நேற்று முன்தினம் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். அவர்கள் தியாகங்களுக்கு எமது வணக்கங்கள்!
அதே போல் சீனா சார்பாக 40 பேர் வரை மரணம் அடைந்துள்ளார்கள் என்று யூகிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின் எல்லை மோதலில் சீனா - இந்தியா வீரர்கள் மரணம் தழுவுவது என்பது இது தான் முதல் முறை. அதனால் பிரச்சினை கொஞ்சம் வீரியமானது என்று தான் நினைக்க தோன்றுகிறது.
அடிப்படையில் எமக்கு பாதுகாப்பு துறை தொடர்பாக எந்த நிபுணத்துவம் கிடையாது. ஆனால் ஒரு பாமரனாக சில சந்தேகங்கள் வரத் தான் செய்கின்றன.
முதலில் இது எல்லைக்கான சண்டையா? என்றே தெரியவில்லை.
இந்த கொரோனா பரவி வரும் காலத்தில், அதுவும் சீனா தான் இதற்கு முழு முதற்காரணம் என்று உலகம் நம்பி வரும் வேளையில் எதற்காக சீனா இந்த சண்டையை எடுக்கிறார்கள்? என்று தெரியவில்லை.
கடந்த நவம்பரில் தான் சீனா அதிபர் மாமல்லபுரம் வந்து நன்றாக ஆடல் பாடலை பார்த்து விட்டு சென்றுள்ளார். அடுத்த வெறும் நான்கைந்து மாதங்களுக்குள் அப்படி என்ன மோதல் நடந்து விட்டது என்றே தெரியவில்லை.
இதே எல்லை கோட்டை நாற்பது வருடங்களாக பார்த்து கொண்டிருந்த சீனாவிற்கு திடீர் என்று அந்த கன்வார் பள்ளதாககு மேல் ஏன் ஆசை வந்தது என்றும் தெரியவில்லை.
சீனாவின் தெம்பு இல்லாமல் நேபாளம் இவ்வளவு துள்ளவும் செய்யாது.
பாகிஸ்தான் திடீர் என்று தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
எதுவும் எதேச்சையாக நடக்கவில்லை. ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சும்மா கல்லெறிந்தே இரண்டு பெரிய நாடுகளின் 60 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் நம்பும் படியாக இல்லை.
இந்த கல்லெறி மோதலில் அதிகாரிகள் மட்டத்திலும் பலர் இறந்துள்ளனர். அதனால் மோதல் கல்லெறி என்பதையும் தாண்டி வீரியமாக தான் இருந்துள்ளது என்றும் யூகிக்க முடிகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைகள் திட்டமிட்டே குவிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியா சீனாவின் மீது கொரோனா விசாரணைக்கு ஆதரவு தெரிவித்ததில் கோபமா? அமெரிக்காவுடன் நெருங்குவதில் சீனாவுக்கு கோபமா? அல்லது சீனா நிறுவனங்களை இந்தியா நோக்கி திசை திரும்புவதில் கோபமா? சீனா முதலீடுகளை தடை செய்ததில் கோபமா? என்றும் தெரியவில்லை.
ஆனால் இது எல்லை தொடர்பான மோதல் என்று மட்டும் நம்ப முடியவில்லை. இதற்கு பின் வேறு வணிக நோக்கமோ அல்லது அரசியல் நோக்கமோ உள்ளது என்று தான் எண்ண தோன்றுகிறது.
எல்லையின் முழு விவரமும் இன்னும் மீடியா முன் வரவில்லை. பெயருக்கு தான் சில அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால் Something cooking behind seriously..
வேறு ஏதோ ஒன்றை நினைத்து மிரட்டுகிறார்கள். அதற்கு விலை அப்பாவிகளின் உயிர்கள்...எதுவாக இருந்தாலும் பொது நலன் கருதி போர் என்பது தவிர்க்கப்பட வேண்டும்.
2020ம் ஆண்டை இந்த ஜென்மத்தில் யாராலும் மறக்க முடியாது. பிரச்சனைகள் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன.
எங்கள் நிறுவன மீட்டிங் ஒன்றில் CEO சொல்கிறார். இந்த வருடத்தில் லாபம் எதுவும் வேண்டாம். தக்க வைத்துக் கொள்ள தான் போராடுகிறோம் என்று. அது போல் தான் தனி மனித வாழ்க்கை. இன்னும் சில மாதங்களுக்கு எப்படியாவது தக்க வைத்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக