வெள்ளி, 5 ஜூன், 2020

மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து

பங்குச்சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு தொடக்க புள்ளி என்பது மியூச்சல் பண்ட் தான்.

புதிதாக வரும் நமக்கு அவ்வளவு தெரியாததால் நமக்கு பதிலாக விவரம் தெரிந்தவர்கள் நமது பணத்தை பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அதிக அளவில் பிரபலமாக இருந்தது.ஆனால் சில மியூச்சல் பண்ட் மேனேஜர்கள் செய்த தவறுகள், நிறுவனங்கள் செய்த தவறுகள் போன்றவற்றின் காரணமாக அண்மையில் இந்த பரஸ்பர நிதிகளின் தோல்வி என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாகவே இந்தியாவில் வங்கிகளை தவிர மற்ற எதில் வைக்கும் பணத்திற்கு  உத்தரவாதம் காகிதங்களில் தான் இருக்கும். சட்டத்தின் ஆயிரம் ஓட்டைகள் வழியாக பெரிய கைகள் தப்பிக்க, பணம் போட்டவர்களின் ஆவென்ற வாய் பிளப்பு தான் அதிகம் இருக்கும்.

மியூச்சல் பண்ட்டும் அந்த வகையில் தான் வருகிறது.

பொதுவாக மியூச்சல் பண்ட்டில் வைத்து இருக்கப்படும் நிதி மற்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். பங்குகளின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப இந்த நிதியின் மதிப்பும் மாறும்.

ஆனால் இந்த அதிகப்படியான மாற்றங்கள் முதலீட்டின் மதிப்பில் நேர், எதிர் என்று இரு திசையிலும் செல்ல வாய்ப்பு இருக்கும் என்று கருதியதால் மியூச்சல் பண்ட்டில் இன்னொரு உட்பிரிவான Debt Fund என்பது அதிக பாதுகாப்பானதாக கருதப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலைமையும் மாறி விட்டது.

சொல்லப் போனால் Debt Fund என்பதை விட மற்ற பண்ட்கள் பரவாயில்லை என்று மாறி விட்டது.

இதற்கு அண்மை காலமாக நிறுவனங்கள் வெகு விரைவாக திவாலாகி வருவதும் ஒரு காரணம். 

Debt Fund என்பதில் போடப்படும் நிதி நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது. இந்த கடன் பத்திரங்கள் பங்குகளை போல் அல்லாது ஒரு நிலையான வட்டியை அளித்து வந்தன.

ஆனால் நிறுவனங்கள் திவாலாகும் போது நிலை வரும்போது 
NCLT கோர்ட் வழியாக NPA சொத்துக்களை விற்று தான் இந்த கடன் பத்திரங்களில் உள்ள பணத்தை பெற முடியும்.

அண்மை காலமாக Jet Airways, Vodafone, Yes Bank என்று பிரபல நிறுவனங்களே திடீர் என்று Default அறிவிப்புகளை செய்து விடுகின்றன. அந்த சூழ்நிலையில் ஒரே நாளில் பண்ட் மதிப்பும் பெரிய அளவில் குறைந்து விடுகிறது. அண்மையில் 90% மதிப்பு குறைந்த வரலாறும் உள்ளது.

அப்படி தான் Franklin Templeton நிறுவனமும் தனது ஆறு Debt Fundகளை மூடுவதாக கூறி உள்ளது. அதற்கு அந்த பண்ட் வழியாக முதலீடு செய்த நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் செயல் இழந்ததும் ஒரு முக்கிய  காரணம்.

Franklin நிறுவனத்தை பொறுத்தவரை மியூச்சல் பண்ட் துறையில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் நிறுவனம். அந்த நிறுவனமே இவ்வாறு அறிவித்தது மியூச்சல் பண்ட் துறையில் இருந்த நம்பிக்கையை தளர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

அதாவது தற்போதைக்கு அந்த பண்ட்களை  வாங்க முடியாது. விற்கவும் முடியாது. பணத்தை திருப்பி எடுக்கவும் முடியாது. சில செய்திகள், போட்ட பணம் கிடைக்க ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம் என்று சொல்கின்றது.

நீதி மன்றமும் தவறு எங்கே நடந்துள்ளது என்பதை அறிய விசாரணையை முடுக்கி உள்ளது.

ஆக, முதலீடு செய்த பணம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை. அந்த முதலீடுகள் மீதான வளர்ச்சியும் எதுவுமில்லை. இதற்கு நாமே முதலீடு நேரடியாக செய்து விடலாம் என்று தூண்டுகிற வகையில் தான் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் இருக்கின்றது.

தற்போதைய நிலையில் அரசு கடன் பாத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சல் பண்ட்கள் மீது கண் வைப்பது மட்டும் நல்லது.

[11-07-2020 அன்று குறிப்பு இணைக்கப்பட்டது]
வோடபோன் நிறுவனம் 1500 கோடி ரூபாய் அளவு மதிப்பிலான கடன் பத்திர மதிப்பை Franklin Mutual fund பிரிவிற்கு திருப்பி செலுத்தி விட்டதாக அறிவித்து உள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் பண்டில் முதலீடு செய்த பணம் விரைவில் திருப்பி கிடைக்க  வாய்ப்புள்ளது. முதலீடு செய்தவர்கள் கவனித்து வாருங்கள்! 

தொடர்புடைய பதிவு:« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. Please provide an insight article about why market is rising despite big economic problem. Stimulus package was very bad in india compared with us and europe countries. I initially thought market will never touch 10000 in nifty atleast until this year. But looking now I am in deep confusion?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sir Reason is a trap of forign investers having lot of money buying and lifting the nifty so that they will book profits in unexpected time hammering the market plthink bank shares r going up not on performance that too having lot of NPAs Think before investing if it is hard earned My personal view Risk is urs

   நீக்கு
 2. Sir, I have 10Lakh where to invest? Pls guide

  பதிலளிநீக்கு