war லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
war லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஜூன், 2020

சீனா மோதலும் சில சந்தேகங்களும்

நேற்று முன்தினம் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். அவர்கள் தியாகங்களுக்கு எமது வணக்கங்கள்!

அதே போல் சீனா சார்பாக 40 பேர் வரை மரணம் அடைந்துள்ளார்கள் என்று யூகிக்கப்படுகிறது.



கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின் எல்லை மோதலில் சீனா - இந்தியா வீரர்கள் மரணம் தழுவுவது என்பது இது தான் முதல் முறை. அதனால் பிரச்சினை கொஞ்சம் வீரியமானது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அடிப்படையில் எமக்கு பாதுகாப்பு துறை தொடர்பாக எந்த நிபுணத்துவம் கிடையாது. ஆனால் ஒரு பாமரனாக சில சந்தேகங்கள் வரத் தான் செய்கின்றன.

புதன், 20 செப்டம்பர், 2017

அமைதிபடுத்த அதிக அளவு செலவழிக்க தயாராகும் அரசு

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐபிஒக்கள் வெளிவந்ததால் நாமும் அது தொடர்பாகவே அதிகமாக எழுத வேண்டி இருந்தது.

அதனால் பங்குச்சந்தை நிகழ்வுகளை பற்றி அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.



 ஆனால்  ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது.

காளையின் பிடியில் இருக்கும் பங்குச்சந்தையில் திவாலான கம்பெனியைக் கூட மார்க்கெட் உள்ளது என்று சொன்னால் வாங்கி விட ஆட்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக ஐபிஒக்கள் என்பது சந்தைக்கு வரும் போது மலிவான பங்கு விலையில் வரும். அதனால் ஒரு செயற்கையாக டிமேண்ட் உருவாக்கப்பட்டு பங்கு விலை கூடுவது தான் காலங்காலமாக நடந்து வருகிறது.

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

குழந்தையின் ராக்கெட் விளையாட்டால் குழப்பத்தில் சந்தை

பொதுவாக பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணம் என்பது தெரிந்தாலும் அதற்கான தெளிவும் ஓரளவு ஊகிக்க முடியும்.