இது நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலம். இந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் ஒரு முக்கியமான சந்தேகத்தை தீர்ப்பதற்காக இந்த பதிவு பயன்படும்.
'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
எப்பொழுதும் நிதி நிலை அறிக்கைகள் வெளிவரும் போது இரண்டு கட்டமாக நிதி அறிக்கைகள் வெளிவரும்.
ஒன்றை Standalone Results என்றும், மாற்றத்தை Consolidated Results என்றும் குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்த இரண்டின் அர்த்தத்தை தெரியாவிட்டால் அதன் பிறகு அறிக்கைக்குள் படித்துப் பார்ப்பதிலும் அர்த்தமில்லை. அந்த அளவு அடிப்படையான ஒன்று.
அதிலும் 'Fundamental Analysis' என்ற முறையில் முதலீடு செய்யும் நீண்ட கால முதலீட்டாளர்கள் கண்டிப்பாக இதனைப் பற்றி தெரிய வேண்டியது அவசியமாகிறது.
பொதுவாக பெரிய அளவில் குழுமமாக செயல்படும் நிறுவனங்கள் நிர்வாக வசதிக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் சில துணை நிறுவனங்களாக பிரித்து வைத்து இருப்பது வழக்கம்.
ஆனால் நம்மைப் போல் உள்ள சிறு முதலீட்டாளர்கள் குழுமத்தின் எல்லா துணை நிறுவனங்களிடம் பங்குகள் வைத்து இருப்பதில்லை. ஏதாவது ஒரு நிறுவனத்திடம் பங்குகளை வைத்து இருப்போம்.
பெரும்பாலான சமயங்களில், மற்ற துணை நிறுவனங்களிடம் ஏற்படும் மாறுதல்கள் நம்மை அவ்வளவாக பாதிப்பதில்லை. அதனால் நாமும் அவ்வளவாக கவலை கொள்வதில்லை.
இதனால் முதலில் அந்த நிறுவனம் தமது செயல்பாடுகளை மட்டும் கொண்ட ஒரு நிதி நிலை அறிக்கையை மட்டும் வெளியிடும். இதற்கு Standalone Results என்று பெயர்.
ஆனாலும் சில சமயங்களில், தாய் நிறுவனம் தமது துணை நிறுவனத்திற்கு கடன் கொடுத்து இருக்கலாம். அல்லது அதிக அளவு சார்பாக இருந்து இருக்கலாம். அந்த சமயங்களில், துணை நிறுவங்களில் ஏற்படும் மாறுதல்கள் தாய் நிறுவனத்தை அதிக அளவு பாதிக்கும்.
அதனை விவரமாக புரிந்து கொள்வதற்காக தாய் நிறுவனம் ஒரு நிதி அறிக்கையை வெளியிடும். இதனை Consolidated Results என்பார்கள். அத்தகைய சமயங்களில் Consolidated Results நமக்கு உதவியாக இருக்கும்.
உதாரணத்துக்கு,
நிறுவனம் A, நிறுவனங்கள் Bயில் 80 சதவீதமும் மற்றும் Cயில் 60 சதவீதமும் பங்குகளை வைத்து இருக்கிறது.
A நிறுவனத்தின் வருவாய் 10000 ரூபாய் என்றும், ரூபாய் என்றும், B நிறுவனத்தின் வருவாய் 3000 ரூபாய் என்றும், C நிறுவனத்தின் வருவாய் 2000 ரூபாய் என்றும் எடுத்துக் கொள்வோம்.
இதன் Standalone Results அறிக்கையில் A நிறுவனத்தின் நிதி நிலை விவரங்கள் மட்டும் இடம் பெற்று இருக்கும். அதாவது பத்தாயிரம் ரூபாய்க்கான வருவாய் மட்டும்.
ஆனால் Consolidated Results அறிக்கையில் A, B, C நிறுவனங்களின் நிதி நிலை விவரங்கள் கூட்டாக இடம் பெற்று இருக்கும். அதாவது வருமானம் 10000 + 3000 + 2000 = 15,000 ரூபாய் என்று இடம் பெற்று இருக்கும்.
இது பங்குகளின் விகிதத்திற்கு ஏற்ப இருக்காது. மொத்த கூட்டுத் தொகையாக எழுதி இருப்பார்கள்.
'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.

ஒரு உதாரணம் |

English Summary:
Standalone and Consolidated Financial results are playing key role in understanding company's economic situation. Standalone results showing only the subsidiary income of group companies. Consolidated is the total financial statement of group companies.

வணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்