செவ்வாய், 26 ஜூன், 2018

Varroc Engineering IPOவை வாங்கலாமா?

என்ன தான் சந்தை அடி வாங்கினாலும் புதிய ஐபிஒக்கள் அரங்கேற்றம் நின்றபாடில்லை.


தற்போதைய சந்தை வீழ்ச்சி ஒரு தற்காலிகம் என்ற என்னமிருப்பதும் ஒரு காரணம்.நேற்று தான் Rajnish Wellness IPOவை பற்றி எழுதி இருந்தோம். இன்று அடுத்த ஐபிஒ.

இதுவும் ஒரு வகையில் பல புதிய நிறுவனங்களின் வியாபரத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் நமக்கு உதவும். அதனால் விவரமாகவே பார்ப்போம்.

இன்று Varroc Engineering என்ற ஒரு நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பிக்கும் பணி தொடங்கி விட்டது.


Varroc Engineering நிறுவனமானது ஆட்டோ நிறுவனங்களுக்கு தேவையான LED லைட் போன்ற ஒளி சாதனங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

90களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் பாலிமர் வியாபாரம் தான் செய்து வந்தது.

அதன் பிறகு நிலை மாறி ஆட்டோ நிறுவனங்களுக்கு உதிரி பொருட்கள் தயாரிக்கும் நிலையளவு வளர்ந்துள்ளார்கள். உலக அளவில் ஆறாவது இடம் என்றால் நல்ல வளர்ச்சி தான்.

இது தவிர, கையில் 14க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு காப்புரிமைகளையும் வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தின் கிளின்ட்கள் எல்லாம் கீழே உள்ள பெரிய நிறுவனத்தார் தான்.
Ford, Jaguar Land Rover, FCA, Groupe PSA, the VW Group, Bajaj, Royal Enfield, Yamaha, Suzuki, Honda, Hero, Piaggio and Harley Davidson

அதிலும் பஜாஜ் குழுமத்தில் இருந்து அதிகமாக 18%க்கும் மேற்பட்ட வருமானம் வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் 40% அளவு அதிகரித்தாலும், லாபம் 200% அளவு அதிகரித்து உள்ளது.

இது தவிர, நிறுவனத்தின் கடன் விகிதம் 0.3% என்ற விகிதத்திலே உள்ளது. இது மிகவும் குறைவானதே.

P/E மதிப்பினை ஒப்பிட்டால் 29க்கு அருகில் வருகிறது.

இதே துறையில் மற்ற நிறுவனங்களான Motherson Sumi, Bharat Forge, Endurance Tech போன்றவற்றின் P/E மதிப்பு 40க்கு அருகில் இருக்கும் சூழ்நிலையில் இந்த பங்கு சரியான விலையிலே வருகிறது.

கரடியின் பிடியில் இருக்கும் தற்போதைய சந்தையில் IPO உடனடி லாபம் சிறிதளவே கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் நீண்ட கால நோக்கில் Varroc Engineering நிறுவனத்தை நல்ல முதலீடாக கருதலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக