இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.
அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். அடுத்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம்.
ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.
இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.
இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது.
இதற்கு கணக்கீட ஏதுவாக வருட ஆரம்பத்திலே IT declaration என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். அதன் படி மாத சம்பளத்தில் பிடித்து வருவார்கள்.
உலகில் பல நாடுகளில் வரி விதிப்பு ப்ளாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது வருகிற வருமானத்தில் 10% அல்லது 15% என்று பிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்தியாவில் slab system என்பது நடைமுறையில் உள்ளது. இது ஒரு நல்ல அணுகுமுறை. அதாவது அதிக வருமானம் வருபவர்களுக்கு அதிக சதவீத வரியும் அதற்கடுத்த நிலைகளில் குறைந்த சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் கீழே உள்ள வரம்பு நிலைகள் வருமான வரிக்காக கடைபிடிக்கப்படுகிறது.
~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி ஏதும் கிடையாது
~ இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை 10% வரி செலுத்த வேண்டும்.
~ ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை 20% வரி செலுத்த வேண்டும்
~ பத்து லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்
இந்த வரி வரம்பானது வீட்டு வாடகை, அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், வீட்டுக் கடன்கள் மற்றும் சில விலக்குகளைத் தவிர்த்துக் கணக்கிட வேண்டும்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார். அப்படி என்றால் அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
வருட வருமானம் - 12,00,000
வரி விலக்குகள்:
வீடு வாடகை - 96,000 (12*8000)
80c முதலீடு - 1,00,000
மொத்தம் - 1,96,000
நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000 - 1,96,000 = 10,04,000
இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்
இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,
~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்
~ 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்
~ 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,00 ரூபாய்
~ 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்
ஆக மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,32,000
அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,32,000 ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
மேலே உள்ள வருமான வரி வரம்பானது பெண்கள், வயதானவர்களுக்கு சிறிது சலுகைகளுடன் மாறுபடும்.
வரியே இல்லாவிட்டாலும் வருமான வரி சான்றிதழ் பெறுவது நல்லது. ஏனென்றால் வங்கிக்கடன் மற்றும் வெளிநாடு செல்லும் போது அதிகம் தேவைப்படும்.
இந்த இணைப்பில் உங்கள் வருமான வரியை எளிதாக கணக்கிடலாம்.
http://www.taxmann.com/tax-calculator.aspx
அடுத்த கட்டுரையில் வரிவிலக்கு பெறும் முதலீடுகளைப் பற்றி பார்ப்போம்.
வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?
English Summary:
<!–- google_ad_section_start -–> How to calculate income tax in India?. We can save some tax by investing in IT deduction eligible financial products.
<!–- google_ad_section_end -–>

கொடுக்கப்பட்ட உதாரணம் மிகவும் உதவும்... விளக்கத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளுக்கு நன்றி!
நீக்குஎனது + வட்டத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே .... எங்கள் தளத்தில் உங்கள் வலைவரியுடன் பகிர்ந்துகொள்கிறேன் :)
பதிலளிநீக்குhttp://poocharam.net/viewtopic.php?f=36&t=416
பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே!
நீக்குsimple understanding method
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஅய்யா,
பதிலளிநீக்குஎனக்கு 49 வயது ஆகிறது, மிலிடரி சர்வீஸ் முடித்து பென்ஷன் 15000 ரூபாயில் 1000 commutation பிடிப்பு போக 14000 கிடைக்கிறது , தற்போது அக்டோபர் மாதத்தில் இரூந்து வேறு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன், அதில் 18000 சம்பளத்தில் tds 1800 பிடித்தம் செய்து 16200 வருகிறது, எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை, என்னுடைய வருமான வரி எவ்வளவு ? 2000 பொது தள்ளுபடி இருக்கிறதா ? பையன் +2 படிப்பு செலவு கணக்கு காட்டலாமா ? இது டியூஷன் பீஸ் , hostel பீஸ் சேர்த்து 1 லட்சம் வருகிறது . TDS என்ற பெயரில் ஏற்கனவே மாத மாதம் 1800 , பிடித்ததை எப்படி claim செய்வது ?
தாங்கள் எனது வரி மற்றும் வரி சேமிப்பு விவரங்களை எனது ஈமெயில் முகவரி இல் தெரிய படுத்தவும்.
நன்றி
சிவா
அய்யா,

datashiva@gmail.com
தங்கள் கேள்விக்கு நன்றி! பதில் உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் கேட்கவும்!
நீக்குthank you
நீக்குஅருமையான பதிவு நண்பரே .... எங்கள் தளத்தில் உங்கள் வலைவரியுடன் பகிர்ந்துகொள்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குhello sir,
பதிலளிநீக்குpersonal loan ku thallupadi iruka.
iruntha atha yathula fill pannanum.
na.lingam@hotmail.com
நான் ஓய்வு பெற்ற பேராசிரியர். என்னுடைய பென்சனிலிருந்து வருமானவரி பிடித்தம் செய்து விட்டார்கள். நான் form 16 பூர்த்தி செய்து பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட்டேன். இது போக நான் வருமன வரி பைல் செய்யவேண்டுமா?
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசார், 2018-19 நிதிஆண்டு வருமானவரி கணக்கீடு தயவுசெய்து தெரிவிக்கவும்.மேலும் 2015-16 நிதி ஆண்டில் கூடுதல் வருமானவரி கட்டி உள்ளேன்.அதை திரும்ப எப்படி பெறுவது. தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.நன்றி.
பதிலளிநீக்குஎன்.ராஜூ
புதுச்சேரி
8608594900