இந்தியாவில் திறனாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு வங்கி HDFC. இது வரை மற்ற வங்கிகளைக் காட்டிலும் நல்ல வருமானத்தையும், வளர்ச்சியையும் காட்டி வருகிறது.
ஆனால் இதன் பங்கு விலை, கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. இந்த இடைவெளியில் பார்த்தால் நிப்டி 12 சதவீதம் கூடியுள்ளது.
இங்கு பிரச்சினை வங்கியின் செயல்பாடுகளில் அல்ல. அரசின் ஒரு முக்கியமான கொள்கை முடிவுகளில் அடங்கியுள்ளது.
ஆமாம், இந்த வங்கியின் வெளிநாட்டு முதலீட்டு உச்ச வரம்பு 49% என்பதை எட்டியுள்ளது.
அரசின் கொள்கைப்படி, 49% வரை மட்டும் வங்கித் துறையில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
அதற்கு மேல் 75% வரை அரசின் அனுமதி பெற்று முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
இந்த விசேச அனுமதி பெரும் விடயங்களில் தான் ஒரு சிக்கல் வந்துள்ளது.
அதாவது, HDFC வங்கியின் பங்குகளில் 22% அதன் தாய் நிறுவனமான HDFC கொண்டுள்ளது. தாய் நிறுவன HDFCயின் பங்குகளில் 74% அளவு வெளிநாட்டு முதலீடு உள்ளது.
இதனால் தாய் HDFCயை வெளிநாட்டு நிறுவனமாக கருதுவதா? அல்லது இந்திய நிறுவனமாக கருதுவதா? என்று RBI குழம்பி உள்ளது. அதனால் முடிவெடுப்பது காலந்தள்ளி சென்று வருகிறது.
இதற்கிடையே HDFC வங்கி இரு உயர்நீதி மன்ற நீதிபதிகளிடம் கருத்து கேட்டுள்ளது. அவர்களது கருத்து வங்கிக்கு சாதகமாக உள்ளது.
அதாவது 2009ல் வெளிநாட்டு நிறுவன முறைகள் வரும் முன்னரே தாய் நிறுவன HDFCயில் அதிக அளவு வெளிநாட்டு முதலீடுகள் உள்ளது. இதனால் தாய் நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனம் என்று கருத முடியாது என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
எது எப்படியோ, புதிய அரசு அமைந்து இவர்களுக்கு சாதகமாக அனுமதி அளிக்கப்பட்டால் HDFC வங்கி எளிதில் ஆயிரம் ரூபாயை தொடும் என்று நம்பப்படுகிறது.
ஏனென்றால் பல மாதங்களாக இந்த ஒற்றை விதி முறையின் காரணமாக இந்த பங்கு துவண்டு கிடக்கிறது. முடிவும் சாதகமாக அமையலாம் என்று நம்பப்படுகிறது.
முடிவு சாதகமாக வராத பட்சத்தில் பங்குகளை விற்று விடுவதும் நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக