புதன், 20 ஜூன், 2018

RITES IPOவை வாங்கலாமா?

இன்று முதல் RITES நிறுவனத்தின் IPO பங்குசந்தையில் விண்ணப்ப வடிவில் வருகிறது.


இதனை வாங்கலாமா? தவிர்க்கலாமா? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



RITES நிறுவனம் முழுக்க மத்திய அரசு சார்ந்த நிறுவனம். RITES என்பதன் விரிவாக்கம் Rail India Technical & Economic Services Ltd. என்பதாகும்.

இந்திய அரசின் ரயில்வே துறை தான் இந்த நிறுவனத்தின் ப்ரோமோடர் என்றும் சொல்லலாம்.

ரயில்வேயின் இரட்டை ரயில்பாதை போடுதல், ரயில் பாதை பராமரிப்பு, புதிய ரயில் பாதைகளை உருவாக்குதல், ரயில் மின் கட்டமைப்பு உருவாக்குதல்  போன்றன இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள்.


இது தவிர மெட்ரோ ரயில் தடங்கல் உருவாக்கும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கும் கன்சல்டன்சி சேவைகளையும் வழங்கி வருகிறது.

மேலும் வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

Indian Railways, NTPC, Public Works Department, DMRC, SAIL, Hindustan Petroleum, Airports Authority of India போன்ற அரசு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் கிளின்ட்கள்.

தனியார் நிறுவனங்களான  L&T Metro Rail, Cimmco, Snowmex Engineers போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக பார்த்தால் வருடத்திற்கு 15% அளவு வருமானம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் லாபம் 8% அளவு வருடத்திற்கு வளர்ந்துள்ளது.

அதிலும் கடந்த வருடம் லாபம் சராசரியை விட அதிகமாகவே வளர்ந்துள்ளது.

67% வருமானம் ரயில்வே தொடர்பான கன்சல்டன்சி வேலைகளிலும், 20% ஏற்றுமதி மூலமும் வருகிறது.

இன்னும் 4800 கோடி அளவு ஆர்டர்கள் கையில் இருக்கிறது. அதனால் வரும் வருடங்களில் இதனை விடவே அதிக வளர்ச்சி எதிர்பார்க்கலாம்.

ஒரு பங்கின் விலை 185 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பில் லாபத்தை பார்த்தால் P/E மதிப்பு 11க்கு அருகில் வருகிறது.

இது பங்குசந்தையில் இருக்கும் Engineers India போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் கீழே தான் உள்ளது.

அதனால் பங்கு விலை மலிவு என்றே சொல்லலாம்.

அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இந்திய ரயில்வே ஒரு திருப்புமுனை வளர்ச்சியை எதிர்பார்க்கும் என்ற சூழ்நிலையில் இந்த நிறுவனமும் அதிக பலனை பெற வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

ஆனால் அண்மைய காலமாக அரசு நிறுவன பங்கு வெளியீடுகள் பெரிதளவு வரவேற்பு பெறாததால் குறுகிய கால லாபத்தை கணிக்க முடியவில்லை.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக