திங்கள், 3 பிப்ரவரி, 2014

சந்தை சரிகிறது..வாங்கி போடுங்க..

இன்று சென்செக்ஸ் இருபதாயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க உற்பத்தி துறை புள்ளி விவரங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்று சொல்லப்படுகிறது.


இது போக பல காரணங்கள் ஒவ்வொரு நாளும் சொல்லப்படுவதால் கடந்த இரு வாரங்களாக சந்தை சரிந்தே காணப்படுகிறது.

சந்தை உயர்வதற்கு வலுவான காரணங்கள் இல்லாததால் எதிர்மறைச் செய்திகளை சந்தை  தேடி அலைகிறது என்றே கருதுகிறேன்.

இந்த நிலை குறைந்தபட்சம் இந்தியப் பொது தேர்தல் வரை நீடிக்கும் என்று நினைக்கிறேன். அது வரை நல்ல செய்திகளுக்கு கொஞ்சம் பஞ்சமாகத் தான் இருக்கும் போல் தெரிகிறது.சென்ற வருடம்(2013) முதல் பாதியில் 19000 புள்ளிகளில் உழன்று கொண்டு இருந்த சந்தை பிற்பாதியில் 21000 புள்ளிகள் வரை அழைத்து சென்றது. அது போல் தான் இந்த வருடமும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

அதனால் இந்த வருட முதல் பாதியில் நல்ல பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி பிற்பகுதியில் நல்ல லாபத்தை எதிர் பார்க்கலாம்.

நமது தள போர்ட்போலியோ சரிவிற்கு பின்னும் குறைந்த பட்சம் 20% லாபத்தில் இயங்கும் என்று நினைக்கிறேன். இந்த இணைப்பில் போர்ட்போலியோவை பார்க்கலாம். (இன்றைய நிலவரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை)

முதலீடு போர்ட்போலியோ

நமது போர்ட்போலியோவில் உள்ள சில பங்குகள் தற்போது நல்ல விலைகளில் கிடைக்கின்றன. அதில் HCL, Astra Microwave, Finolex Cables, Britannia, Amara Raja Batteries போன்ற பங்குகள் நல்ல விலைகளில்  கிடைக்கின்றன.

இதில் HCL, Astra Microwave, Amara Raja Batteries போன்ற நிறுவனங்கள் மிக நல்ல நிதி நிலை அறிக்கைகளைக் கொடுத்துள்ளன. இதனைத் தனிப் பதிவில் பார்க்கலாம்.

இந்த வருடம் முடிவில் குறைந்தபட்சம் நமது போர்ட்போலியோ 35% லாபம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: