வியாழன், 20 பிப்ரவரி, 2014

அதிர வைத்த ஒரு லட்சம் கோடி பேஸ்புக் டீல்

இந்த பதிவு நேற்று பேஸ்புக் நிறுவனம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு whatsapp நிறுவனத்தை வாங்கியது பற்றியது.


whatsapp என்பது ஆண்ட்ராயிட், ஐபோன் போன்று பல வகை தளங்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஒரு சாட் மென்பொருள்.

GPS போன்ற பல பயன்பாடுகளை தமது சாட்டில் ஒருங்கிணைத்து இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக மிக பிரபலமாக இருந்தது. அதாவது ஒரு நாளைக்கு மட்டும் 12 மில்லியன் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தது.


வெறும் 55 பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் இன்று ஒரு லட்சம் கோடிக்கு அருகில் பேஸ்புக் நிறுவனத்துடன் கை மாறியுள்ளது.

இந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளை மட்டுமே எடுத்தக் கொண்டுள்ளது.

இந்த டீலின்படி 4 பில்லியன் டாலர் பணமாகவும், மீதி பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளாகவும் வழங்கப்படும்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரைன் நான்கு வருடங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்தின் வேலைக்கு நிராகரிக்கப்பட்டு விரக்தியில் தொடங்கிய நிறுவனம் தான் whatsapp.

கொஞ்சம் கற்பனையும், திறமையான கடின உழைப்பும் இருந்தால் தற்போதைய காலத்தில் எதையும் அடைந்து விடலாம் போல..

ஏனோ நமக்கு மட்டும் இதெல்லாம் தோன்ற மாட்டிக்கிறது என்பது தான் புரியவே இல்லை? அதான் ஒண்ணுமே பண்ணாமல் ஸ்பெக்ட்ரத்திலே ஒரு லட்சம் கோடி கிடைக்குதே...

மற்றொரு ஆர்வமான செய்தி..

இந்தியாவின் சர்க்கரை தொழிற்சாலை துறைக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் போல் தெரிகிறது.இன்று Wilmar என்ற சிங்கப்பூர் நிறுவனம் Renuka Sugars என்ற பிரபல இந்திய சர்க்கரை நிறுவனத்தில் 2500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆனாலும் இந்த டீல் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவை விட குறைவான தொகைக்கு நடந்துள்ளதால் இன்று பங்குச்சந்தையில் Renuka பங்குகள் மதிப்பு பத்து சதவீதம் குறைந்தது.


இருந்தாலும் நமக்கு கிடைத்த ஒரு குறிப்பு.

இந்தியாவில் சர்க்கரை துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று சர்வேதச முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசும் சுகருக்கு சில வரிகளைக் குறைத்துள்ளது என்பதும் ஒரு போனஸ்..
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக