வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஓலா கேப்பில் ஒரு புதிய அனுபவம்

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த பொங்கல் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள்!


இந்தியாவில் இருக்கும் பலரும் சிட்டியில் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் டேக்ஸ்சி சேவைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறோம்.



நாம் தற்போது தான் பல வருடங்களுக்கு பிறகு வெளியில் இருந்து திரும்பியதால் இந்த கேப் சேவைகளின் மீது ஒரு நல்ல ஆர்வம் இருந்து வந்தது.

மூன்று வருடங்களுக்கு முன்பும் பயன்படுத்தி இருந்தோம். அப்பொழுது இந்த அளவு நவீனமாக இல்லை.

தற்போது பெங்களூர் வந்த பிறகு நேற்று தான் பயன்படுத்த முனைந்தோம். OLA கேப்பில் தான் முதல் அனுபவம்.

அருமையான சேவை. ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்ட், ஜிபிஎஸ் போன்ற சேவைகளை எந்த அளவு பயன்படுத்த முடியுமோ பயன்படுத்தி இருந்தார்கள்.

முதலில் OLA சேவையின் ஆண்ட்ராய்ட் ஆப்பை டௌன்லோட் செய்து கொண்டோம். அதன் பிறகு நமது இருப்பிடத்தை குறி வைத்து அவர்களுடைய ஜிபிஎஸ் மேப்பிற்கு அழைத்து செல்கிறது.

அதில் எத்தனை வண்டிகள் நம்மை சுற்றி இருக்கிறது என்பதை காண்பிக்கிறார்கள். நாம் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் எவ்வளவு பணம் ஆகும் என்பதை தருகிறார்கள்.

அதன் பிறகு ஓகே சொன்னால் சிறிது நேரத்தில் டிரைவர் போன் பண்ணுவார்.

முடிந்த பிறகு அதில் சொல்லப்பட்ட தொகையை மட்டும் கொடுத்தால் போதும். நோ டிப்ஸ்.

எமது டிரைவர் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த ரேட்டிங்கிற்கு தக்கவாறு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்பது நல்ல அம்சம்.

பணம் நேரில் செலுத்த வேண்டாம் என்றால் OLA Money என்ற ஒன்று உள்ளது. அதில் 300, 400 என்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பயணம் முடிந்த பிறகு தானாகவே காசை எடுத்துக் கொள்கிறது.

இதில் ஒரு காரை இரண்டு, மூன்று நபர்கள் பகிர்ந்து கொள்ளலாம் போல. இதனை OLA Share என்று சொல்கிறார்கள். இங்கு தனி காரை விட 30 முதல் 50 சதவீதம் வரை கட்டணம் குறைவு.

மொத்தத்தில் ஒரு அருமையான அனுபவம். நாம் சில வளர்ந்த நாடுகளில் வசித்த அனுபவம் உண்டு. அங்கு கூட இத்தகைய சேவையை பார்த்ததில்லை.

OLA CAB போன்ற நிறுவனங்கள் வளர்வதற்கு நமது ஊரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு முக்கியமான காரணம் என்றால் மறுப்பதிற்கில்லை.

மீட்டர் போட்டு செல்ல வேண்டும் என்பது அவர்கள் கடமை. ஆனால் அதனைக் கேட்பதற்கு மீட்டர் போடுவீங்களா? என்று தயங்கி தயங்கி தான் கேட்க வேண்டும்.

காலையில் வெளியிடத்திற்கு செல்லும் போது அவர்கள் பேரம் பேசியும், பேரம் படியாவிட்டால் அவர்கள் கூறும் கடின வார்த்தைகளை கேட்டுத் தான் அந்த நாளை தொடங்க வேண்டும் என்பன போன்ற விடயங்கள் ஒரு மாற்று வழியைக் காட்ட ஆரம்பித்துள்ளது என்று சொல்லலாம்.

சேவை சரியாவிட்டால் எதுவும் நீண்ட நாள் நிலைத்து இருக்காது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இந்த சேவையை அரசு தான் முறைப்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற நிலையில் அதனை தற்போது வியாபர போட்டி, மற்றும் டெக்னாலஜி மாற்றி விட்டது.

உண்மையில் சொன்னால் நாம் இந்த கார் சேவைக்கு கொடுத்த கட்டணம் ஆட்டோவில் செல்வதை விடக் குறைவாக அமைந்தது.

மாத சம்பளத்தை திட்டமிட்டு சிக்கனமாக செலவழிப்பவர்கள் இந்த சேவை மூலம் கணிசமாக சேமிக்கலாம் என்று தெரிகிறது.

பெங்களூர், சென்னை போன்ற பெரிய நகரங்களை தவிர்த்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது என்பதும் கூடுதல் சிறப்பு.

கீழே உள்ள இந்த கூப்பனை பயன்படுத்தினால் முதல் சேவையில் 100 ரூபாயில் இலவசமாக கொடுக்கிறார்கள்.

Coupon - AWT4Q1

பயன்படுத்திக் கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக