ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ICICI Lombard IPOவை வாங்கலாமா?

இந்த மாதம் முழுவதும் IPOக்களை பற்றி எழுதுவதில் வேறு நிகழ்வுகள் தொடர்பாக அதிக கட்டுரைகளை எழுத முடியவில்லை.


அவ்வளவு தூரம் ஒரு நாள் கூட விடாமல் ஐபிஒக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



காளையின் பிடியில் இருக்கும் சந்தையில் தான் ஐபிஒக்களும் அதிக நிதியை திரட்ட முடியும் என்பதால் நேரத்தை தமக்கு சாதகமாக்க முனைகின்றன என்று சொல்லலாம்.

இறுதியாக கடந்த வாரம் Capacite Infra நிறுவனத்தின் ஐபிஒவை பரிந்துரை செய்து இருந்தோம்.

188 மடங்குகள் அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கிடைத்தால் அதிக லாபம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கிடைக்க வாழ்த்துக்கள்!

அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 வெள்ளியன்று ICICI Lombard Insurance நிறுவனத்தின் ஐபிஒவும் ஆரம்பித்து விட்டது. வரும் செவ்வாய் வரை தொடர்கிறது என்பதால் இது தொடர்பாக பார்க்கலாம்.

ICICI Lombard என்பது ICICI வங்கியின் ஒரு இன்சூரன்ஸ் பிரிவு.

ஏற்கனவே கடந்த வருடம் தான் ICICI Prudential நிறுவன ஐபிஒ வெளிவந்தது. அது ஆயுள் காப்பீடுகளை கையாண்டு வருகிறது.

அதே நேரத்தில் ICICI Lombard வாகனங்கள், தீ விபத்து, விவசாய பயிர், மருத்துவம் போன்றவை தொடர்பான இன்சுரன்ஸ் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது.

மற்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இன்சுரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு தற்போது தான் தெரிய வர ஆரம்பித்துள்ளது.

அதனால் ஒரு வேகமான வளரும் துறையாக இன்சுரன்ஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த நிலை ICICI Lombard நிறுவனத்திற்கும் சாதகமானது தான்.

கடந்த ஐந்து வருடங்களின் இந்த நிறுவனத்தின் லாபம் 352 கோடியில் இருந்து 641 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் வளர்ச்சி வலுவாகவே உள்ளது.

இந்த வருட முதல் காலாண்டில் 214 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது. இதனை வருடாந்திர வகையில் பார்த்தால் P/E மதிப்பு 35க்கு அருகில் வருகிறது.

இது தற்போது சந்தையில் வர்த்தகமாகும் ICICI Prudential நிறுவனத்தின் P/E மதிப்போடு ஒத்து போகிறது.

அதனால் மலிவும் இல்லாமல் அதிகமும் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லலாம்.

அதே நேரத்தில் அடுத்து வரும் SBI Life நிறுவனத்தின் ஐபிஒவை விட மலிவாக உள்ளது.

அதனால் துறை சார்ந்து  எதிர்பார்க்கப்படும் அதிக வளர்ச்சியும், சந்தையில் இந்த ஐபிஒவிற்கு இருக்கும் மிந்தமிஞ்சிய தேவை கண்டு வாங்க பரிந்துரை செய்கிறோம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. வணக்கம்,
    எனக்கு icici Lombard 55 பங்குகள் கிடைச்சிருக்கு, ஒரு மாதம் வரைக்கும் தான் hold பண்ணமுடியும், விலை உயருமா, இல்ல முதல் நாள்ல வித்திடலாமா?
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. SME IPO பற்றிய தகவல்களை தங்களிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறாம்..

    பதிலளிநீக்கு