திங்கள், 14 ஏப்ரல், 2014

Basis Point: ஒரு எளிய விளக்கம் (ப.ஆ - 11)

இந்த கட்டுரை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் தொடர்ச்சி. இதன் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)


சில சமயங்களில் பொருளாதார வார்த்தைகளே நம்மைப் பயமுறுத்தி விடும். அதனால் நமக்கு இது புரியாது என்று விட்டு விடுவோம். ஆனால் சிறிது முயற்சித்தால் எளிமையாக புரிந்து விடும்.

அப்படிப்பட்ட ஒரு சொற்பதம் தான் "Basis Point(BPS)"

இந்த வார்த்தை தினமும் குறைந்தபட்சம் ஒரு பொருளாதார செய்தியிலாவது வந்து செல்லும். அதனால் நாமும் அறிந்து கொண்டால் பயனாக இருக்கும்.

உதாரணத்துக்கு ஒரு செய்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.

"The rupee would be a factor going forward into Q1 onwards. This quarter we expect largely moderate declines around 40-50 bps across companies except for Infosys.."

இந்த செய்தியை ஆரம்பத்தில் படித்து புரிவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் bps என்பதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதன் மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.



BPS என்பது BASIS POINT என்பதன் சுருக்கம். சதவீதத்தில் ஏற்படும் மாறுதல்களை சுருக்கமாக கூறுவதற்கு பயன்படுகிறது. அதாவது சதவீதத்தில் நூறில் ஒரு பாகத்தைக் குறிப்பிட பயன்படுகிறது.

பெரிய நிறுவனங்களில் நிதி நிலவரங்களின் ஒவ்வொரு சதவீதமும் மிகப்பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாக இருக்கும். அதனை இன்னும் பகுத்து பிரிப்பதன் மூலம் எளிதாக அந்த எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். அதற்கு தான் bps பயன்படுத்தப்படுகிறது.

Basis Pointலிருந்து சதவீதத்தில் மாற்றுவதற்கு bps மதிப்பினை 0.01 என்ற மதிப்புடன் பெருக்கினால் போதும். சதவீத மதிப்பு கிடைத்து விடும்.

கீழே உள்ள அட்டவணை எளிதாக இந்த மாற்றத்தை எளிதில் புரிய வைக்கும்.



மீண்டும் மேலே உள்ள செய்தியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

அந்த செய்தியின் தமிழாக்கம்.
"ரூபாய் மதிப்பு காரணமாக முதல் காலாண்டிலிருந்து இன்போசிஸ் தவிர மற்ற நிறுவனங்களில் லாபம் 40-50 bps குறையலாம்"

இதனை சதவீதத்தில் குறிப்பிடும் போது,
40 bps = 40 * 0.01 = 0.4%.

அப்படியென்றால் இந்த செய்தியை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அல்லவா?
"ரூபாய் மதிப்பு காரணமாக முதல் காலாண்டிலிருந்து இன்போசிஸ் தவிர மற்ற நிறுவனங்களில் லாபம் 0.4~0.5% குறையலாம்"

இப்பொழுது புரிவதற்கு எளிதாக இருக்கும்.

இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.

தற்பொழுது நமது தளத்தை பேஸ்புக்கில் தொடர்பவர்கள் எண்ணிக்கை 500யை தாண்டி விட்டது. தமிழ் பொருளாதார தளத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அடைய செய்கிறது. நன்றி!

தொடராதவர்கள் கீழே உள்ள இணைப்பை "Like" செய்வதன் மூலம் எமது கட்டுரைகளை எளிதில் பெறலாம்.

English Summary:
Basis point is the method of measuring profit in easier scale unit. 

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக