ஞாயிறு, 11 மார்ச், 2018

சரியும் மார்ச் மாதமும் கடந்து போகும்...

கடந்த பதிவு எழுதிய பிறகு பதினைந்து நாட்கள் என்பது ஒரு பெரிய இடைவெளி தான். மன்னிக்கவும்!


இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை கடந்த மாத சில பதிவுகளிலே குறிப்பிட்டு இருந்ததால் புதிதாக எழுதுவதற்கு பெரிதளவு இல்லை.இது போக, எமது தனிப்பட்ட சில வேலைகளும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த பதிவையும்  எமது தனிப்பட்ட முதலீடு சரிதையில் இருந்தே ஆரம்பிக்கிறோம்.


மோடி வருவதற்கு முன் 2013ல் எமது தனிப்பட்ட பங்குச்சந்தை முதலீடு போர்ட்போலியோவை மாற்றி இருந்தோம்.

அதனை இலவசமாக கொடுத்து இருந்ததால் பொதுவில் இங்கே பார்க்கலாம்.
Revmuthal.com 2013 போர்ட்போலியோ பரிந்துரை 

தனிப்பட்ட முறையில் மோடியின் அரசியலில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அவரது பொருளாதார சீர்திருத்தங்களால் பலன் அடைந்ததில் அடியேனும் ஒருவன்.அதனால் மேலே பகிரப்பட்ட போர்ட்போலியோவானது நான்கரை வருடங்களில் நான்கரை மடங்கு லாபத்தை கொடுத்து இருந்தது.

அதாவது இரண்டு லட்ச முதலீடிற்கு பகிரப்பட்ட போர்ட்போலியோ ஒன்பது லட்சத்திற்கும் மேல் மாறி உள்ளது.

இது இந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட அடியையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாத நிலவரத்தில் பார்த்து இருந்தால் ஐந்து மடங்கு லாபமாக இருந்திருக்கும்.

இவ்வாறு 2013ல்  முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளில் லிபெர்டியை தவிர மற்ற பங்குகளில் பெரிய அளவில் மாற்றிக் கொள்ளவில்லை.

அதற்கு காரணமும் இல்லை என்பது வேறு ஒரு காரணம்.

கம்பெனி ரிசல்டை பார்த்தால் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இடையில் நாம் ஏன் குறுக்கே சென்று கெடுப்பானேன் என்ற எண்ணமும் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக சில பங்குகள் அளவுக்கு மீறிய மதிப்பீடலில் சென்று கொண்டிருந்தது.

சராசரியாக எமது போர்ட்போலியோவின் P/E மதிப்பை பார்த்தால் நாற்பதிற்கும் அதிகமாக இருந்தது.

அதனால் இனியும் வைத்து இருக்க வேண்டுமா? என்ற எண்ணமும் கூடவே வந்தது.

இந்த நிலையில் தான் அருண் ஜெட்லி கிடைத்த பங்கு லாபத்திற்கு வரியும் அறிவித்தார். இதனால் கணிசமான வரி கட்டும் சூழ்நிலை உருவானது.

Grand Fathering சலுகை மூலம் இந்த வரியை தவிர்க்கும் சூழ்நிலை இருந்தது. ஆனாலும் தவிர்க்கும் முறையை யோசித்தால் பயமாக இருந்தது.

இதற்கு என்று ஒரு ஆடிட்டரை பார்க்க வைத்து, அதற்கு செலவு வைத்து விடுவார்களோ என்ற பயமும் வந்தது.

ஒரு நிலையில் பங்கு மதிப்பீடலும் கூடி இருந்தது. மற்றொரு பக்கம் வரியையும் தவிர்க்க வேண்டும்.

என்ன செய்ய? விற்று விட்டால் பல விதங்களில் நிம்மதி.

எமது முந்தைய பதிவில் சொன்னது போல மார்ச்சில் எல்லோரும் விற்று விடுவார்கள். அப்படி என்றால் பங்கு விலை குறையும்.

அதனால் பிப்ரவரியில் பங்குகளை விற்றோம். நல்ல விலை.

மார்ச்சில் மலிவான விலையில் பங்குகள். வாங்கினோம்.

நண்பர்களுக்கு வேண்டுகோள்..,

மேலே சொன்னவற்றை பெருமை பேசும் விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பங்குச்சந்தை முதலீட்டில் வெற்றி பெற்ற பப்பட்டின் பொன் மொழிகள் நிறைய இடங்களில் நிரூபணம் ஆகி உள்ளது என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

முதலில் ஐந்து வருடங்களில் என்ன ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் பங்குகளை மாற்றிக் கொண்டே இருந்ததில்லை.

இரண்டாவது உச்சத்தில் இருக்கும் போது விற்க வேண்டும். அதான் பிப்ரவரியில் விற்றோம்.

மூன்றாவது, எல்லோரும் விற்கும் போது வாங்க வேண்டும். மார்ச் மாதத்தில் எல்லோரும் விற்கிறார்கள். நாம் வாங்குகிறோம்.

முன்பு எங்கோ படித்த நியாபகம். பங்குச்சந்தை முதலீடுகளில் TECHNICAL, FUNDAMENTAL அனலிசிஸ் என்பது பாதி தான் தேவை.

மற்ற படி, நிதி ரீதியான ஒழுக்கம் Financial Discipline என்பது தான் அதிகம் தேவை.

கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது, அவசரத்திற்கு இருப்பவற்றை பங்கில் பயன்படுத்தக்கூடாது.

முடிவெடுத்து விட்டால் விஜய் போன்று நமது பேச்சை நாமே கேட்க கூடாது...:)

என்ற பொன்னான மொழிகளை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டியுள்ளது.

இறுதியாக,

ஜூன்ஜூன்வாலா முப்பது வருடங்களுக்கு முன்பே முதலீடு செய்ததால் சம்பாதித்தார். இந்த போர்ட்போலியோ மோடி வருவதற்கு முன்பே முதலீடு செய்ததால் தப்பித்தது என்று சொல்பவர்களுக்கு,

கடந்த மூன்று வருடங்களில் செய்யப்பட சீர்திருத்தங்களின் நல்ல மாற்றங்களை இன்னும் நாம் காணவில்லை என்பதே உண்மை.

அடுத்த தேர்தலில் மோடி தோற்றாலும் கூட அடுத்த பத்து வருடங்களுக்கு பலன் தரும் சூழ்நிலைகள் இனி தான் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

ரஜினி பாசையில் சொல்லப் போனால் இது ட்ரைளர் தான். இனி தான் மெயின் பிச்சர்.

மார்ச் இறுதி வரை விற்பவர்கள் விற்றுக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் அடுத்த ஐந்து வருடங்களுக்கான போர்ட்போலியோவை உருவாக்குவோம்.

muthaleedu@gmail.com என்ற முகவரியில் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பான பதிவு:
Revmuthal.com தளத்தின் கட்டண பங்கு பரிந்துரை சேவை


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக