திங்கள், 25 ஜனவரி, 2016

தங்கத்தை வெளியே கொண்டு வர படாத பாடு படும் மத்திய அரசு

கடந்த நவம்பரில் வீட்டில் உறங்கும் தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு சில திட்டங்களைக் கொண்டு வந்தது.


அது போல், மேலும் தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்க சில முதலீட்டு பத்திரத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அது ஓரளவு வெற்றியும் பெற்றது என்று சொல்லலாம்.



ஆனால் வீட்டில் இருக்கும் தங்கத்தை உருக்கி வங்கியில் வைத்து வட்டி பெற்றுக் கொள்ளுங்கள் என்ற மற்றொரு திட்டம் பெரிதளவு வெற்றி பெறவில்லை.

அதற்கு இருக்கக்கூடிய நகைகளை உருக்கி வங்கியில் கொடுக்க வேண்டும் என்பது நமது ஊர் பெண்களின் செண்டிமெண்டை பாதிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


அதே நேரத்தில் அரசும் அவசரமாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்ததால் பல இடங்களில் தங்கத்தை உருக்கி சான்றிதழ் பெறும் நிலையங்களே திறக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு பெரும் சிரமங்கள் இருந்தன.

அடுத்து, வங்கி மேலாளர்களிடம் போய் கேட்டால் அவர்களுக்கே இந்த திட்டங்கள் பற்றிய புரிதல் பெரிதளவு இல்லை.

இந்தக் காரணங்களால் வீட்டில் இருக்கும் தங்கத்தை வெளியே எடுக்கும் திட்டம் முதல் கட்ட அளவில் தோல்வி அடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆமாம். பல கோடி டண்களில் நமது நாட்டில் குவிந்து கிடக்கும் தங்கத்தில் ஒரு டண் கூட இந்த திட்டத்தில் சேரவில்லை. நாடு முழுவதுமே 900 கிலோ தங்கம் தான் சேர்ந்துள்ளது.

ஆனாலும் அரசு முடிந்த வரை ப்ரொமோட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து உள்ளது.

அதனால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தும் வங்கிகளுக்கு 2.5% கமிசன் தருவதாக சில கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு வங்கி மேலாளர்கள் ஓரளவு முயற்சி எடுத்தால் வீட்டில் தேவையில்லாமல் உறங்கி கிடக்கும் சிறு பகுதி தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்காவது உதவும்.

அதே போல் கோவில்களில் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடவுள்களுக்கு அணிவிக்கும் நகைகளை விட்டு விட்டு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் தங்கத்தை இந்த மாதிரி திட்டங்களில் போட்டு வைத்தால் நாட்டின் பொருளாதார நிலைக்கு பெரிதும் உதவும்.

இந்த திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க..



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக