வட்டி கொடுப்பதும் வட்டி வாங்குவதும் பாவம் என்பது நபிகள் நாயகத்தின் ஒரு முக்கிய கொள்கை.
அதிக அளவு வட்டி கொடுத்து வந்த நபிகளின் தந்தை கூட தடை செய்யப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது.
அதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் வட்டி தொடர்பான பண பரிவர்த்தனைகளில் அதிக அளவு கட்டுப்பாடுகள் உள்ளன. வங்கிகளில் பிக்ஸ்ட் டெபாசிட் செய்வது கூட அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இஸ்லாம் முதலீடுகள் செய்வதற்கு அனுமதி அளிக்கிறது. அது பங்கு முதலீடுகளுக்கும் பொருந்தும்.
அதிலும் மது, புகையிலை, சூதாட்டம், ஆயுதம் செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை.
அதே போல் அதிக அளவு கடன் கொண்டுள்ள நிறுவனங்கள் அதிக வட்டி கட்ட வேண்டும் என்பதால் அந்த நிறுவனங்களிலும் அனுமதியில்லை.
இத்தகைய கொள்கைகள் படி முதலீடு செய்வதற்கு என்று ம்யூச்சல் பண்ட்கள் இஸ்லாமிய நாடுகளில் பிரபலம். தற்போது இந்த பண்ட்கள் இந்தியாவிலும் இஸ்லாமியர்களிடையே பிரபலமாக உள்ளது.
இந்த பாண்ட்கள் இஸ்லாமிய கொள்கைப்படி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும்.
இதனை ஷாரியா பாண்ட்கள் என்று அழைப்பார்கள். (shariah scheme)
பல விதி முறைகள் உள்ளதால் இந்திய பங்குசந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் 200 நிறுவனங்களே ஷாரியா விதி முறைப்படி தகுதி பெறுகின்றன.
அதனால் பாண்டில் உள்ள நிதி மற்ற பண்ட்களைப் போல் அதிக அளவு பரவலாக முதலீடு செய்யப்பட்டு இருக்காது.
வட்டி வருமானமே பிரதானமாக இருப்பதால் எந்த வங்கி பங்குகளிலும் கூட முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த பாண்ட்களில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் உபரியாக இருக்கும் தொகைக்கும் வட்டி கிடைக்கும். அந்த வட்டி முறையாக கணக்கிடப்பட்டு தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக வழங்கப்பட்டு விடும்.
ஜைனர்களும் இதே போல் சில நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் ஷாரியா பாண்ட்களில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகிறார்கள்.
அதிலும் சில ஷாரியா பண்ட்கள் நிப்டியை விட அதிக அளவு ரிடர்னும் கொடுத்துள்ளன. அதனால் இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடாக ஷாரியா பண்ட்களை கருதி கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக