செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்?

வருமான வரி பதிவு செய்யும் காலம் நெருங்கி வருவதால் இந்த வாரம் வருமான வரி தொடர்பான பதிவுகளை அதிகமாக எழுதுகிறோம்.


இந்திய அரசின் புள்ளி விவரப்படி, வெறும் 3% மக்களே வருமான வரி கட்டுகிறார்கள். அப்படி என்றால் மீதி  97% பேரும் இரண்டு லட்சம் வருட வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்களா? இல்லை..அமெரிக்காவில் 45% மக்கள் வரி கட்டுகிறார்களாம். எப்படி இவ்வளவு வரி ஏய்ப்பு எளிதாக நடக்கிறது?

முதலில் நமது நிதி கட்டமைப்பு ஒன்றும் அந்த அளவு சரியாக இல்லை. யாருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது மிக கஷ்டமாக உள்ளது.


தற்போதைய கணினி யகத்தில் இதனை செயல்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதற்கு முதலில் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.இயல்பாகவே நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் வீட்டு முன் ஓடும் சாக்கடையையோ, தெருவையோ சுத்தமாக வைத்திருக்க அவ்வளவு அக்கறை செலுத்துவதில்லை. அந்த அளவு மற்ற நாட்டு மக்களை விட கொஞ்சம் நமக்கு சுயநலம் ஜாஸ்தி.

அது போல் தான் வரி கட்டி நமக்கு என்ன பலன் என்று யோசித்தால் ஒன்றும் கிடையாது. எங்கோ படித்த நியாபகம் இருக்கிறது. வரி கட்டினால் கிடைக்கும் ஒரே பலன் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும் என்று. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் எந்த பலனும் இல்லை என்பது் உண்மை.

ஊரில் போய்  நான் இந்த அளவு வரி கட்டி இருக்கேன் என்று சொன்னால் இவ்வளவு வரி கட்டும் அளவு வருமானம் வருகிறது என்று பெருமையாக பார்ப்பதில்லை. அந்த சமயத்தில் நம்மை ஒரு ஏமாளி போல் பார்க்கிறார்கள்.

இப்படி இருக்கிற நம்மகிட்ட வரி கட்டுவதற்கு உற்சாகம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு அதை செய்வது கிடையாது. வரியை ஒழுங்காக கட்டுகிற அந்த மூன்று சதவீத மக்களையும் அடிமை சிக்கிட்டான் என்று சக்கை மாதிரி பிழிந்து விடுகிறது.


இப்போதாவது நிலைமை பரவாயில்லை. 1996க்கு முன் வரி விகிதத்தை பார்த்தால் தலை சுற்றி விடும். ஒரு லட்சம் மேல் வருமானம் இருந்தால் 50% வரி.

பாவம் தான் எங்க அப்பா காலத்து ஆட்கள். சம்பாதித்து அரசாங்கத்துக்கு கட்டுவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம் என்று இருந்து விடுவார்கள்.

சில ஐரோப்பிய நாடுகளில் 50% வருமான வரி என்று கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அதற்குரிய பலன்கள் ஓய்வு சமயங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் நமக்கு வரியை வாங்குவதோடு சரி. கிடைக்க வேண்டிய ரிடர்ன் கூட ஒழுங்காக கிடைப்பதில்லை.

அப்படி கிடைக்கிற வரி ஒழுங்காக பயன்படுத்தப்படுகிறதா  என்றால் அங்கு தான் முக்கியப் பிரச்னை. அரசியல்வாதிகள், புரோக்கர், காண்ட்ராக்டர் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்து இருக்கிறது. வரி வசூலில் ஐம்பது சதவீதம் கூட ஒழுங்காக பயன்படுத்தவது கிடையாது. மீதி ஐம்பது சதவீதம் கருப்பு பணமாக மாறி விடுகிறது.

சிதம்பரம்ஜி சொல்கிறார். மக்கள் சரியாக வரி கட்ட வேண்டும்.

மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் வரியை ஒழுங்காக பயன்படுத்துங்கள் என்று..

அப்படின்னா யாரு முதலில் இந்த டைட் லாக்கை விட்டுக் கொடுப்பது?

English Summary:
<!–- google_ad_section_start -–> Why Indians are doing more Tax invasions? No initiative for getting back black money. No awarenes on Income tax to public. No monitoring systems with business man.
<!–- google_ad_section_end -–>

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. இந்தியாவில் உள்ள பிரச்னை. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று XX சதவீத் மக்களும் பாடிக் கொண்டிருக்கிறோம்.

  மீதி XX சதவீத மக்களை பிழைக்கத் தெரியாத மடையர்கள் என்று அவர்கள் குடும்பத்தினரே சொல்கிறார்கள்.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோபாலன்! இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிப்பது மிக கடினமே

   நீக்கு
 2. எனக்குத் தெரிந்த வரை வருமான வரி விதிப்பின் சதவிகிதத்தைக் குறைக்கவேண்டும்.
  60 வயது ஆகிவிட்டால் அவர்களுடைய ஆயுள் காலம் வரை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
  வருமான வரி கட்டுவபர்களுக்கு இரயில்,விமானம்,பாஸ்போர்ட்,விசா என அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  பதிலளிநீக்கு