திங்கள், 19 மார்ச், 2018

HAL IPOவை வாங்கலாமா?

நிதி வருட கடைசி என்பதால் என்னவோ பல ஐபிஒக்கள் கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் கூட வரிசையில் நிற்கின்றன.


இந்த ஐபிஒக்களுக்கு தேவையான நிதி ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்று கூட பெற முனைவதால் சந்தையின் சரிவிற்கு கூட இவை காரணாமாக உள்ளது என்று சொல்லலாம்.நாளை, மார்ச் 20 அன்று  HAL IPOவின் கடைசி நாள்.

HAL என்பது Hindustan Aeronautical Ltd என்பதன் சுருக்கம் ஆகும்.

ஹெலிகாப்ட்டர், விமானங்கள் போன்றவை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பெரும்பாலும் மத்திய அரசே HAL நிறுவனத்திற்கு கிளின்ட்டாக உள்ளது.


பட்ஜெட்டில் பொது துறை நிறுவன பங்குகளை விற்று நிதி திரட்ட இலக்கு வைத்திருப்பதால் HAL நிறுவனமும் பங்குசந்தைக்கு வருகிறது.

இந்த வெளியீட்டின் மூலம் 4500 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் வருமானம் மற்றும் லாபம் நன்கு உயர்ந்துள்ளது. ஆனால் சீராக இல்லை என்பது ஒரு குறை தான்.

ஐம்பது வருடங்களாக இதே துறையில் இருந்தாலும் மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ந்துள்ளதா? என்றால் கேள்விக்குறி தான்.

அரசை அதிக அளவில் சார்ந்துள்ளது. விமான மற்றும் பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடுகள் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அந்த போட்டியை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையும் விரைவில் வரலாம்.

ஒரு பங்கு விலை 1240 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் P/E மதிப்பை பார்த்தால் 17க்கு அருகில் தான் வருகிறது.

ஆனால் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது இதனை விட நல்ல ஐபிஒக்கள் காத்து இருப்பதால் நாம் தவிர்க்கலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக