வேகமாக வெளிவரும் IPOக்கள் காரணமாக அது பற்றியே அதிகமாக எழுத வேண்டி உள்ளது.
இதனால் சந்தை நிலவரத்தை கொஞ்சம் அதிகமாக அலசலாம் என்பது பற்றிய கட்டுரையும் தள்ளி போகிறது.
அதனைப் பற்றி நாளை எழுதி விட முயற்சிக்கிறோம்.
இன்று Sandhar Technologies என்ற நிறுவனத்தின் ஐபிஒ வெளியீடை பார்ப்போம்.
நாளை மார்ச் 21 என்பது விண்ணப்பங்களுக்கான கடைசி நாள். ஒரு பங்கின் விலை 332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் இருக்கும் கடன் சுமையைக் குறைப்பதற்காக ஐபிஒ வெளியீட்டின் மூலம் 300 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.
Sandhar Technologies நிறுவனமானது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது.
விரிவாக பார்த்தால், Locking System என்று சொல்கிறார்கள். கார்களுக்கு தேவையான தானியங்கி கதவுகள் முதல் பைக் லாக் செய்வது வரை உதிரி பாகங்களை தயாரித்து கொடுத்து வருகிறது.
முப்பது வருடங்களுக்கு மேலும் தேவையான தொழில் துறை அனுபவத்தை கொண்டுள்ளது.
Honda, Hero, Bajaj, TVS, Suzuki, Royal Enfield, Tata Motors, Ashok Leyland, Mahindra & Mahindra, Volvo என்று பல பெரிய நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் தான்.
கடந்த மூன்று வருடங்களில் லாபம் வருடத்திற்கு 20% என்ற அளவில் கூடியுள்ளது.
தற்போது ஐபிஒ மூலம் கிடைக்கும் பணத்தை கடனுக்கு பயன்படுத்திக் கொண்டால் வட்டி குறைந்து லாபம் இன்னும் கூடவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு பங்கின் விலையான 332 ரூபாயில் P/E மதிப்பு 29க்கு அருகில் வருகிறது.
இதே துறையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் மற்ற நிறுவனங்களை பார்த்தால் சராசரியாக 35 என்ற அளவில் உள்ளன.
அதனால் மலிவான விலை தான். சந்தையில் வெளிவரும் போது 10% வரை லாபம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக