புதன், 6 ஜூன், 2018

மருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்?

பங்குசந்தையில் முதலீடு செய்பவர்கள் பாதுகாப்பாக கருதுவது நுகர்வோர் மற்றும் மருத்துவ துறைகள் தான்.


ஏனென்றால் இவை இரண்டுமே எந்த வீழ்ச்சியிலும் அதன் வாடிக்கையாளர்கள் இந்த துறை பொருட்களை தவிர்ப்பதில்லை.



இதில் மருத்துவத்துறையை பார்த்தால் மூன்று வருடங்களுக்கு முன்னர் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

மருந்து விற்கும் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் ஒரு கியாரண்டியான ரிடர்ன் என்பது கிடைத்து வந்தது.

ஆனால் அண்மையில் நிலைமை அனைத்துமே மாறி விட்டது.

நமது சந்தையில் பட்டியிலிடப்பட்ட பல நிறுவனங்கள் அமெரிக்காவில் தான் அதிகம் வர்த்தகம் செய்கின்றன.

இந்த நிலையில் ஒபாமா அதிபராக இருந்த போது மருந்து பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சில திட்டங்களை கொண்டு வந்தார்.

Obama Healthcare திட்டத்தின் பகுதியாக Generic Medicines என்று சொல்லப்படும் பொது மருந்து வகைகளின் ராயல்டி முதல் சந்தை விலை வரை அனைத்துமே குறைக்கப்பட்டன.

ஆனால் இந்திய மருந்து நிறுவனங்கள் Specialized Medicine போன்றவற்றில் கண்டுபிடிப்பு உரிமங்களை (Patent) வாங்கி வைக்காததால் போட்டி விலை குறைப்பில் தங்களது லாப மார்ஜினை இழந்து விட்டன.

கிட்டத்தட்ட இந்திய ஐடி துறையின் வளர்ச்சி, வீழ்ச்சியுடன் இந்த மருந்து நிறுவனங்களும் ஒத்து போகின்றன.

இனியாவது இழந்ததை மீள பெற முடியும் என்றால் ஆராய்ச்சிக்கு அதிக அளவு செலவு செய்யப்படாததால் தேவையான அளவு கண்டுபிடிப்பு உரிமங்களும் கையில் இல்லை.

அடுத்து உள்நாட்டு சந்தையை பார்த்தால்,

இந்திய அரசும் அதே மருந்து கட்டுப்பாட்டு கொள்கையை கொண்டு வந்துள்ளதால் மேலே சொன்ன அனைத்துமே இங்கும் நடந்து வருகிறது.

இதனால் இந்த மருந்து நிறுவனங்களை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை தான் தற்போது உள்ளது.



அடுத்து மாற்றாக, மருத்துவமனைகளில் முதலீடு செய்யலாம் என்றால்

அதிக சம்பளம் கொடுக்கும் டாக்டர்கள், மருத்துவமனை வசதிகள், ரியல் எஸ்டேட் முதலீடு/வாடகைகள் என்று அதிகப்படியான கட்டணத்தை வருபவர்களிடம் வசூலிக்க வேண்டியுள்ளது.

இதனால் மருத்துவமனையின் Occupancy Rate என்பதும் சொல்லுமளவு இல்லை.

இந்த நிலையில் போட்டியும் அதிகமாக இங்கும் லாப மார்ஜினும் வீழ்ந்துள்ளது.

Lupin 17000 கோடி வியாபாரம் செய்து 4500 கோடி லாபம் சம்பாதிக்கிறது என்றால் அப்போல்லோ ஆஸ்பத்திரி  3500 கோடி வியாபாரம் செய்து 225 கோடி லாபம் சம்பாதிக்கிறது.

Lupin நிறுவனத்தில் 25% என்ற அளவில் இருக்கும் மார்ஜின் அப்போல்லோவில் 6% அளவிலே உள்ளது.

மேல் சொன்ன இரண்டு பிரிவுகளும் தான் மருத்துவ துறை முதலீட்டில் பெருமளவு பங்கு வகிக்கின்றன.

அதனால் மருத்துவ துறையில் முதலீடு என்பதற்கு சில வழிகள் மட்டும் தான் எஞ்சி உள்ளன.

படங்களில் வருவது போன்று தற்போது மருத்துவர்கள் எதற்கும் பரிந்துரை செய்வது ரத்த டெஸ்ட் எடுப்பது, ஸ்கேன் எடுப்பது போன்றவை தான்.

அவைகள் தான் தற்போதும் ட்ரெண்டில் உள்ளன.

முன்பு ஓரிரு இடங்களில் அங்கும் இங்கும் இயங்கி வந்த இந்த நிறுவனங்கள் தற்போது பங்குசந்தையில் வரும் அளவு வளர்ந்துள்ளன.

அண்மையில் Thyocare, Dr.Lal Pathlabs போன்ற நிறுவனங்கள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் Thyocare நிறுவனம் 300 கோடி பிசினஸ் செய்து 118 கோடி லாபம் பார்த்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லாப மார்ஜின் என்பது 40% அளவு.

இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

ஆனாலும் இவ்வளவு மார்ஜின் இருக்கும் இடத்தை விரைவில் மற்றவர்கள் ஆக்கிரமிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இந்த பிரிவில் நிபுணத்துவம் என்பது பெரிதளவு தேவையில்லை.

அதனால் இதே மார்ஜின் எதிர்காலத்தில் கிடைக்குமா? என்பது ரிஸ்கான விடயம்.

இதற்கு மாற்றாக நிபுனத்துவம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள் செய்யும் பிரிவு.

இந்த பிரிவில் GE, Siemens, Philips போன்ற நிறுவனங்கள் தனி ஆவர்த்தனம் செய்கின்றன. அதிலும் பெரும்பாலானவை வெளிநாட்டு நிறுவனங்களாக இருப்பதால் நமக்கு முதலீடு செய்ய வாய்ப்புகள் குறைவே.

இறுதியாக மக்களுக்கு ஆங்கில மருந்து முறைகளை விட ஆயுர்வேத, ஹோமியோபதி போன்றவற்றில் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.

இவையும் multibaggers முறையில் ரிடர்ன் தர வல்லவை.

ஆனால் இதில் பல நிறுவனங்கள் பங்குசந்தைக்குள் வராமல் இருப்பதால் இனி ஐபிஒவிற்காக காத்திருந்து முதலீடு செய்யலாம்.

இறுதியாக,

வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் முடிந்தளவு மருத்துவத்துறை பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள்.

இல்லை என்றால் காலம் கனியும் வரை காத்திருந்து கூட முதலீடு செய்யலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக