செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ULIPல் முதலீடு செய்யலாமா?

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னாள் மிகவும் பிரபலமான முதலீடு திட்டம் ULIP.

ULIP என்றால் Unit Linked Insurance Plan.


தொடக்கக் காலத்தில் மிக அதிக அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது. அதாவது இதில் முதலீடு செய்தால் 10 வருடங்கள் கழித்து முதலீடு பத்து மடங்காகும் என்று கூறி முகவர்கள் விளம்பரம் செய்தது இன்னும் நியாபகத்தில் நிற்கிறது.

இப்படித் தவறான தகவல்களைக் கொடுத்ததால் இன்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து காணப்படுகிறது. அதாவது முதலீடு செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் மொத்தமாக முதலீட்டினை வாபஸ் வாங்கியது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றும் இத்தகைய திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.

எல்லாம் கலந்த தெளிவில்லாத கலவை 


ULIP என்பது நிரந்தர வருமானம், இன்சூரன்ஸ் மற்றும் பங்குச்சந்தை என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டது. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு திட்டங்களிலும் சேராமல் ஒரே திட்டத்தில் மூன்று பயன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.


ஆனால் நடைமுறையில் மூன்றுமே சரியான பலன்களைத் தரவில்லை.

வருட வருமானம் 8% க்கும் குறைவாக கிடைத்து வந்தது. வைப்பு நிதிகளில் கூட இதனை விட அதிக ரிடர்ன் கிடைத்து வருகிறது.

எனது நண்பர் ஒருவர் முதலீடு செய்து ஐந்து வருடங்கள் ஆன பிறகும் அவர் கட்டிய பிரிமியம் தொகையை விட குறைவாக அவரது கணக்கில் இருந்தது. அது எப்படி என்று கேட்டார்?

உண்மை தான்.

நிதி மேலாண்மை, பிரிமியம் திட்டமிடல், மோர்டலிட்டி என்று பல பெயர்களில் கணிசமாக கட்டணத்தை வசூலித்து விடுகிறார்கள்.

அதாவது உங்கள் முதல் வருடத்தில் 50,000 ரூபாய் பிரிமியம் கட்டினால், வெறும் 37,500 மட்டுமே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மீதி 12,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அடுத்தடுத்த வருடங்களில், கட்டணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.


இதனால் தான் முதல் ஐந்து வருடங்களில் நாம் செலுத்திய தொகை கூட நமது கணக்கில் இருப்பதில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு எடுப்பதே ஓரளவு பலனைத் தரும்.

ULIP நிதியில் 25% பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் எந்தந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்று பொதுவில் வைக்கப்படுவதில்லை. ஆனால் பரஸ்பர நிதியில் அவர்கள் முதலீடு செய்யும் பங்குகளை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தகைய வெளிப்படைத்தன்மையும் இல்லை.

அடுத்து, இன்சூரன்ஸ்..

இந்த இன்சூரன்ஸ் நாம் முதலீடு செய்யும் காலகட்டத்துக்கு மட்டுமே பொருந்தும். அதாவது சராசரியாக 10 வருடம் என்று இந்த நிதிகளில் முதலீடு செய்கிறார்கள்.

அப்படி என்றால், வெறும் பத்து வருடங்களுக்கு மட்டுமே காப்பீடு கவராகும். அதனால் இதனை முதன்மை காப்பீடாகவும் கருத முடியாது. கிடைக்கும் காப்பீட்டுத் தொகையும் குறைவானது.

இதற்கு பதில் LIC, Post Office போன்றவற்றின் காப்பீடு திட்டங்கள் இதனை விட பயனானது.

அதனால் கூடிய வரைக்கும் இந்த ULIP திட்டங்களில் முதலீடு செய்வததைத் தவிர்க்கலாம். ULIP திட்டமானது செபியால் தடை செய்யப்பட்டு மீண்டும் கொண்டு வரப்பட்டதாகும் என்பதையும் நினைவில் கொள்க. அந்தளவு சுரண்டலான திட்டங்கள்.

அதற்குப் பதில், நிரந்தர வருமானம், இன்சூரன்ஸ் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றை தனித்தனியாக பிரித்து முதலீடு செய்வது நல்லது.

ULIP  என்பதை விட NSC, PPF, ம்யூச்சல் பண்ட் போன்றவை நல்ல மாற்றுகளாக உள்ளன.

<!–- google_ad_section_start -–> English Summary:
Case study on Unit Link Insurance Plan (ULIP) whether to invest or not. Due to limited benefits, other financial products such as Mutual funds, Postal Insurances are giving more benefit over that.
<!–- google_ad_section_end -–>


எமது கட்டுரைகளை கீழே உள்ள இணைப்பை "Like" செய்வதன் மூலம் எளிதில் பெறலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

7 கருத்துகள்:

  1. சோம்பேறிகளுக்கு நிதி அலுவலர்கள் அளிக்கும் 'பாடம் கற்றல் கட்டணமே' ULIP ஆகும். முயற்சி இல்லாமல் தன் பணம் 2X, 3X, 5X ஆக திரும்ப வேண்டும் என நினைப்பவர்களிடம் அவர்கள் எளிதில் பணம் கறக்கவே ULIPஐ உருவாக்கியிருக்கிறார்கள்.

    1. காப்பீடு: டெர்ம் இன்சூரன்ஸ்.
    2. சேமிப்பு : ரிக்கரிங் டெபாஸிட் மற்றும் டேர்ம் டெபாஸிட் (பணவீக்கத்தை விட குறைவான ரிட்டர்ன்ஸ் கொடுக்கும்)
    3. முதலீடு: பரஸ்பர நிதிகளில் SIP மூலம் மாதார்திரத் தவணைகளில் முதலீடு.

    பதிலளிநீக்கு
  2. எதையும் படித்துப் பார்க்காமல் கண்ட இடத்தில் கையெழுத்துப் போடுபவர்களின் பணம் 2X,3X ஆகப் பெருகாது. அது 0.6X, 0.4X ஆகவே மாறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குஜ்ஜால்! தங்கள் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்!

      நீக்கு
  3. LIC இன்சூரன்ஸ் சம்பந்தமான தமிழில் கிடைக்கும் புத்தகம் இருந்தால் தெரிவிக்கவும்....

    பதிலளிநீக்கு