செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இலவசத்தில் வீழும் தமிழகம்..

சில நாட்களாக பதிவு எழுதமுடியவில்லை. சோம்பலும், ஒரு வகை அலுப்பும் தான் காரணம். அதனால் தான் மொக்கைப் பதிவுகளை எழுதுவதற்கு பதிலாக கொஞ்சம் பொறுத்து இருந்து எழுதலாம் என்று இருந்து விட்டேன்.


இந்த இடைவெளியில் நிறைய நிகழ்வுகள். ஒவ்வொன்றாக..

இந்த மாதம் வெளியிடப்பட்ட GDP அறிக்கையில் தமிழ்நாடு கடைசி இடத்தில். அதாவது தேசிய சராசரிக்கும் கீழாக 4.13%. எமக்கென்னவோ இது வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றே தோன்றுகிறது. காரணம் கடந்த வாரம் நமது நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் தான்.



கடந்த கலைஞர் அரசு தொடங்கி வைத்த இத்தகைய பட்ஜெட் அணுகுமுறை இன்றும் தொடர்கிறது. பட்ஜெட்டில் பாதி தொகை அரசு ஊழியர்கள் சம்பளம். மீதி பாதியில் பாதி இலவசங்களுக்கு. ஆக மொத்த பட்ஜெட்டில் வெறும் 25% மட்டும் உண்மையான வளர்ச்சி திட்டங்களுக்கு. வாழ்க பட்ஜெட்! இப்படியே போனால் தமிழகம் தென்னகத்தின் பீகாரானாலும் ஆச்சரியமில்லை. இரண்டு கட்சிகளும் இல்லாமல் ஒரு மாற்றம் கட்டாயம் தேவைப்படுகிறது.

அதற்கடுத்து சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். உண்மையில் நல்ல பட்ஜெட். தேர்தல் நிலையிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடி வாங்கி காணப்படும் உற்பத்தி துறைக்கு சில சலுகைகள் கொடுத்தது சந்தையிலும் நேர்மறையாக எதிரொலித்தது. ஆனாலும் வரி சலுகை நெல்லுக்கு மட்டும். அரிசிக்கு கிடையாது என்று சொன்னது அவருக்கு ஒரு திருஷ்டியான காமெடி. தவறை பிடி வாதம் இல்லாமல் சீர் செய்தற்காக அவருக்கு ஒரு சல்யூட்.

இதற்கிடையே பாலு மகேந்திரா மரணம். மிகவும் பாதித்தது. அவரது படங்கள் அனைத்தையும் பார்த்ததில்லை. ஒவ்வொன்றாக பார்க்கிறேன். அவருடைய இயக்கத்தை விட ஒளிப்பதிவு மிகவும் பிடிக்கிறது. தமிழ்மணத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏக விமர்சனங்கள். இறப்பின் பின் நல்லவைகளை மட்டும் எடுப்போம். ஆத்மா சாந்தி அடையட்டும்!

வருமான வரி பதிவுகளின் தொடர்ச்சியில் வீட்டுக் கடனும், வருமான வரியும் என்ற தலைப்பில் இரு நாட்களில் கட்டுரை எழுதுகிறோம். இந்த தொடர் பல பேருக்கு பயனாக இருந்தது போல் தெரிகிறது. கருத்துகளுக்கு நன்றி...

அடுத்து பங்குகளின் சரியான விலையை கணக்கிடுவதற்காக ஒரு வெப் கால்குலேட்டர் தயார் செய்து வருகிறோம். விரைவில் விளக்கங்களுடன் பகிர்கிறோம்.

கடந்த சில நாட்களாக எழுத்தாளர் அமுதவனின் பதிவுகளைப் படித்து வருகிறேன். நன்றாக உள்ளது. நேரம் இருந்தால் நீங்களும் படித்து பாருங்கள்...http://amudhavan.blogspot.com


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. வெப் கால்குலேட்டரை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் தாங்கள் தரும் கருத்துகளுக்கு நன்றி! இன்னும் ஒரு வாரத்தில் கால்குலேட்டரை பற்றி எழுதுகிறோம்.

      நீக்கு
  2. நானும்்எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஒரு வாரத்தில் கால்குலேட்டரை பற்றி எழுதுகிறோம்.

      நீக்கு