உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக எல்லா விமான நிறுவனங்களும் மகிழ்ச்சியில் உள்ளன.
இதனால் கண்ணா பிண்ணா என்று சலுகைகளை அள்ளி வழங்கி விமானங்களில் காலி இருக்கைகளை குறைத்து வருகின்றன. இதில் ஸ்பைஸ் ஜெட் முதல் இடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.
இந்த பங்கை மாறனிடம் இருந்து கை மாறி அஜித் சிங் கைக்கு வந்த போது 15 ரூபாய்க்கு பொதுவில் பரிந்துரை செய்து இருந்தோம்.
இன்று 90 ரூபாய்க்கு அருகில் வந்து நிற்கிறது. ஒரு வருடத்தில் ஆறு மடங்கு வருமானம்.
கடுமையான நஷ்டத்தில் இயங்கிய ஸ்பைஸ் ஜெட் கடந்த காலாண்டில் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது.
ஒரு கட்டத்தில் கிங் பிஷெர் போல் இழுத்து மூடக்கூடிய நிலைக்கு தான் ஸ்பைஸ் ஜெட் சென்றது. ஆனால் அஜித்தின் மேலாண்மை, எரிபொருள் விலை குறைந்தது போன்றவை இந்த நிறுவனத்திற்கு சரியான நேரத்தில் சாதகமாக அமைந்தது.
அதே நேரத்தில் கடந்த காலாண்டில் 650 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இண்டிகோ இந்த காலாண்டில் 100 கோடி ரூபாய் தான் லாபம் ஈட்டி உள்ளது.
இதற்கும் நேரம் ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.
எரிபொருள் விலை காரணமாக மற்ற விமான நிறுவனங்கள் தரை ரேட்டிற்கு டிக்கெட் கொடுக்க இண்டிகோ அந்த அளவு இறங்கி வரவில்லை. அதனால் காலி இருக்கைகளுடன் சென்று பயணிகள் எண்ணிக்கை குறைந்து போனது.
சூழ்நிலைக்கு தக்க முடிவு எடுப்பதில் நிகழ்ந்த தடுமாற்றங்கள் இந்த காலாண்டில் இண்டிகோவின் லாபத்தை பதம் பார்த்து விட்டது.
அதே நேரத்தில் எரிபொருள் செலவை குறைக்கும் புதிய நவீன ஏர் பஸ் விமானங்களை இண்டிகோ ஆர்டர் செய்து இருந்தது. இதன் மூலம் 15% அளவு எரிபொருள் செலவைக் குறைக்கலாம்.
அந்த விமானங்கள் கடந்த மாதங்களிலே வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவைகளை கொடுப்பதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு வகையில் தற்போதைய மோசமான நிதி அறிக்கைக்கு காரணமாக அமைந்தது.
ஏற்கனவே ஐபிஒவில் அதிக அளவு டிமேண்ட் காரணமாக இண்டிகோ பங்கு விலை உச்சத்திற்கு சென்றது. ஆனால் தற்போதைய நிதி அறிக்கை பங்கு விலையை 30% அளவு கீழே இறக்கி உள்ளது என்று சொல்லலாம். தற்போது ஓரளவு பங்கு விலை சமநிலைப் படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் பங்கு தடுமாற்றத்திலே இருப்பதால் அடுத்து நல்ல செய்திகள் வரும் வரை இந்த பங்கில் முதலீடு செய்வதற்கு காத்து இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக