செவ்வாய், 19 ஜனவரி, 2016

நல்ல முடிவுகளும், அளவுக்கு அதிகமாக சரியும் சந்தையும்

கடந்த சில நாட்களாக சில முக்கிய நிறுவனங்களின் நிதி முடிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன.


அதிலும் சென்னை மழையால் ஐடி நிறுவனங்களின் நிதி முடிவுகள் பாதிக்கப்படும் என்று நினைத்து இருந்தோம்.



அது போல் டிசிஎஸ் சோடை போனது. ஆனால் இன்போசிஸ் மற்றும் எச்சிஎல் நிறுவனங்கள் அசத்தலான நிதி முடிவுகளை கொடுத்து அசத்தி விட்டன.

இதற்கு இன்போசிஸ் சென்னையை பெரிய அளவு சார்ந்து இருக்காமல் இருப்பதும், எச்சிஎல் ப்ரொஜெக்டை முடிப்பதை அடிப்படையாக வைத்து பில்லிங் செய்வதும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

அடுத்து, இன்ஜினியரிங் மற்றும் எண்ணெய் துறை சார்ந்த ரிலையன்ஸ் நிறுவனமும் நல்ல நிதி முடிவுகளை கொடுத்துள்ளது.

இதனைப் பார்க்கையில் L&T போன்ற நிறுவனங்கள் கூட நல்ல முடிவுகளை தரலாமோ என்று எண்ண தோன்றுகிறது.

ஆனால் சந்தையில் புள்ளிகளை பார்த்தால் ரத்த களேபரத்தில் நிலவரம் உள்ளது. இந்த நல்ல செய்திகளின் தாக்கம் கொஞ்சம் கூட எதிரொலிக்கவில்லை என்பது தான் இங்கு ஆச்சர்யம்.

இந்திய சந்தையை விட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செல்வது தான் இந்த சரிவிற்கு முக்கிய காரணம் என்று கருதலாம். ஆனாலும் இவ்வளவு தாழ வேண்டிய அவசியமில்லை.

சிலர் 2008ல் வந்தது போல் சரிவு வரலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் அந்த அளவு உலக சந்தைகள் தற்போது சரிவிலில்லை.

அதே நேரத்தில் தற்போது இந்திய சென்செக்ஸ் சந்தையின் P/E மதிப்பு குறைந்தது 14க்கு அருகில் வந்துள்ளது. ஆனால் 2008ல் சரிவிற்கு பிறகு கூட P/E மதிப்பு 17ல் இருந்தது என்பதையும் கவனிக்க.

இதனால் தற்போதைய சந்தை மதிப்பீடலில் ஒரு மலிவான காலக்கட்டத்தில் வந்துள்ளது என்று கருதலாம்.

பொதுவாக அதிக ரிடர்ன் பெறுபவர்கள் என்று பார்த்தல் இந்த மாதிரியான சரிவுகளில் முதலீடு செய்பவர்கள் தான்.

தற்போது மற்றவர்கள் ஒதுங்கி இருக்கும் போது நாம் வற்றிப் போன குளத்தில் மீன் பிடிப்பதை பங்குகளை எளிதில் தேடித் பிடித்து முதலீடு செய்யலாம்.

அடுத்த ஒரு வருடத்திற்கு முதலீடு செய்த பணத்திற்கு அவசர தேவை இல்லாவிட்டால் முதலீடுகளை தொடருங்கள்!

தேவைப்பட்டால் எமது கட்டண போர்ட்போலியோ சேவையிலும் இணையலாம்.  தொடர்பு முகவரி: muthaleedu@gmail.com


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக