நேற்றே Bharat Dynamicsவின் IPO விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு விட்டது. நாளை(15/03/2018) இறுதி வரை இருப்பதால் கடைசி நேரத்தில் பயன் பெறும் பொருட்டு இந்த பதிவினை எழுதுகிறோம்.
நமது குடியரசு தின அணிவகுப்புகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஸ் ஏவுகணைகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.
அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தான் Bharat Dynamics.
இது முழுக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனம்.
கடந்த அருண் ஜேட்லியின் பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் மூலம் எண்பதாயிரம் கோடி அளவு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதில் Bharat Dynamics நிறுவனத்தின் பங்குகளும் உள்ளடங்கும்.
தற்போது அரசு தம்மிடம் உள்ள 12.5% பங்குகளை விற்று ஆயிரம் கோடி அளவு நிதியை இந்த நிறுவனத்தின் மூலம் திரட்ட உள்ளது.
இனி சாதகமான அம்சங்களை பார்ப்போம்.
முதலில், இந்த நிறுவனத்திற்கு போட்டி என்று ஒரு நிறுவனமும் இந்தியாவில் இதுவரை இல்லை. அதனால் என்ன ஏவுகணை செய்தாலும் அவர்கள் கையை விட்டு போகாது என்பது தற்போதைக்கு சாதகமான விடயம்.
இரண்டாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு நிலையான வளர்ச்சியை விற்பனை மற்றும் லாபத்தில் கொடுத்து உள்ளது. கடந்த ஐந்து வருடத்தில் விற்பனை 39%மும், லாபம் 10% என்ற அளவிலும் வருடத்திற்கு கூடி உள்ளது.
மூன்றவாது, தற்போது குறிப்பிடப்பட்டு இருக்கும் பங்கு விலை 428 என்பது P/E மதிப்பை 20க்கு அருகில் கொண்டு வருகிறது. இது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல மதிப்பீடலும் கூட.
அதே நேரத்தில் பாதகமான விடயங்களை பார்த்தால்,
இந்த நிறுவனத்தின் ஒரே வாடிக்கையாளர் இந்திய ராணுவம் சார்ந்த படைகள் தான். அதனால் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீட்டை குறைத்தால் இந்த நிறுவனமும் நேரடியாக பாதிக்கப்படும்.
பிஜேபி அரசு இருக்கும் வரை குறைக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் குறைவே. அதே நேரத்தில் சுற்றிலும் வலுவான நாடுகளின் பதற்றமான சூழ்நிலை இருந்து கொண்டே இருப்பதால் அரசு இந்த முயற்சியில் ஈடுபடாது என்று நம்பலாம்.
அடுத்து, அண்மையில் அரசு பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. அதனால் அந்த நிறுவனங்கள் போட்டி கொடுக்கும் போது இந்த நிறுவனமும் பாதிக்கப்படலாம். ஆனால் அதற்கு இன்னும் சில, பல வருடங்கள் கூட ஆகலாம்.
நாம் IPO என்பதை குறுகிய கால முதலீடாகவே பெரும்பாலும் பார்க்கிறோம். அந்த சூழ்நிலையில் பாதகங்களை விட சாதகங்கள் அதிகமாக இருப்பதால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்கிறோம்.
நம்மைப் போன்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு அரசு பத்து ரூபாய் குறைவாகவே விற்பனை செய்கிறது. அதனால் நஷ்டம் என்பதற்கு கூட வாய்ப்புகள் குறைவே! தொடர்க..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக