப்பாக இந்த இருவனமாம் ஒரு நாள் மக்களை ஏமாற்றும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes. It's correct Parthiban..Retails investors are most affected one..

      நீக்கு
    2. பொது மக்களுக்கு என்று எந்த ஒரு செய்தியும் கடைசியாகத்தான் தெரிகிறது, அதனால் தான் நாம் அனைவருமே பலியாடுகள். பெரும் பண முதலைகளுக்கு அனைத்து விஷயமும் முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது 8K MILES நிறுவனத்தில் பிரபல MUTUAL FUND நிறுவனம் முதலீடு செய்கிறது என்ற தகவல் DEC 2017இல் வந்தவுடனே பொதுமக்கள் அனைவரும் ஆட்டு மந்தைகள் போல் போட்டி போட்டுகொண்டு வாங்கி SUPPLY AND டிமாண்ட் மூலமாக இருநூறு ருபாய் முக மதிப்புள்ள பங்கை அந்த நேரத்தில் 370 ருபாய் விற்றுக்கொண்டு இருந்த பங்கை அடுத்த ஒரே மாதத்தில் DEC 2017 TO JAN 2018 ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு சென்றார்கள். பிறகு FEB 2018 இல் சம்பத்தப்பட்ட அந்த MUTUAL FUND நிறுவனத்திற்கு (BLOCK ROCK) 8K MILES நிறுவனத்தில் நடந்த நிறுவனர்களின் முறைகேடுகள் குறித்து தெரியவந்த பிறகு BLOCK ROCK நிறுவனம் 8K MILES பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டார்கள். BLOCK ROCK MF நிறுவனம் விற்ற இந்த விஷயம் APRIL 2018 மாத கடைசியில் தான் பொது மக்களுக்கு தெரியவந்தது. மீடியாக்கங்களும் இதை பெரிதாக வெளியிடவில்லை. அந்த 8K MILES நிறுவனம் ஒரு CLOUD மென்பொருள் சார்ந்த நிறுவனம் அதனால் அந்த நிறுவனத்தில் மீதான நம்பிக்கையில் பொதுமக்களும் தங்கள் முதலீடு பணத்தை எடுக்கவில்லை , கடைசியில் 8K MILES நிறுவனர்களின் பங்குகள் அவர்களுக்கு தெரிந்தே ப்ரோகர்கள் மூலமாக விற்றுவிட்டார்கள். கடைசியில் எங்களுக்கு தெரியாமல் ப்ரோகர்கள் எங்கள் பங்குகளை விற்றுவிட்டார்கள் என்று நிறுவனர்களும், அவர்கள் சொல்லித்தான் நாங்கள் விற்றோம் என்று ப்ரோக்கர்களுக்கும் மாறி மாறி காறித்துப்பிக்கொண்டு POLICE இல் COMPLIENT செய்தார்கள். இந்த களோபரத்தில் அந்த 8K MILES நிறுவனத்தின் பங்கு அடிமாட்டு விலைக்கு சென்றது, தற்போது வரை இன்னும் மோசமான நிலையில் இருந்து அந்த பங்கு மீளவில்லை. இதே போல் தான் YES BANK நிலையும் மகா மட்டமான நிலை. இதில் இருந்து ஒன்றே ஒன்று தெரிகிறது. ஒரு பங்கை சாதாரண மக்கள் வாங்கும்போது அது மேலேபோகாது ஆனால் பெரும் பண முதலைகள் வாங்கும் போது அது மேலே போகும். 8K MILES /YES BANK போன்ற நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களின் பணத்தை திருடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் போல் தெரிகிறது ஒரு ஒரு முறையும் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகள் கீழே விழும்போதெல்லாம் AVERAGE செய்த பொதுமக்களின் நிலை சொல்லி மாளாது. YES BANKகை 280இல், 200இல், 150இல், 100இல், 68இல், 50 ரூபாயில் AVERAGE செய்தவர்களே அதிகம். அவர்களின் தற்போதைய நிலை என்ன? கடைசியில் அனைத்து செய்தி நிறுவனங்களும் 05-MAR-2020 அன்று YES BANK முகமதிப்பை பற்றி அடித்து விட்டார்களே பாருங்கள் அது தான் இருப்பதிலேயே மாபெரும் கேலிக்கூத்து. 109 ருபாய் இருந்த முகபதிப்பு பூஜ்யத்துக்கு சென்று விட்டதாம் அதனால் முதலீடு செய்யவரும் நிறுவனங்கள் எல்லாம் YES BANKகின் ஒரு பங்கை வாங்க வெறும் ஒரு ருபாய் கொடுத்தால் போதுமாம். அப்போது 400 ரூபாயில் பங்கை வாங்கியவனுக்கு எவ்வளவு வயித்தெரிச்சல் வரும்? கடைசியில் அனைத்து பெரு நிறுவனங்களும் 10 ரூபாயில் முதலீடு செய்தார்கள் அவர்கள் முதலீடு செய்த வுடன் அந்த YES BANK பங்கு 5.65 பைசாவில் இருந்து 87.30 ரூபாய்க்கு உயர்ந்து 1500 மடங்கு மேல் அவர்களுக்கு லாபம் கொடுத்தது. ஆனால் எனக்கு 8K MILES நிறுவனத்தில் ஒருலட்சம் நஷ்டம், YES பங்க்கில் நான்கு லட்சம் நஷ்டம். அன்று(18-MAR-2020) முடிவுசெய்தேன் இனிமே பங்குசந்தையில் நம் பணத்தை முதலீடு செய்யக்கூடாதென்று, அன்றில் இருந்து இன்று வரை தினமும் EXPOSURE வாங்காமல் என் சொந்த பணத்தில் TRADING மட்டுமே செய்கிறேன் இன்றுவரை குறிப்பிட்ட அளவு லாபமும் கிடைக்கிறது. அந்த லாபத்தை அப்படியே நல்ல பங்குகளில் முதலீடு செய்கிறேன். இதில் இருந்து ஒன்றே ஒன்று மட்டுமே தெரிகிறது பெரு முதலாளிகள் முதலீடு செய்யும் தருணம் நமக்கு தெரியாது அவர்கள் முதலீடு செய்தபிறகு தான் நாம் செய்யமுடியும் நமக்கு நூறு சதவிகிதம் லாபம் வந்தால் அவர்களுக்கு 1500 மடங்கு லாபம் கிடைக்கிறது அவர்களுக்கு 30% நஷ்டம் கிடைத்தால் நமக்கு 99% நஷ்டம் கிடைக்கிறது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. enaku idhellam theriyadhu but unga post padikrappa sila vishayangal la therinjikitan.

    https://welcomeupdates.blogspot.com/

    பதிலளிநீக்கு