கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து வருகிறது.
பொதுவாக வளர்ச்சி அதிகரிக்கும் என்ற சூழ்நிலையில் வைப்பு வட்டி விகிதம் குறைந்து அதன் முதலீடுகள் பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு திருப்பி விடுவது இயற்கை. அது தான் தற்போது நடந்து வருகிறது.
இன்னும் வட்டி விகிதங்கள் குறைய கூட வாய்ப்பு உள்ளது. அதனால் வட்டி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சென்றால் கூட ஆச்சர்யம் இல்லை.
ஆனால் மாதந்தோறும் வட்டியை பெற்று அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்து வருபவர்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு என்பது மிகவும் கஷ்டமான நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த நிலையில் ஒரு அதிக வட்டி தரும் பாதுகாப்பான முதலீடை பார்ப்போம்.
மாதந்திர வருவாய் திட்டம்(Monthly Income Scheme) என்ற இந்த திட்டம் அஞ்சலகங்கள் மூலம் தரப்படுகிறது. மத்திய அரசின் உத்திரவாதம் பெற்று விடுவதால் இந்த திட்டம் பாதுகாப்பானது.
இங்கும் வட்டி விகிதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது தான். ஆனாலும் எப்பொழுதுமே வங்கிகளை விட ஒன்றரை சதவீதம் வரை அதிகமாக வட்டி தருவார்கள். தற்பொழுது 7.6% வட்டி தருகிறார்கள்.
அதே நேரத்தில் ஐந்து வருடங்கள் இந்த முதலீட்டை அஞ்சலகங்களில் வைத்து இருக்க வேண்டும்.
இடையில் மூன்று வருடத்திற்குள் எடுப்பதாக இருந்தால் 2% வரை அபராதம் விதிக்கப்படும். மூன்று முதல் ஐந்து வருடங்களில் எடுப்பதாக இருந்தால் 1% அபராதமாக கட்ட வேண்டும்.
ஒருவர் அதிக பட்சமாக 4.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் இருவர் Joint Account முறையில் வைத்துக் கொள்வதாக இருந்தால் 9 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.
வட்டியானது அஞ்சலக கணக்குகளில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். நமது அருகாமையில் உள்ள அஞ்சலகங்களிலே இந்த கணக்கினை திறந்து கொள்ளலாம்.
முன்பு இந்த திட்டத்திற்கு ஐந்து வருடம் முடிகையில் போனஸ் வழங்கி வந்தார்கள். ஆனால் தற்பொழுது நிறுத்தி விட்டார்கள்.
இவ்வாறு வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும்.
ஆனாலும் மற்ற வைப்பு நிதிகளை ஒப்பிடுகையில், வட்டியை மாத வருமானம் போன்று எதிர்பார்க்கும் வருமான வரி விளிம்பில் வராதவர்களுக்கு இந்த திட்டம் அதிக பலன் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க.
https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/MIS-Account.aspx

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக