திங்கள், 10 ஏப்ரல், 2017

சாலையோர மதுவிற்கு தடை, எந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு?

எதையும் கண்டு கொள்ளாத தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் காரணமாக நீதி மன்றமே நிர்வாக முடிவுகளில் தலையிடும் விடயம் அதிகமாகிக் கொண்டு தான் உள்ளது.


இது ஒரு வகையில் நல்லது என்றாலும், மற்றொரு வகையில் அரசு எந்த முடிவையும் சுதந்திரமாக எடுக்க முடியாத நிலைக்கும் காரணமாக அமையலாம்.அந்த வகையில் நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இதில் தேசிய நெடுஞ்சாலை என்று மட்டும் அல்லாமல் மாநில நெடுஞ்சாலைகளும் வந்ததால் மூன்றில் ஒரு பங்கு மதுபானக் கடைகள் மூட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.

இது நேரடியாக மதுபான ஒனர்களை பாதித்து உள்ளது.

அதே நேரத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை பார்த்தால் மதுபான உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளன.

இதனால் சந்தையின் United Spirits போன்ற இந்த துறை சார்ந்த நிறுவன பங்குகள் பத்து சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.

ஒரு கட்டத்தில் இந்த உத்தரவு மது பானக் கடைகளுக்கு மட்டும் தான் பொருந்தும், பெரிய ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கு பொருந்தாது என்ற இந்திய அட்டர்னி ஜெனரல் சொல்ல அவை நிம்மதி கொண்டன.

ஆனால் நீதி மன்றம் இல்லை, இல்லை சாலையில் இருக்க கூடிய எல்லா பார்களுக்கும் பொருந்தும் என்று விளக்கவுரை அளிக்க அந்த ஹோட்டல்களும் கவலை கொண்டன.

பொதுவாக பெரிய ஹோட்டல்கள் சாலையின் ஓரத்தில் தான் அமைந்து இருக்கும். தெருக்களின் உள்ளே இருப்பதில்லை.

இதனால் பார்கள் உடைய அத்தனை ஹோட்டல்களும் இந்த பிரிவிற்கு வந்து விடுகின்றன.இதனால் ஆசியன் ஹோட்டல், Cox&King, தாஜ் என்று சுற்றுலா சார்ந்த பெரிய ஹோட்டல் நிறுவன பங்குகள் சரிந்தன.

சுற்றுலா என்பது பெரிய அளவில் வெளிநாட்டு பயணிகளையும் கவரும் விடயம். அவர்களுக்கு சுற்றுலாவில் மது அருந்துவது என்பது தண்ணீர் பட்ட பாடு.

அதனைத் தடுப்பது என்பது நமது சுற்றுலா துறைக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படுத்தினாலும் ஆச்சர்யம் இல்லை.

பொதுவாக மது, சிகரெட் தயாரிக்கும் நிறுவன பங்குகளை சமூக அக்கறை என்ற நோக்கோடு நாம் பரிந்துரை செய்வதில்லை.

ஆனால் இந்த செய்தியில் நீதி மன்ற உத்தரவு என்பது பல முனைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக