புதன், 19 பிப்ரவரி, 2014

வருமான வரியும் சின்ன வீடும்..

இந்த கட்டுரையில் வீட்டுக் கடன் மூலம் எப்படி அதிக பட்ச வருமான வரி பலனைப் பெறலாம் என்று பார்ப்போம்.


அடிப்படையில் நாம் ஒரு பாக்யராஜ் ரசிகர். அதனால் தான் இந்த ஒரு சில்லென்ற தலைப்பு:)

நாம் வீட்டுக் கடன் வாங்கும் போது மறைமுகமாக ஒரு பெரிய வருமான வரி  பலனைத் தருகிறது.

அதாவது வருமான வரி 80Cன் படி அனுமதிக்கப்படும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு திட்டங்களில் வீட்டுக் கடனுக்காக கட்டிய அசல் பணமும் ஒரு வகை முதலீடாக கருதப்படுகிறது.

வருமான வரி சேமிக்க எத்தனை வீடும் வச்சுக்கலாம்...

இது போல் வீட்டுக் கடனுக்காக கட்டிய வட்டி எதிமறை வருமானமாகக் கருதப்படுகிறது. எதிர்மறை வருமானம் என்பதால் வட்டியை உங்கள் மொத்த வருமானத்தில் இருந்தும் கழித்துக் கொள்ளலாம். இதற்கு அனுமதிக்கப்படும் உச்ச வரம்பு 1.5 லட்சம்.

ஆக பத்து லட்சம் மேல் வருட வருமானம் உள்ள ஒருவர் வீட்டுக்கடன் மூலம் 30% அளவு சேமிக்கலாம். அதாவது 13 லட்சம் வருமானம் இருந்தால் அசல் 1 லட்சம் + வட்டி 1.5 லட்சம் என்று மொத்தம் 2.5 லட்சத்துக்கு வருமான வரி விலக்கு பெறலாம். அதாவது 75000 ரூபாய் சேமிக்கலாம்.

அதே நேரத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுக்கடன் வாங்கி ஒன்றில் மட்டும் குடி இருக்கிறார். மற்ற சின்ன வீடுகளை:) வாடகைக்கு விட்டு இருக்கிறார் என்றால் அவரும் வருமான வரி பலனைப் பெறலாம்.

சின்ன வீட்டுக் கடன்களின் அசலுக்கான பலன் ஏதும் கிடையாது. ஆனால் வட்டிற்கான பலனை முழு அளவில் பெறலாம். அதாவது மேலே சொன்னது போல் வட்டிற்கு 1.5 லட்சம் என்ற உச்ச வரம்பு சின்ன வீடுகளுக்கு கிடையாது.

கீழே உள்ள படத்தினைப் பாருங்கள். விளக்கமாகப் புரியும்.


அப்படியே சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற்றையும் விலக்கிற்கு காட்டிக் கொள்ளலாம். அரசைக் கவிழ்க்கும் சக்தி கண்ணகியை விட மாதவிக்குத் தான் அதிகம் உண்டு போல...:)

ஆனால் இந்த பலனைப் பெற சின்ன வீடுகளின் மூலம் கிடைக்கும் வாடகையை ஒழுங்காக வருமான கணக்கு காட்டி விடுங்கள்.

English Summary:
Home loan principal and interest both gives income tax benefits in India and article shows how to benefit from second home loan.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக