வியாழன், 14 செப்டம்பர், 2017

கட்டணமே இல்லாமல் டிமேட் கணக்கு திறக்க எளிய வழி

பங்குச்சந்தையில் பங்குகள் வாங்குவதற்கு டிமேட் கணக்கு அவசியம் என்பது நமக்கு தெரிந்தது தான்.


ஆனால் சில நண்பர்கள் எம்மிடம் கேட்டு இருந்தார்கள்.



நாங்கள் ஐபிஒ, ம்யூச்சல் பண்ட் வாங்கும் போது தான் டிமேட் கணக்கை பயன்படுத்துகிறோம்.

ஆனால் அதற்கும் ஒவ்வொரு வருடந்தோறும் 500 ரூபாய் அளவு Annual Maintainance Charges என்று பிடித்து விடுகிறார்கள்.

இதனை தவிர்க்க வழி இருக்கிறதா? என்று கேட்டு இருந்தார்கள்.

அதற்கும் செபியின் விதி முறை படி வழிகள் இருக்கிறது. ஆனால் இது இழப்பு என்பதால் பொதுவாக டிமேட் சேவை தரும் நிறுவனங்களால் இது பெரிதாக விளம்பரப்படுத்தப் படுவதில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்பு செபி ஒரு BSDA என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தது.

இதன் முழு விரிவாக்கம் Basic Services Demat Account.

இதன்படி, வருடத்திற்கு 50,000 ரூபாய்க்கும் குறைவாக பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பராமரிப்பு கட்டணங்கள் என்று எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

அதாவது ஒவ்வொரு நாளின் முடிவில் அவர்களது முதலீடு 50,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

அடுத்த நிலையாக, 50,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடுகளை வைத்து இருந்தால் 100 ரூபாய் AMC கட்டணம் செலுத்தினால் போதும்.

ஒவ்வொரு வர்த்தகமும் எஸ்எம்எஸ் மூலம் பகிரப்படும். ஒவ்வொரு காலான்டிற்கும் ஸ்டேட்மென்ட் ஈமெயில் மூலம் பகிரப்படும். ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறை ஸ்டேட்மென்ட் தபால் மூலம் பகிரப்படும்.

இதற்கு கூடுதலாக இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும்.

அதே நேரத்தில் ஒருவர் பங்குச்சந்தையில் டிமேட் சேவை தரும் அனைத்து நிறுவனங்கள் முழுவதுமாக ஒரே ஒரு BSDA கணக்கு தான் வைத்து இருக்க முடியும். வேறு நிறுவனங்களில் ரெகுலர் டிமேட் கணக்கு வைத்து இருந்தால் மற்ற நிறுவனத்தில் BSDA கணக்கு திறக்க தடை எதுவுமில்லை.

சில நண்பர்கள் IPO விண்ணப்பிக்க மட்டும் டிமேட் கணக்கு பயன்படுத்துவார்கள். தற்போது ஒவ்வொரு வாரமும் இரண்டு ஐபிஒக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் 20 முதல் 30 சதவீதம் வரை குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிப்பது எளிது.

அவர்களுக்கு இந்த டிமேட் கணக்கு பெரிதும் உதவும்.

அடுத்து, பங்குச்சந்தை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு முதலீடுகளை ஆரம்பிக்கவும் இந்த டிமேட் கணக்கு செலவில்லாமல் உதவி செய்யும்.

அதே போல் தற்போது அரசு வழங்கும் Gold ETF பத்திரங்கள், ம்யூச்சல் பண்ட் வாங்குபவர்களும் இந்த டிமேட் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எமது தளம் வழியாக Angel Broking நிறுவனத்தின் டிமேட் கணக்குகள் திறக்கலாம் என்று அறிந்திருப்பீர்கள். அதிலும் BSDA முறையில் இந்த கணக்கினை திறந்து கொள்ளலாம்.

ஆதார் கார்டு வைத்து இருந்தால் OTP மூலம் எங்கிருந்தாலும் 4 நாட்களில் எம்மிடம் டிமேட் கணக்கு திறந்து கொள்ளலாம். பங்கு பரிந்துரைகள் இலவசமாக வழங்கப்படும். தேவைப்படுபவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

பார்க்க: Revmuthal.com தளத்தின் வழி Angel டிமேட் கணக்கு திறத்தல்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. நண்பருக்கு

    என்னிடம் ஏற்கனவே ஒரு டீமேட் கணக்கு உள்ளது. நான் இந்த BSDA account தொடங்க முடியுமா.

    பதிலளிநீக்கு
  2. ஐயா,
    மாதம் 10000 ம்யூச்வல் பண்ட்ல் முதலீடு செய்ய முடியுமா இந்த அக்கவுண்ட் மூலமாக?

    பதிலளிநீக்கு