வியாழன், 17 ஏப்ரல், 2014

முன்னணி IT நிறுவனமாக மாறும் HCL

நேற்று மட்டும் மூன்று முக்கிய IT நிறுவனங்கள் தங்கள் நிதி நிலை அறிக்கையை அறிவித்தன.


அதில் TCS எதிர்பார்த்தவாறு குறைந்த வளர்ச்சியைக் காட்டியது. ஆனால் அடுத்த வருட வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விப்ரோ முடிவுகள் கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருந்தது. ஆனால் அடுத்த வருட எதிர்பார்ப்பு குறைவாக உள்ளது.

இன்போசிஸ் முடிவுகள் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம். வளர்ச்சி குறைவு, அதிகரித்த விலகல் சதவீதம் என்று பல பிரச்சினைகள்.


இதற்கடுத்து வரும் நிறுவனமான HCL நிறுவனம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 59% வளர்ச்சி கொடுத்து உள்ளது. அடுத்த வருட வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. Profit Margin கணிசமாக அதிகரித்து உள்ளது.

கடந்த சில காலாண்டுகளாகவே இந்த நிறுவனம் மிக நல்ல வளர்ச்சி கொடுத்து வருகிறது. 

அதாவது, கடந்த ஆண்டு 700 ரூபாயில் வர்தகமாகிக் கொண்டிருந்த ஒரு பங்கு இன்று 1400 ரூபாய்க்கும் அதிகமாக் மதிப்பினைக் கொண்டு உள்ளது. 100% க்கும் அதிகமான லாபம்.

நமது இலவச போர்ட்போலியோவிலும் 1080 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 31% அளவு லாபம் கொடுத்து உள்ளது. விவரங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

HCL நிறுவனமும் மற்ற நிறுவனங்களைப் போல் ஒரே காலக் கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், இன்போசிஸ், விப்ரோ, TCS போன்று பெரிய அளவு  வளர்ச்சி அடைய முடியவில்லை.

2000த்தின் தொடக்கத்தில் இந்தியாவில் IT புரட்சி தொடங்கியது. அந்த சமயத்தில் HCL பெரிதும் நம்பியது இணையம் சார்ந்த மென்பொருள் வணிகத்தை. 

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, Application Development என்ற மென்பொருள் துறையின் பிரிவு நல்ல நிலைக்கு சென்றது. அதனால் இந்த பகுதியில் ஈடுபாடு காட்டிய இன்போசிஸ், விப்ரோ, TCS போன்றவை உச்சத்தில் சென்று விட்டன.

HCL அந்த வாய்ப்பை தவற விட்டாலும், ஒரு வித தனிப்பட்ட வியாபார முறையுடன் ஓரளவு தப்பி பிழைத்து வந்தது.  

இடைப்பட்ட காலத்தில் கணிசமாக ஆராய்ச்சி பிரிவிற்கும், தன்னுடைய வியாபார மாடலை மாற்றுவதிலும் ஆர்வம் காட்டியது.

மற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு மனித வளத்திற்கும் என்று கட்டணங்களை வாங்கியது. ஆனால் HCL 'வேலையை முடித்துக் கொடுப்பதற்கு' என்று சேவை கட்டணத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டியது.

இதனால் தற்போது மென்பொருள் வாடிக்கையாளர்களான  பெரிய நிறுவனங்கள் 'Head Count' என்பதை விட்டு விட்டு, 'Fixed Project Cost' என்ற முறைக்கு மாறுவது HCL நிறுவனத்துக்கு மிகவும்  சாதகமாக அமைந்துள்ளது.

அது போக மென்பொருள் துறையில் அதிகளவு எதிர்பார்க்கப்படும் மேகக்கணினி(Cloud) தொழில் நுட்பம், இணையப் பாதுகாப்பு போன்றவற்றில் தனித்தன்மையை வளர்த்ததன் மூலம்.நிறைய புது டீல்களும் கிடைத்து வருகின்றன. 

HCL நிறுவனத்தில் மற்ற நிறுவனங்களைப் போல் பணியாளர்களை அதிகரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், நிறுவன தனித்தன்மையும் திறமையும் வளர்ந்துள்ளது. இதே வளர்ச்சியில் சென்றால், இன்போசிஸ் மற்றும் விப்ரோவை எளிதில் பின்னுக்குத் தள்ளி விடும். 

ஏதோ ஒரு சமயத்தில் கைவிட்ட தொழில்நுட்பங்கள் இன்று அவர்களுக்கு கை கொடுக்கிறது.  HCL  நிறுவனத்தின் நிறுவனர் சிவ் நாடார்  அவர்கள் ஒரு தமிழர் என்பதில் நமக்கும் பெருமை.

இன்னும் மூன்று மாதங்களில் HCL பங்கு விலை எளிதில் 1600 என்பதைக் கடக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்து மென்பொருள் நிறுவனங்களின் எதிர்காலம் Outsourcing என்பதை விட தனித்தன்மை(Specialist) என்பதிலே அடங்கியுள்ளதும் தெளிவாகிறது. 

HCL தொடர்பான எமது பிற பதிவுகள்

ஏன் HCL Technologies பங்கைப் பரிந்துரை செய்கிறோம்?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக