திங்கள், 7 ஏப்ரல், 2014

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு புதிய வங்கிகள், முதலீடு செய்யலாமா?

கடைசியாக 2004ல் YES Bank மற்றும் Kotak Mahindra Bank என்ற இரண்டு வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு தற்போது இரு புதிய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.


இன்னும் இந்தியாவில் பாதி பேருக்கு வங்கி சேவை சென்றடையவில்லை. அதனால் இன்னும் நிறைய வங்கிகளுக்கு தேவை அதிகமாகவே உள்ளது.

இவை இரண்டும் தான் புதிய வங்கிகள்.
IDFC மற்றும் Bandhan Finance



IDFC என்பது  Infrastructure Financial Development Company. அதாவது கட்டமைப்பு தொடர்பான ப்ராஜெக்ட்களுக்கு நிதி உதவி செய்யும் அரசு நிறுவனம்.

Bandhan Finance என்பது கல்கத்தாவை தலைமையாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனம். கிட்டத்தட்ட நமது ஊரில் உள்ள முத்தூட் பேங்க் போல் தனி நபர்களுக்கு கடன் கொடுத்து வரும் நிறுவனம்.

வங்கி உரிமங்களுக்கு 27 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. அதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் L&T, Bajaj, Reliance போன்ற பெரிய முதலைகளுடன் நடந்த போட்டியில் இந்த நிறுவனங்கள் வெற்றி அடைந்துள்ளன.

கடந்த முறை அனுமதி பெற்ற YES Bank 45 ரூபாயில் IPOவிற்கு வந்தது. ஆனால் தற்போது இதன் பங்கு விலை 400க்கும் மேல். அதாவது 800% மேல் ரிடர்ன்.

அதனால் இந்த முறையும் அதே போல் ஒரு ஆசை வருவதே இயல்பே.

இது தொடர்பாக நமது பார்வையைப் பார்க்கலாம்.

வெறும் வங்கி உரிமம் கிடைத்ததை வைத்து மட்டும் நாம் முடிவு செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் புதிதாக வங்கிகளை நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.

அதில் உள்ள சில கஷ்டங்களை முதலில் பார்க்கலாம். 

முதலில் ஒரு மிகப்பெரிய 'RESTRUCTURING' RBIல் சொல்லியது போல் செய்ய வேண்டும். அதுவும் 18 மாதங்களுக்குள்.
மூன்று வருடங்களுக்குள் வங்கியைத் துவங்க வேண்டும்.

அதனால் மற்ற நிதிகள் வங்கிற்காக திருப்பி விடப்படும். இதனால் ஏற்கனவே நன்றாக சென்று கொண்டு இருக்கும் வியாபரத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம். உதாரணதுக்கு IDFC வழியாக கட்டமைப்பு ப்ராஜெக்ட்களுக்கு சென்று கொண்டு இருக்கும் நிதிகளில் பாதிப்பு ஏற்படலாம்.

அதன் பிறகு RBIன் CRR, SLR என்ற விகித முறைகளை கண்டிப்பாக பின்பற்றி ஆக வேண்டி வரும். இதனால் லாப விகிதங்கள் பாதிக்கலாம்.

சரி..இவ்வளவு கடினப்பட்டு வங்கி ஓஹோவென்று சென்று விட்டால் மற்றொரு YES Bank ஆக மாறி விடலாம் அல்லவா?

அதனால் அந்த பக்கத்தையும் பார்ப்போம்.




வங்கி செயல்பட ஆரம்பித்து விட்டால் எந்த தடங்கலும் இன்றி பொது மக்களிடம் டெபாசிட் பெறலாம். நிதிக்காக மற்ற நிதி நிறுவனங்களை சார்ந்து இருக்க தேவை இல்லை.

உதாரணத்துக்கு தற்போது வங்கி உரிமம் பெற்றுள்ள பந்தன் நிறுவனம் இது வரை மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று போது மக்களுக்கு வழங்கி வந்தது. இது 'கடனுக்கு கடன்' என்பதால் வட்டி விகிதம் 22% என்று அதிக அளவில் இருக்கிறது. வங்கி சேவையாக மாறும் வேளையில் இந்த வட்டி விகிதங்கள் 10% வரை குறையலாம்.

நாடு முழுவதும் புதிய கிளைகள், அதிக கடன்கள் வழங்குதல், அதிக வைப்பு நிதி பெறுதல், வங்கி தொடர்பான மற்ற சேவைகளுக்கு விரிவாக்கம் என்று விஸ்தரிக்கும் போது லாபம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பங்கு விலைகளும் புதிய உயரத்தை தொடலாம்.

இதனால் மிக நீண்ட கால முதலீட்டிற்கு இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் கணிசமான ரிடர்ன் பெற வாய்ப்பு உண்டு. அதாவது PPF போல் 10 வருட காலத்திற்கு மேலான முதலீடு இது. அதாவது குழநதைகளின் திருமணம், கல்வி, ஓய்வு ஊதியம் என்ற தேவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மூன்று வருடம் என்ற காலத்திற்கு முதலீடு செய்யும் எம்மைப் போன்ற நபர்கள் கொஞ்சம் வேடிக்கை பார்த்து நல்லாப் போனால் வாங்கி போடலாம்.

இந்த சூழ்நிலையில் பந்தன் தான் முதல் தேர்வு. ஏனென்றால் ஏற்கனவே உள்ள முன் அனுபவமும், வட கிழக்கு இந்தியாவில் அதிகமாக உள்ள வங்கி வாய்ப்புகளும் இவர்களுக்கு சாதகமான விடயம். ஆனால் இந்த பங்கு இன்னும் பட்டியலில் இல்லை. IPOவாக வரும் போது கவனித்துக் கொள்ளுங்கள்.

IDFC பொறுத்த அளவில் RESTRUCTURING என்பது கடினமான காரியம். அதற்கே ஒரு வருடங்கள் வரை தேவைப்படலாம். இது போக வங்கி முன் அனுபவம் இல்லாததும் ஒரு பிரச்சனை.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக