திங்கள், 3 பிப்ரவரி, 2014

விடுமுறை அனுபவங்கள்...

கடந்த மூன்று வார கால விடுமுறை நேற்று முடிந்தது. சொந்த ஊரில் உறவுகளுடன், நண்பர்களுடன் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலம் இருந்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் சொந்த ஊர் தான்..


நல்ல வேளையாக மின் தடை அவ்வளவாக இல்லை. இணையத்தின் வேகம் மிக மெதுவாக இருந்ததால் கணினி பக்கம் வர முடியவில்லை. அதுவும் ஒரு நல்ல அனுபவமே. அதனால் பதிவுகளும் எழுத முடியவில்லை. நிறைய மின் அஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கு ஒவ்வொன்றாக பதில் எழுதுகிறோம்.

விடுமுறையில் சில காலம் பெங்களுருக்கு வர நேர்ந்தது. அங்கு புதிதாக இணையத்தில் உணவு ஆர்டர் செய்யும் justeat.in தளத்தின் விளம்பரங்களை பரவலாக பார்க்க முடிந்தது. சென்ற வருடம் பங்குச்சந்தையில் கலக்கிய justdial போன்று justeat தளமும் பிரபலமாக அதிக வாய்ப்புள்ளது.IT வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது போல் தெரிகிறது. கணினி பொறியியல் முடித்தவர்கள் பலரும் வங்கித் தேர்வுக்கு ஆயத்தமாகி வருவதைக் காண முடிந்தது.

ரியல் எஸ்டேட் பயங்கர வீழ்ச்சியடைந்துள்ளது போல. விசாரித்ததில் ஏற்கனவே விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதும், அரசின் விளை நிலங்களை பிளாட் போட்டு விற்க உள்ள தடையும், அரசின் நில மதிப்பு கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் ஏற்பட்ட பத்திரப் பதிவு செலவுகளும் காரணமாக தெரிந்தன. அதனால் approved பிளாட்களை மட்டும் வாங்குங்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் விலைவாசி கணிசமாக கூடி உள்ளது. பெங்களூரில் ஒரு டீ சாகர் ஹோட்டலில் 15 ரூபாய். போன வருடம் 10 ரூபாய் என்று நியாபகம். இப்படியே போனால் நகரத்தில் வாழ குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் மாத வருமானம் வேண்டும் போல் தெரிகிறது.

ஊரில் நண்பர்கள் வருமான வரி சலுகைகளுக்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள். நமது தளத்திலும் இந்த வாரம் இதனைப் பற்றி எழுதுகிறோம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: