செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

(16-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

இந்த கட்டுரை வருமான வரியை சேமித்து, அதே நேரத்தில் அதிக ரிடர்ன் தந்து உதவும் ELSS Mutual Fund பற்றியது.

வருமான வரி சேமிப்பதற்கு 80Cயின் படி அரசு சில சேமிப்பு வழிகளை கொடுத்துள்ளது. இந்த சேமிப்பில் இருக்கும் தொகைக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

உதாரணத்திற்கு 10% வருமான வரி படியில் வருபவர் 15,000 ரூபாயும், 20% வருமான வரி படியில் வருபவர் 30,000 ரூபாயும், 30% விகிதத்தில் வருபவர் 45,000 ஒரே வருடத்தில் சேமிக்க முடியும்.

பார்க்க: வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?




இந்த சேமிப்பானது இன்சூரன்ஸ் திட்டங்கள், பிக்ஸ்ட் டெபாசிட், NSC, மியூச்சல் பண்ட் என்று பலவற்றிற்கும் வரும். இதில் மியூச்சல் பண்ட் தவிர மற்ற எல்லாவையும் குறைந்தது ஐந்து வருட முதலீடுகளாகும்.

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு மட்டும் மூன்று ஆண்டுகளே லாக்-இன் டைம். அதனால் குறைந்த காலம் மட்டுமே வரி விலக்கு முதலீடுகளை வைத்துக் கொள்பவர்கள் மியூச்சல் பண்ட்டை விரும்பலாம்.


வருமான வரி விலக்கு பெறும் மியூச்சல் பண்டை ELSS Mutual Fund என்று குறிப்பிடுவார்கள். ELSS என்றால் Equity Linked Savings Scheme என்பதன் சுருக்கம்.

ம்யூச்சல் பண்ட் பற்றி அறிமுகமில்லாதவர்கள் இதற்கு முன் நாம் எழுதிய ம்யூச்சல் பண்ட் தொடரினைப் பார்க்கவும். இதில் ஐந்து பாகங்களில் மியூச்சல் பண்டை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றி விளக்கி இருக்கிறோம்.

ELSSன் பெரும் பகுதி பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இந்த முதலீடும் பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு உட்பட்டது.

மற்ற மியூச்சல் பண்ட்களில்  இருந்து எப்படி வேறுபடுகிறது என்றால் இந்த நிதியின் கட்டாய முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை வெளியில் எடுக்க முடியாது. இதில் கிடைக்கப்படும் ஈவுத் தொகையும் (Dividend) வருமான வரி விலக்கு பலனைப் பெறுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக பெரிதான தொகை எதிர் பார்ப்பவர்கள் DIVIDENDக்குப் பதிலாக GROWTH என்ற முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

மூன்று வருடங்களுக்கு இந்த நிதிகள் லாக் செய்யப்படுவதால் நிதி மேலாளர்களுக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கிறது. அதனால் அவர்களால் RISK மற்றும் RETURN என்ற இரண்டு Rகளையும் எளிதில் சமநிலைப்படுத்த முடிகிறது.

சிறிது RISK பயம் இல்லாதவர்கள் இந்த முதலீட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

மற்ற ம்யூச்சல் பண்ட்களைப் போலவே வங்கிகளிலும், டிமேட் கணக்குகள் மூலமும் ELSS நிதிகளை வாங்கலாம்.

டிமேட் கணக்குகளில் தரப்படும் ம்யூச்சல் பண்ட் ஸ்டேட்மெண்ட்களை அலுவலகங்களில் சமர்ப்பித்தல் மூலம் வருமான வரி விலக்கை பெறலாம்.

பொதுவாக ELSS fundல் முதலீடு செய்பவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் அலுவலகத்தில் Investment Proof கேட்கும் போது அவசரம் அவசரமாக முதலீடு செய்வது. அந்த அவசரத்தில் தேர்ந்தெடுக்கும் போது சில தவறான நிதிகளில் முதலீடு செய்து விடுகிறோம். அதனால் பொறுமையாக ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். SIP முறையில் மாதந்தோறும் முதலீடு செய்வது ரிஸ்க்கை பெரிதளவு குறைக்கும்.

ம்யூச்சல் பண்ட்களை தேர்ந்தெடுப்பதற்கு கீழே உள்ள எமது கட்டுரைகளை படித்து வாருங்கள்.




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. GROWTH என்ற முறை நல்லது என்று நண்பரும் சொன்னார்... விளக்கத்திற்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு