திங்கள், 3 ஏப்ரல், 2017

BS-3 தடை, ஆட்டோ நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கலாம்?

இரு தினங்கள் முன் நீதி மன்றம் BS-III விதி முறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தடை விதித்து விட்டது.


இது எப்படி ஆட்டோ நிறுவனங்களை பாதிக்கும் என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.



ஒவ்வொரு நாடும் வாகனங்கள் எந்த அளவு சுற்று சூழலை பாதிக்கலாம் என்பதில் வரையறைகளை வைத்துள்ளன.

அதன் படி தான் ஆட்டோ நிறுவனங்கள் வாகனங்களை தயாரிக்க முடியும்.

இந்தியாவில் Bharath Stage (BS) என்ற குறியீடுகளில் பல நிலைகளில் குறிப்பிடுகிறார்கள். அதன் படி தற்போது வரை BS-III என்ற நிலையில் பின்பற்றப்படுகிறது.

ஆனால் இந்த நிலை வரிசை ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருக்கும் அளவிற்கு தரமானதாக இல்லை.

உதாரனத்திற்கு BS-3 என்ற நிலையில் ஒரு வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிராம் கார்பன் மோனாக்ஸ்ட் வாயுவை வெளியிடுவதாக இருந்தால் BS-4 என்ற அடுத்த தரத்தில் 0.75 கிராம் அளவு தான் வாயு வெளியிட முடியும்.

தற்போது கோர்ட் அணைத்து வாகனங்களும் குறைந்த பட்சம் BS-4 என்ற தரத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி விட்டது.

இதன் காரணமாக தற்போது பரவலாக BS-3 வழிமுறையை பின்பற்றப்படும் வாகனங்களை ஏப்ரல் ஒன்றுக்கு மேல் பதிவு செய்ய முடியாது.

மொத்தத்தில் ஒன்பது லட்ச வாகனங்கள் இப்படி தேங்கி போனதால் மார்ச் மாத கடைசி தினங்களில் பல வாகனங்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்பட்டன.

இந்த சலுகையால் மக்கள் காய்கறி வாங்கி செல்வதை போல் பைக் வாங்க முடிந்ததை செய்திகளில் பார்க்க முடிந்தது.

ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற விதி முறைகள் வந்தால் வாங்கியவர்களுக்கு கஷ்டம் தான்.

இவ்வாறு ஆட்டோ நிறுவனங்கள் கடுமையாக சலுகை வழங்கியதால் மார்ச் முடிந்த காலாண்டில் வாகன விற்பனை கூடி உள்ளது. ஆனால் சலுகை காரணமாக லாப மார்ஜின் குறைந்த பட்சம் 3% அளவாவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியை வரவிருக்கும் காலாண்டின் நிதி முடிவுகளில் நாம் பார்க்க முடியும்.



ஹீரோ, டாட்டா, மகிந்திரா, அசோக் லேலேண்ட் போன்ற நிறுவனங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என்பது போல் தெரிகிறது.

இந்த சலுகை இழப்பை இந்த காலாண்டில் குறுகிய அளவில் பாதிக்கும் காரணியாக பார்க்கலாம்.

ஆனால் நீண்ட கால அளவில் BS-4 விதி முறைகளுக்கு ஏற்றவாறு எஞ்சின் மற்றும் உதிரி பாகங்களை தயாரிக்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் செலவு தான். அதே சமயத்தில் வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆயில் நிறுவனங்களும் இந்த புதிய தரத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் நீதி மன்றத்தின் இந்த முடிவு நிறுவனங்களுக்கு சுமையான பாதிப்பு, ஆனால் சுற்று சூழலுக்கு நல்லது.

அதே நேரத்தில் ஏற்கனவே இந்த பட்டியலில் வைத்து இருக்கும் வாகனங்களை வைத்து இருப்போருக்கு Resale மதிப்பு என்பது மிகவும் குறைவாகவே கிடைக்கும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக