வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?

இந்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறும் வழி முறைகளைப் பற்றி விவரமாக பார்ப்போம்.


கடந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்று எழுதி இருந்தோம். நல்ல ரெஸ்பான்ஸ். நன்றி!

அந்த கட்டுரையைக் காண இங்கு செல்லவும்.
வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வங்கிகளின் காப்பீடு, முதலீடு முகவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவசர கோலத்தில் ஏதாவது ஒரு முதலீடு செய்து வரியை சேமிக்கலாம் என்று நிறைய பேர் இந்த திட்டங்களில் சேருவார்கள். அப்புறம் தான் அதில் உள்ள எதிர்மறைகள் தெரிய வரும்.


எமக்கும் சில அனுபவங்கள் உண்டு. ஆரம்ப காலங்களில் சில முகவர்களிடம் வரி சேமிக்க சில முதலீடுகள் செய்து ஏமாற்றம் அடைந்தது உண்டு. அதில் ஒன்று ULIP Insurance என்ற திட்டம். அதன் பிறகு தான் தெரிந்தது. இதனை விட FDல் அதிக பலன் உள்ளது. இதனைப் பற்றி தனியாக கட்டுரை எழுதுகிறோம்.

இந்த பதிவில் வரியைக் குறைப்பதற்காக உள்ள வழிமுறைகளை விரிவாக பார்ப்போம்.


சம்பளத்திலிருந்து

முடிந்த வரை உணவு, தொலைபேசி, பயணம் போன்றவற்றை அலோவன்ஸ் என்ற பெயரில்  உங்கள் நிறுவனத்திடம் வாங்கிக் கொள்ளுங்கள்.

  • பயணத்திற்கு என்று மாதம் 800 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரசீது கொடுக்க வேண்டிய தேவை இல்லை. (Conveyance Allowance)
  • உணவிற்கு என்று மாதம் 2500 வரை sodexo கூப்பன் பெற்றுக் கொள்ளலாம்.(Food Allowance)
  • தொலைபேசி ரசீதைக் காட்டி வரி விலக்கும் பெறலாம். (Telephone Allowance)

80C முதலீடுகள்

இந்த விதியின் கீழ் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்பட முதலீடுகள் செய்து கொள்ளலாம்.
இதில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகள் கீழே உள்ளது.

  • PPF : இது 15 வருட கால முதலீடு. 8.5% வட்டி அளிக்கப்படுகிறது.
  • Insurance: இதில் LIC நிறுவனத்தின் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் மிக நீண்ட கால முதலீடு என்பதால் கொஞ்சம் நம்பகத் தன்மை தேவைப்படுகிறது.
  • 5 Year Fixed Depostis: அண்மையில் இது 80Cன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ELSS Mutual Fund: கொஞ்சம் அதிக ரிடர்ன் எதிர் பார்ப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இதனுடைய முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள்.
  • National Saving Certificate: இது மத்திய அரசின் பத்திரம். 8% வட்டி அளிக்கிறது.

மற்றபடி ULIP Insurance, ICICI Prudential என்று பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை நாம் பரிந்துரை செய்ய விரும்பவில்லை.

இந்த ஒரு லட்சம் என்ற வரம்பானது தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF தொகையும் சேர்த்து தான். அதனால் அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

மற்றவை

  • மருத்துவம்: இது போக 15000 ரூபாய்க்கு வரம்பிற்கு உட்பட்டு மருத்துவ செலவுகளையும் காட்டிக் கொள்ளலாம்.
  • HRA: நீங்கள் வீட்டு வாடகை செலுத்துபவராக இருந்தால் உங்கள் HRA பொறுத்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இது அதிக வரியினை சேமிக்க உதவும்.
  • வீட்டுக் கடன்: வீட்டு வங்கிக் கடன் எடுத்து இருந்தால் செலுத்தி இருந்த அசலை 80Cன் கீழ் உள்ள ஒரு லட்ச விலக்கில் சேர்த்துக் கொள்ளலாம். வட்டியை எதிர்மறை வருமானம் என்ற பிரிவின் கீழ் விலக்கு பெறலாம். வரி விலக்கு பெறுவதற்கு வட்டிற்கான உச்ச வரம்பு 150000 ரூபாய் ஆகும். இந்த முறையில் வரி விலக்கு பெற்றால் HRA வரி விலக்கு பெறசில நிபந்தனைகள் உள்ளன.
இது போக இன்னும் சில வழிமுறைகள் உள்ளன. அதில் பொதுவானதையும் எளிதானதையும் மட்டும் மேலே எடுத்து உள்ளோம்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்று பார்ப்போம்.


கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அவரது PF பிடித்தம் வருடத்திற்கு 40000 ரூபாய். இது போக ELSS Mutual Fundல் முப்பதாயிரம் முதலீடு செய்கிறார். இதன் பின் இந்த வருட வீட்டுக் கடனுக்காக 40000 ரூபாய் அசலாக கட்டி இருக்கிறார். வட்டி இரண்டு லட்சம் கட்டி இருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு வரி சேமித்து இருப்பார்?

மொத்த வருமானம்: 12,00,000

எந்த வித வரி விலக்கும் இன்றி மேலே உள்ள வருமானத்துக்கு உள்ள வரி:  12,00,000 = 60,000 + 1,00,000 + 30,000 = 1,90,000

அலோவன்ஸ்:
உணவு: 30,000 (12*2,500)
பயணம்: 960 (12*800)
தொலைபேசி: 18,000 (12*1,500)
மொத்தம்: 48,960 ரூபாய்

80C முதலீடுகள்:
PF: 40,000
ELSS Mutual Fund: 30,000
வீட்டுக் கடன் அசல்: 40000
Total: 1,10,000

ஆனால் அனுமதிப்பட்ட உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாய் மட்டும். அதனால் பத்தாயிரத்தை நீக்கி ஒரு லட்சத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
தற்போது மொத்தம்: 1,00,000

மருத்துவ செலவு: 15,000

வீட்டுக் கடன் வட்டி - 2,00,000
ஆனால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு 1,50,000 மட்டும். அதனால் 1,50,000 என்று எடுத்துக் கொள்வோம்.
வரி விலக்கு பெறும் வீட்டுக் கடன் வட்டி - 1,50,000

மொத்த வரி விலக்கு தொகை: அலோவன்ஸ் + 80C முதலீடுகள்: + மருத்துவ செலவு + வங்கி வட்டி

மொத்த வரி விலக்கு தொகை: 48,960 + 1,00,000 + 15,000 + 1,50,000 = 3,13,960

வரி விலக்கு கழித்த பிறகு வருமானம்: 12,00,000 - 3,13,960 = 8,86,040

தற்போது வருமான வரி: 30,000 + 77,208 = 1,07,208

அப்படி என்றால் வரி சேமிப்பு = 1,90,000 - 1,07,208 = 82,792

அதாவது வரி விலக்குகளை ஒழுங்காக பயன்படுத்தினால் கணேசன் தன்னுடைய தோராயமாக ஒரு மாத சம்பளத்தை சேமிக்கலாம். (82,792). இதுவும் ஒரு பெரிய சேமிப்பு தானே.

ஒரு தடவை மட்டும் வரி  கணக்குகளை நீங்கள் போட்டு பாருங்கள். அப்புறம் வாழ்க்கை முழுவதும் உங்கள் வரியை நீங்களே மேலாண்மை செய்து கொள்ளலாம்.

அடுத்தக் கட்டுரையில் வருமான வரியை இணையம் மூலம் எவ்வாறு எளிதாக பதிவு செய்யலாம்  என்று பார்ப்போம்...

English Summary:
<!–- google_ad_section_start -–> Ways to get income tax exemption from Indian Govt.. Insurance, Pension, Mutual funds are helping to save income tax.
<!–- google_ad_section_end -–>

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

25 கருத்துகள்:

  1. வீட்டுக்கடன் வட்டியை வருமான வரிக்காக காட்டினால் hra பெற முடியாது என்கிறீர்கள்.. ஆனால் பெற முடியும் என்று சில வல்லநுர்கள் கூறிகிறார்களே.. தயவு செய்து விளக்கவும்
    R பதரிநாத்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வாங்கிய வீடு அலுவலகத்தில் இருந்து 25kmக்கு அப்பால் இருந்து வாடகை வீட்டில் இருந்தால் HRA யிலும் விலக்குப் பெறலாம்.

      நீக்கு
    2. எனது வீடு 100+ KM அப்பால் உள்ளது . ஆனாலும் ஆஃபீஸில் HRA/ House இரண்டில் ஒன்னு தான் தர முடியும்னு சொல்லுறாங்க ...

      நீக்கு
    3. நண்பரே! வீட்டுக்கடன் மற்றும் வருமான வரியையும் இணைத்து ஒரு தனிப் பதிவு எழுதுகிறோம். அப்பொழுதுதான் தெளிவாகப் புரியும்! தங்கள் கேள்விக்கு நன்றி!

      நீக்கு
  2. How do they calculate the Allowances?

    In my Payslip, they have mentioned Conveyance Allowance and Medical allowance. Is that comes under allowance category?

    Please explain in detail.

    Thanks
    Krish

    பதிலளிநீக்கு
  3. மிகவும் எளிதாக உள்ளவற்றை சொல்கிறீர்கள் - விளக்கமாக... நன்றி...

    அடுத்த பகிர்வை ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  4. Any specificity to Govt Employees? There is no Allowance to travel, food and phone bills in TN? Then I browsed , term for PPf is mininmum 15 years...

    Thanks a lot for a post...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I don't have much knowledge on Govt. employees payscale. While joining, we can ask these preferences in some organization

      நீக்கு
  5. ELSS Mutual Fund விவரங்கள் விரிவாக கிடைக்குமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தொடர்பாக தனிக் கட்டுரை எழுதுகிறோம் johnson!

      நீக்கு
  6. பயனுள்ள தகவல்

    நன்றி

    ரமேஷ்

    பதிலளிநீக்கு
  7. Hello,


    Currently I am paying two home loans. How do we calculate for Tax?

    Regards
    Krish

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. If you are declaring clearly rent from another house as income, then there is no problem for getting benefits of house loan. Full interest will be getting tax benefits.

      நீக்கு
    2. Yes i showed the rent from another house also. But what about if both loan Interest exceeds 1,5L.

      Each home loan i can use 1.5L for Interest or both?

      Regards
      Balakrishnan N

      நீக்கு
    3. For the second house, you can get the full interest benefit. I mean, there is no limit like 1.5 lakhs. Only for self occupied house, the limit is 1.5 lakhs.

      நீக்கு
    4. This will be helpful..Thanks a lot.

      Regards
      Balakrishnan N

      நீக்கு
  8. வீட்டு வாடகை படி கழிவின் உச்சவரம்பு எவ்வளவு?

    பதிலளிநீக்கு