வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பங்குச்சந்தையில் PCA பற்றி தெரிந்து கொள்ளுங்கள். (ப.ஆ-9)

PCA என்பது பங்குச்சந்தையில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிதான முறையாகும். இதன் விரிவாக்கம் Periodic Call Auction என்பது.

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் போர்ட்போலியோவில் சிறிய நிறுவனங்களான 'Penny Stocks' வைத்து வர்த்தகம் பண்ணுவதாக இருந்தால் இதனைப் பற்றி அறிவது அவசியமாகும்.

அதாவது குறைந்த எண்ணிக்கையில் வர்த்தமாகும் பங்குகள் PCA பிரிவிற்குள் அடக்கப்படுகின்றன. இந்த பிரிவிற்குள் வரும் பங்குகள் வழமையான முறையின் படி வர்த்தகம் செய்ய முடியாது.



அதாவது வழக்கமாக, நாம் வர்த்தகம் செய்யும் பங்குகளின் ஆர்டர்கள் ஒரு நாள் முழுவதும் expire ஆகாமல் இருக்கும்.

ஆனால் PCA பிரிவில் வர்த்தக நேரம் என்பது ஒவ்வொரு மணி நேரமும் ஒரு session என்று பிரிக்கப்படுகிறது. இந்த ஒரு மணி நேரத்தில் நாம் பதிவு செய்யும் .ஆர்டர்கள் வர்த்தகமாகி இருக்க வேண்டும். இல்லாவிடில், ஆர்டர் Expire ஆகி விடும்.

இப்படி Expire ஆன பிறகு மீண்டும் ஆர்டர் பதிவு செய்ய வேண்டும். இப்படியே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பங்குகளின் LIQUIDITY அதிகரிக்க இவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இது முற்றிலும் முதலீட்டாளர்களுக்கு அசௌகாரியமாகவும், சிறு நிறுவனங்களுக்கு பாதகமாவும் உள்ள முறையாகும்.

செபி 'Day Trading' என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நீண்ட கால முதலீட்டாலர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முழு நேர பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்த வர்த்தகம் செய்து வர முடியும். அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டு பங்கு வர்த்தகம் செய்யும் சிறு முதலீட்டாளர்கள் இந்த பிரிவின் கீழ் வரும் பங்குகளைத் தவிர்க்கவே செய்வார்கள்.

இது மேலும் வர்த்தக எண்ணிக்கையைக் குறைக்கவே உதவும் தவிர எந்த அளவிற்கு கூட்டும் என்று தெரியவில்லை.

நிறைய முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இருந்து எதிர்மறை கருத்துகள் சென்றதால் பங்குசந்தை நிர்வாகம் சில விதி முறைகளைத் தளர்த்தியுள்ளது. ஆனாலும் இன்னும் முழுமை பெறவில்லை.

சிறு முதலீட்டாளர்கள் அல்லது பங்கு வர்த்தகத்தை பகுதி நேரமாக கொண்டிருப்பவர்கள் இந்த பிரிவின் கீழ் வரும் பங்குகளைத் தவிர்க்கலாம். ஏனென்றால் பங்குகளை வாங்குவதும், விற்பதும் சிறிது கடினமானது..

இந்த பிரிவின் கீழ் வரும் பங்குகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
BSE PCA Stock List

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.


English Summary:
Periodic Call Auction is the method of trading low liquidity stocks in Indian share market. It's better to avoid PCA stocks due to inconvenient method.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக