பந்தன் வங்கியின் ஐபிஒ வெளிவந்துள்ளது. வரும் திங்கள், மார்ச் 19 என்பது விண்ணப்பங்களுக்கு இறுதி நாளாகும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறோம்.
ரிலையன்ஸ் போன்ற பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வங்கி லைசென்ஸ் பெறுவதற்கு போட்டியிட்டு இருந்தார்கள்.
அந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி IDFC, Bandhan Bank என்று இரு வங்கிகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது.
அதில் பந்தன் வங்கிக்கு அளிமதிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது, வட கிழக்கு இந்தியாவில் வங்கி கட்டமைப்பு இன்னும் பரவலாக இல்லை என்பது தான்.
அப்பொழுது பந்தன் வங்கி நம்மூரில் முத்தூட் இருப்பது போல, கிராமபுறங்களில் எல்லாம் நிதி நிறுவனமாக பரவி இருந்தது.
அதனால் அந்த ஏரியாவில் வங்கியாக மாறுவதற்கு பெரிய காலம் பிடிக்கவில்லை.
மற்ற மாநிலங்களில் தான் விரிவாக்கம் கடினமாக இருந்தது.
ஆனாலும் தற்போது சென்னை, பெங்களூர் போன்ற தென் இந்திய நகரங்களிலும் கிளைகளை பார்க்க முடிகிறது.
இது தவிர, கிரெடிட் , டெபிட் கார்டுகள் தேய்க்கும் மெசின்கள் கூட பந்தன் வங்கியை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் இரண்டு வருடங்களில் ஒரு மிதமிஞ்சிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்று சொல்லலாம்.
தனிப்பட்ட முறையில் நாமும் இந்த வங்கியின் விரிவாக்கம், மேலாண்மை போன்றவற்றை கருதி இதில் முதலீடு செய்ய காத்து இருந்தோம்.
ஆனால் IPOவில் நிர்ணயம் செய்யப்பட பங்கு விலையை பார்த்த பிறகு முதலீடு செய்வதா? என்று தோன்றியது.
ஒரு பங்கு விலை 375 ரூபாய்க்கு சொல்லப்பட்டுள்ளது. அதில் நின்று பார்த்தால் P/E மதிப்பு 36க்கு அருகில் வருகிறது. புத்தக மதிப்பில் ஏழு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
அதாவது வங்கியின் மொத்த மதிப்பு 44,000 கோடி என்று வருகிறது. பல சகாப்தங்கள் செயல்படும் வங்கிகள் கூட இந்த வங்கியின் பின்னால் தான் வருகிறது.
நல்ல வங்கி தான். நல்ல மேலாண்மை..நல்ல வளர்ச்சி கொடுத்துள்ளது. நிறைய வளர்ச்சி மீதி உள்ளது.
ஆனாலும் அதற்காக தங்கத்திற்கு மிஞ்சிய மதிப்பு கொடுக்க முடியாது.
சந்தையின் சரிவுகளில் மீண்டும் தகுதியான விலைக்கு வரும். அப்பொழுது நீண்ட கால முதலீட்டிற்கு பார்த்துக் கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக