சனி, 29 செப்டம்பர், 2018

PayTm நிறுவனத்தை அலற வைக்கும் GPay

தற்போது டிவிக்களில் Google நிறுவனத்தின் GPay தொடர்பான விளம்பரங்கள் அதிகம் வருவதை காண முடிந்து இருக்கலாம்.


அதிலும் விளம்பரங்கள் அடிக்கடி காண்பிக்கப்படும் வேகத்தை கவனித்தால் பெரிய அளவில் விரிவாக்கத் திட்டம் ஒன்று கூகுளில் இருப்பதையும் யூகிக்க முடிகிறது.



அதனால் தான் PayTm நிறுவனம் டேட்டாவை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று புகார் கொடுக்கும் அளவிற்கு சென்று விட்டார்கள்.

ஏன் இப்படி பயப்படுகிறார்கள்? என்பதை டெக்னிகல் மொழியிலே தெரிய முற்படுவோம்.

அடிப்படையில் PayTm பிரபலமானது Wallet என்று சொல்லப்படும் முறையில் தான்.

இந்த வாலேட்டில் நமது பணத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

அந்த பணத்தை கடைகளில் பயன்படுத்தும் போதோ, நண்பர்களுக்கோ கொடுக்கும் போதோ மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி அனுப்ப முடியும்.

ஆனால் அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை பணத்தை வாங்குபவர்களும் PayTm கணக்கை வைத்து இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனை தான் GPayக்கு சாதகமாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசு BHIM போன்ற ஆப் வழியாக UPI Payment முறையை அறிமுகப்படுத்தியது.

உடனே பணம் கிடைக்கும் IMPS முறையில் சில மாற்றங்களுடன் வந்த முறை என்று சொல்லலாம்.

IMPS முறையில் பணம் அனுப்புவதாக இருந்தால் வங்கி கணக்கு எண், IFSC Code போன்றவை கட்டாய தேவை.

அதற்கு பதிலாக ஈமெயில் போல் ஒன்றை அடையாளமாக கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?

அது தான் UPI Payment என்பதாகும்.

இது உதாரணத்திற்கு, ganesan@kotak என்பது போல் இருக்கும்.

ganesan@kotak என்று பதிந்து 1000 ரூபாயை அனுப்பி விட்டால் உடனே சென்று விடும்.

வங்கி கணக்கை Add Payee வழியாக இணைத்து ஒரு நாள் காத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

இதனை தான் Google Pay தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது.

GPayயை பயன்படுத்தி எந்த வங்கி கணக்கு வைத்து இருப்பவருக்கும் உடனே பணத்தை அனுப்பி விட முடியும்.

அதிலும் GMail வழியாக அணைத்து நண்பர்கள் தொடர்புகளையும் அவர்களது GPay கணக்குகளையும் இணைத்து நம் கண் முன்பு காண்பிக்கிறார்கள்.

பயன்படுத்துவதற்கு PayTm ஆப்பை விட மிக எளிதாக இருப்பதால் அறிமுகப்படுத்தி ஆறு மாதங்களில் 50 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு ஹோட்டலுக்கு குழுவாக செல்கிறோம். சாப்பிட்ட பிறகு பில்லை பகிர வேண்டும் என்றால் GPS Enable செய்து விட்டால் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதையும் காண்பித்து விடுகிறார்கள்.

'Peoples are more believing Google than God' என்று ஆங்கிலத்தில் வேடிக்கையாக சொல்வார்கள். அந்த அளவிற்கு கூகிள் மேல் இருக்கும் நம்பிக்கையையும் GPayக்கு சாதகமாக உள்ளது.

அவர்கள் இந்த Payment முறையில் தாமதமாக வந்தாலும் மிக எளிதான நம்பிக்கையான ஒரு முறையை கொண்டு வந்துள்ளார்கள்.

அதிலும் GPayயில் இணைந்தால் CashBack, பணம் அனுப்பினால்,வந்தால் ScratchCard வழியாக குலுக்கல் பணம் என்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முறைக்கு எவரும் இணையாமல் இருக்க முடியாது.

மேற்சொன்ன காரணங்கள் தான் PayTm நிறுவனத்தை கோர்ட்டில் புகார் கொடுக்குமளவு செல்ல வைத்து உள்ளது.

தனிப்பட்ட அனுபவத்தில் GPayயை பரிந்துரை செய்கிறோம். இணைவதற்கான லிங்க் இங்குள்ளது.
GPay Invitation

ஒரு தடவை பணத்தை அனுப்பி டெஸ்ட் செய்தால் 51 ரூபாய் உங்களது வங்கி கணக்கிற்கு உடனே வரும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக