புதன், 5 ஏப்ரல், 2017

விசா கட்டுப்பாடுகளால் போராடும் இந்திய ஐடி துறை

இந்திய ஐடி துறை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியை இழந்து வந்தது. ஆனால் இவ்வளவு விரைவில் பெரிய தேக்க நிலைக்கு செல்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.


ஹிலாரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்த ஐடி துறைக்கு ட்ரம்ப் வந்து இருந்த கொஞ்ச நம்பிக்கையும் காலி பண்ணி விட்டார்.



நேற்று வெளியிடப்பட்ட புதிய விசா கொள்கைகளில் முக்கியமாக ஐடி துறையை குறி வைத்து தான் பல குறிப்புகள் இருந்தன.

அதில் ஒன்று, ஐடி துறையில் வெறும் ப்ரோக்ராமர் என்ற போர்வையில் யாரும் அமெரிக்காவிற்கு நுழைய முடியாது.

அதனால் இன்ஜினியரிங் போன்ற ப்ரோப்பசனல் அல்லாத படிப்பு இல்லாதவர்கள் விசா பெறுவது கடினமாகும். இது பிஎஸ்சி போன்ற குறுகிய கால படிப்புகளை வைத்துக் கொண்டு ஐடி துறைக்குள் இருப்பவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

அடுத்து, மென்பொருள் எழுதுபவர்களில் நிபுணத்துவம் பெற்ற அனாலிஸ்ட், ஆர்க்கிடெக் போன்றவர்களுக்கு தான் விசா கொடுக்க முடியும் என்று கூறி உள்ளார்கள்.

இதனால் மூன்று அல்லது நாண்டு வருடங்களுக்கு கீழ் அனுபவம் பெற்றவர்கள் H1B பெறுவது கடினமாகும்.

ஆனால் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

இந்திய ஐடி நிறுவனங்களில் நான்கு வருடங்களுக்கு கீழ் அனுபவம் பெற்றவர்கள் 15% அளவு தான் H1B பெறுகிறார்கள் என்று.

அப்படி என்றால், தங்களுக்கு அவ்வளவு பாதிப்பு இருக்காது என்று நாஸ்காம் சொல்கிறது.

அதனை எளிது என்று விட்டாலும், H1B விசா பெறுபவர்களுக்கு குறைந்தது 1,10,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை பெரிதளவு உதைக்கும்.

தற்போது அறுபாதாயிரம் டாலர்கள் கொடுத்து கொண்டு இருப்பவர்கள் இந்த சம்பளத்தை  இரு மடங்காக உயர்த்த வேண்டி வரும்.

இந்த நிலையில், பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இந்திய ஐடி பணியாளர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இப்படி சென்றவிடமெல்லாம் இடி கிடைக்கும் சூழ்நிலையில் இந்திய நிறுவனங்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளன என்பது தான் நிதர்சனம்.

ஆனால் இது வரைக்கும் நாங்க எப்படி சமாளிக்க போகிறோம் என்று உருப்படியாக சொன்னதாக தெரியவில்லை.

பங்குச்சந்தை அளவு பார்த்தால்,

ஒரு கட்டத்தில் ஐடி நிறுவனங்களின் பங்குகளின் P/E மதிப்பானது 25 அளவு இருந்து வந்தது. மற்ற சென்செக்ஸ் நிறுவனங்களை விட 30% வரை அதிக ப்ரீமியம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது சென்செக்ஸ் சராசரியை விட முப்பது சதவீதம் குறைவாக உள்ளது. வட்டமான வரலாறு!

அதே நேரத்தில் விசா, போட்டி, ட்ரம்ப் என்று பல காரணிகளை வைத்து ஐடி நிறுவன பங்குகள் அடி விலைக்கு வந்து விட்டன.

அதனால் மேலும் குறைய வாய்ப்புகள் குறைவாக உள்ளன. ஆனால் வாங்க ஆட்களும் இல்லை என்பதும் உண்மையே!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக