வெள்ளி, 21 ஏப்ரல், 2017

S.Chand IPOவை வாங்கலாமா?

ஏப்ரல் 26 அன்று S Chand நிறுவனத்தின் IPO வெளிவருகிறது.


அதனை வாங்கலாமா? என்பது பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.S Chand நிறுவனம் மத்திய பாடத் திட்டத்திற்கு தேவையான புத்தகங்களை தயாரிக்கும் பணியை முக்கியமாக மேற்கொள்கிறது.

இது தவிர சிறு குழுந்தைகளுக்கு தேவையான விளையாட்டு புத்தகங்கள், ஆன்லைன் மூலம் புத்தக பாட திட்டங்கள் பயிற்றுவித்தல் போன்ற பணியையும் மேற்கொள்கிறது.

இந்த புத்தகங்கள் மத்திய ஆசியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிறுவனத்தின் வருவாயை பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 30% வளர்ச்சியை சராசரியாக கொடுத்துள்ளது.

ஆனால் லாபம் என்பது நிலையானதாக இல்லை என்பது ஒரு கவலை அளிக்கும் விடயம். ஒவ்வொரு வருடமும் ஏற்றம் இறக்கங்களை அதிக அளவில் காண முடிகிறது.

இது தவிர டிசம்பர் முடிந்த நிதி ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் 30 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக காட்டி உள்ளார்கள்.

புத்தக துறையில் உள்ளதால் 75% வருமானமும் நான்காவது காலாண்டில் தான் கிடைக்கும் என்று கூறி உள்ளார்கள்.

ஆனால் கடந்த வருட லாபத்தை தாண்டி செல்ல வேண்டும் என்றால் ஏப்ரல் காலாண்டில் மிக அதிகமாக லாபம் காட்டினால் தான் முடியும். அது சாத்தியமா? என்பது கேள்வி குறியே.

அடுத்து, கல்வி துறையில் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் மத்திய அரசு இனி எல்லா புத்தகங்களையும் வாங்க கூடாது, பள்ளிகள் இந்த புத்தங்களை தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்பது போன்ற விதி முறைகள் இந்த நிறுவனத்திற்கு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

தற்போது பங்கு விலையினை 660 முதல் 670 ரூபாயில் நிர்ணயித்து உள்ளார்கள்.

இது 2016ம் ஆண்டின் நிதி அறிக்கையில் ஒப்பிடுகையில் P/E மதிப்பினை 28 என்று காட்டுகிறது. அதே துறையில் பட்டியலிடப்பட்டுள்ள Navneet பங்கு இதை விட மலிவாக கிடைக்கும் சூழ்நிலையில் இந்த விலை அதிகமாகவே தோன்றுகிறது.

இவ்வாறு பல எதிர்மறை காரணிகள் இருப்பதால் இந்த IPOவினை தவிர்க்கலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக