எப்பொழுதுமே ரிசர்வ் வங்கியில் கவர்னர்களாக இருப்பவர்களுக்கும், மத்திய
அரசுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.
சுப்பா ராவ், ரகுராம் ராஜன், படேல் என்று தொடர்ந்து பல கவர்னர்களுக்கும்
மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.
இதில் மத்திய அரசு என்பது பிஜேபி, காங்கிரஸ் என்று இரண்டு அரசுகளையுமே
குறிக்கும். சிதம்பரம் சுபபா ராவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தற்போதைய
அரசு அடுத்த இருவர்களிடமும் மோதியது.
கருத்து வேறுபாடுகள் எங்கு வருகிறது என்றால் வட்டி குறைப்பில் தான் அதிகம் வரும்.
இது போக, பிஜேபி காலத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கையிருப்பு
தொகையிலும் இருந்து வந்தது.
இதற்காக தான் சக்தி காந்த் தாசையும் கொண்டு வந்தார்கள். ரிசர்வ் வங்கியின் அவசர
காலத்திற்கு வைத்து இருந்த கையிருப்பு தொகையை வாங்கி செலவு செய்தார்கள்.
தற்போது அவசர காலத்தில் பெரிதளவு பணம் நம்மிடம் இல்லை என்பதையும் கவனிக்க.
இது போக, சக்தி காந்த் தாஸ் செய்தது என்னவென்றால் வங்கிகளின் Repo Rate என்பதை
குறைத்து கொண்டே வந்தது தான். அதாவது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கால்
சதவீதமாவது குறைத்து விடுவார். தற்போது ரெபோ விகிதம் என்பது கடந்த 12
வருடங்களில் இல்லாத அளவு 4% குறைந்துள்ளது.
