செவ்வாய், 18 செப்டம்பர், 2018

IRCON IPOவை வாங்கலாமா?

நாளை செப்டம்பர் 19 வரை IRCON நிறுவனத்தின் விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன.


அதனை வாங்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம்.



IRCON என்பது Indian Railway Construction Company என்பதன் சுருக்கமாகும்.

இந்திய ரயில்வேயால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தான் இதன் முதன்மை பணி.

90%க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்தியன் ரயில்வே வழியாகத் தான் வருகின்றன.


தற்போது நெடுஞ்சாலை, விமான கட்டுமான பணிகளை மேற்கொல்லுமளவு விரிவடைந்துள்ளது.

இது தவிர வெளிநாட்டு கட்டுமான ஆர்டர்களையும் பெற்றுக் கொள்ள அதிவேகம் காட்டி வருகிறது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மினி ரத்னா நிறுவனம்.

கடன் எதுவும் கிடையாது. அதிக அளவில் டிவிடென்ட் வழங்கி வருகிறது.

தற்போது 22000 கோடி அளவு ஆர்டர்களை கையில் வைத்துள்ளது.

இதெல்லாம் இந்த நிறுவனத்தின் சாதகமான அம்சங்கள்.

அண்மையில் புதிய ரயில்கள் விடுவதை விட ரயில்வே கட்டுமான பணிகளில் பிஜேபி அரசு அதிக முனைப்பு கட்டி வருகிறது. இதுவும் இந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு 10% அளவே வருமானம் மற்றும் லாபத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இன்னும் ரயில்வே பெரிதளவு முதலீடு செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் வருங்காலங்களில் ரயில்வேயின் பங்கு போக்குவரத்தில் முக்கியத்துவம் பெரும் சூழ்நிலையில் இந்த நிலை மாறலாம்.

ஆனால் பெருமளவு ரயில்வே, மத்திய அரசுகளை சார்ந்து இருப்பது பாதகமான விடயமாக உள்ளது.

ஒரு பங்கிற்கு 475 ரூபாய் என்று விலை வைத்துள்ளார்கள். சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 ரூபாய் குறைவான விலை தான்.

அதில் பார்க்கும் போது P/E மதிப்பு 10க்கு அருகில் தான் வருகிறது.

மிகவும் மலிவான பங்கு விலை தான். அதனால் இதன் ஐபிஒவிற்கு விண்ணப்பிக்க பரீசீலிக்கலாம்.

அதிக அளவில் டிவிடென்ட் கொடுக்கும் நிறுவனம் என்பதால் ரிஸ்க் குறைவாக எடுப்பவர்கள் இந்த பங்கினை நீண்ட கால முதலீட்டிற்கு பரிசீலிக்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக