புதன், 16 ஏப்ரல், 2014

சரியும் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்புகள்

தற்போது சந்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஆனால் எவ்வளவு வரை குறையும் என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலைமை.


ஏனென்றால் மோடி அலை, கருத்துக் கணிப்புகள் எவ்வளவு நடைமுறையில் சாத்தியமானது என்பதை மே 16 தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரே தீர்மானிக்க முடியும்.

இப்போதுள்ள சந்தை பிஜேபி கூட்டணிக்கு 250 இடங்கள் மேல் கிடைக்கலாம்.என்ற நம்பிக்கையில் மேலே சென்று வருகிறது. ஆனால் அவ்வளவு இடங்கள் கிடைக்காவிட்டாலும் 200~230 வரை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாவே உள்ளன. இது கூட பங்குச்சந்தையை பொறுத்த வரை நல்ல செய்தியே.

இது போக, மோடி என்ற தனி மனிதனால் எவ்வளவு வித்தை கட்ட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் சிதம்பரம் செய்த சில நல்ல வேலைகள் இப்பொழுது பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்த மாதத்தில் நிதிப் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இறக்குமதி குறைந்துள்ளது. இதனை மோடி தொடர்ந்தாலே போதும். நல்ல பெயரை வாங்கி விடலாம்.

விதை போட்டது அவரு, பலன் பெறப்போவது இவரு,  


ஆனால் மோடிக்கு நல்ல நேரம், சிதம்பரத்துக்கு கெட்ட நேரம்..சிதம்பரத்தைக் கழுவி, கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதுவரை, நமக்கு சம்பந்தமில்லாத உக்ரைன் போன்ற சில விசயங்களுக்கு சந்தை ஏதாவது எதிர் வினை காட்டினால் 'நல்லது' என்று எண்ணி வாங்கிப் போட்டு விடலாம்.

சென்செக்ஸ் என்று பொத்தாம் பொதுவானக பார்ப்பதற்கு பதிலாக தனிப்பட்ட நல்ல பங்குகள் எப்பொழுது குறைகிறதோ வாங்கிப் போடலாம்.

இப்படி ஒவ்வொரு முறை குறையும் போது SIP முறையில் வாங்கிப் போட்டால் எளிதாக சராசரி செய்ய முடியும். 'இன்னும் சரியும், இன்னும் சரியும்' என்று முழுமையாக காத்து இருக்க வேண்டாம்.

நமது தளத்தின் "Dynamic Portfolio"வில் முதலீடு செய்பவர்களும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பல பங்குகள் எதிர்பார்த்த அளவு குறைந்து வருகிறது.

"Dynamic Portfolio" பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
DYNAMIC PORTFOLIO



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: